குணங்கள் விளக்கப்படுகின்றன
((* ) இக்குறியிடப்பட்ட அனைத்தும் தெலுங்கு மொழியில் உள்ளன. பின்னர் இவற்றையும் இங்கு தருவதற்கு முயற்ச்சிக்கிறோம்.)
சிலேடை (* ) தெளிவு (* ) சமதை (* )
இனிமை (* ) மென்மை (* ) பொருள்விளக்கம் (* ) ஔதாரியம் (* ) எழில் (* ) உயர்ச்சி (* ) ஓசம் (* ) நன்மொழியுடைமை (* ) இனியவை கூறல்(* ) வன்மை (* ) வித்தாரம்
(* ) சமாதி (* ) நுண்மை (* ) ஆழமுடைமை (* ) சுருக்கம் (* ) பாவிகம் (* ) நிறுத்தல் (* ) பிரவுடி (* ) இரீதி (* ) உத்தி (* ) கதி (* ) என்னும் இவை இருபத்து நான்கும் குணங்களாம்.
இவற்றுட் சில குற்றத்தைப் பரிகரிக்குமுமாக குணங்களாம். சில தாமே[1] காப்பியச் சிறப்பிற்கேதுவாகலான் குணங்களாம்.
இவற்றுள் தாமே “இனிமை மிகுதற்கேதுவாகுமவை குணங்களுண் மிகச் சிறந்தனவாம். குற்றத்தைப் பரிகரித்தற் கேதுவாகுமவைகளுக்குக் குணமாந்தன்மை யாவர்க்கும் ஒப்பமுடிந்ததின்று.
குற்றத்தை நீக்கியவழி குணமாந்தன்மையை விரும்புவர்க்கே மென்மை முதலாயின குணங்களாம்.
செவிக்குணவின்மையென்னுங் குற்றத்தை நீக்குதற்கு மென்மையும், இழிவழக்கையொழித்தற்கு எழிலும், பொருட்செறிவின்மையைப் போக்குதற்குப் பொருள் விளக்கமும். சொற்குறை சொன்மிகையென்னுமிவற்றை விலக்கற்கு நிறுத்தலும், தகுதியின்மையை நிராகரித்தற்கு உயர்ச்சியும், சந்தியின்மையை யொழித்தற்கு வன்மையும், ஏற்றமிழிவுறல் என்னுங்குற்றத்தையிரித்தற்கு இரீதியும், கிலிட்டத்தைக் கெடுத்தற்குத் தெளிவும், அமங்கலத்தை யழித்தற்கு உத்தியும், வழூவுச்சொற்புணர்த்தலை மறைத்தற்கு நன்மொழியுடைமையும், முறைமுறிவை மறுத்தற்குச் சமதையும், கொடுமையைக் கெடுத்தற்கு இனியவை கூறலுங் கொள்ளற்பாலனவாம். இங்ஙனம் நிகழ்ச்சிக்கேற்பச் சில, குற்றத்தை நீக்குமுகமாக குணங்களாம்.
இக்குணங்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்
சிலேடை
ஒன்றோடொன்று நன்கினைந்த சொல்
லுடைமை சிலேடையென்ப.
சொற்கள்[2] பலவியைந்து அவ்வியைபால் ஒரு சொல்லென விளங்குதல் சிலேடையாம்.
எவ்வாறெனில்:—
எல்லா அரசர்களின் முடிமணிக்கதிர்களால் விளக்கமுறு மிணையடியுடையாறும், யாவரானும் பாராட்டப்படும் வீரமுடையாரும், உலகினையோம்பற் குறக்கமொன்றிலாரும், உலப்பில் குணமாம் நிலவொளித்திரள் சூழ்வானவெளியும், ஒல்காச் செல்வமொருங்குடையாரும் ஆகிய இக்காகதி வீரருத்திரவேந்தரைத் துதித்தற்கு யாம், வல்லேம் அல்லேம்.
முதனூலில் இப்பொருளடங்கிய சுலோகத்தில் சொற்கள் பலவுளவாயினும் அச்சுலோகத்தைக் கூறுங்கால் அழகுறுமியைபால் ஒருமொழியென விளங்குதல் சிலேடையாம்.
தெளிவு (* )
வெளிப்படையான பொருடருஞ்
சொல்லுடைமை தெளிவென விளம்புவர்.
எவ்வாறெனில்:—
இப்பிரதாபருத்திரவேந்தனுடைய விழிகள், மலர்தரு தாமரை மலரென மனங்கவர் வனப்புடையவாகலின் இவன் திருவின்கேள்வனேயாவன்.
இங்கண் விரைவிற்[3] பொருடருஞ் சொற்கணிரம்பியமையால் இது தெளிவு ஆம்.
சமதை (* )
மாறுகோளின்றிக் கூறல்
சமதையென்பதாம்.
எவ்வாறெனில்:
கற்பகத்தரு மஞ்சரியின் நறுமணமுடையவும், அமிழ்தின் இனிமையை அவமதித்தற்குரியவும், ஆகாயகங்கையின் அலைகளை நிகர்வனவும் ஆகிய வீரருத்திரவேந்தரின் குணங்கள், உலகிற் பெரியார்க்குச் செவிக்குணவாகின்றன.
இங்கண் நான்கு அடிகளிலும் சமமாகக் கூறியுள்ளமையாற் சமதையாம்.
இனிமை (* )
சொற்றொடரில் நெடுந்தொகையின்றிச்
சொற்களமைவுறல் இனிமையென்றியம்புவர்.
எவ்வாறெனில்:—
காகதிவேந்தனுடைய திருப்புகழ், திசைமகளிரிடைகளில் வெண்பட்டியல்பினதும், நகிலங்களில் முத்தலங்கலின் வனப்பையுடையதும், சிரங்களிற் சாதிமலர்மாலையென்ன விளங்குவதுமாய் அமைகின்றது.
இத்தொடரைக் கூறுங்கால் நெடுந்தொடரின்மை விளங்குவதால் இது இனிமை.
மென்மை(* )
மெல்லெழுத்துக்கள் பெரிதும் உள்வழி
மென்மையென்று விளம்புவர்.
மென்மையென்பது அநுச்சுவாரங்களுடன்[4] மெல்லெழுத்துக்களான் யாத்தல்.
எவ்வாறெனில்:—
காகதிவேந்தரது நகர்க்கண், மகளிரது அளவிற் பெருமகிழ்ச்சியைப் பெருக்கும் முகமதியங்களாற் பகலிலும் நிலவு நிகழ்கின்றது.
(*
)
இங்கண் அநுச்சுவாரங்களுடன் மெல்லெழுத்துக்களான் யாத்தமை காண்க.
பொருள் விளக்கம்:— (* )
சொற்றொடர் நிறைவுற்று
அமைவுறல் பொருள் விளக்கம் என்ப.
எவ்வாறெனில்:—
எல்லையில் வீரத்தெழுச்சியையுடைய வீரருத்திரவேந்தன், நிலவுலகிற்குக் காவலனாயினானாகலின் இதுபொழுது, பாக்கியம் அந்நடுவுலகின் வயத்ததாயிற்று; அன்றேல் மூவுலகங்களுமே அத்தகைய நற்பேறுடையவாயின; ஏனெனில், விண்டுவின் அம்சமே காகதிக்குலத்திற்கண்கூடாயவதரித்து விரும்பியாங்கு வளர்தருகின்றது.
இங்கண் சொற்றொடர், பொருளை விளக்கிக் கூறலில் அவாய்[5] நிலையின்றி நிறைவுற்று நிற்றலான் இது பொருள் விளக்கம் ஆம்.
எழில் (* )
காப்பியத்தில் யாப்பின் எழிலுடைமை எழில்[6] என்ப.
எவ்வாறெனில்:—
வென்றிசேர் காகதிவீரருத்திர வேந்தனது போர்ச் செலவான் விளைந்த நிலப்பூழித்திரள் வானத்தில் மிக்க நிலமயக்கைச் செய்யுங்கால் ஆகாயகங்கை இடம்படு தடங்களையுடைய புவிக்கங்கையாயிற்று. மிக்க மறைந்தோடும் கௌதம நதி, பாதாளகங்கையாக வமைகின்றது.
ஔதாரியம் (* )
வல்லெழுத்துக்களான் யாத்தலைப்
பெரியார் ஔதாரியம் என்ப.
எவ்வாறெனில்:—
தெலுங்குப் படையாற் படைக்கப்பட்ட போர்க்களங்கள், யான்முன் யான்முன் என விரைந்து மிகுதியான விரைச்சிகளைப் புசித்து உதிரத்தை உடன்பருகுமவா மிகுந்தனவும், வலிமிக்க என்புக்களைக் கடித்தலான் விளையுங் கடகடவொலியாற் கொடியதிற்றிப் பற்களின் நுதியினையுடையவும், வேழங்களின் வழிந்தொழு மூனருவி நீர்ப்பெருக்கில் முழுகுந்திறலுடையவுமாகிய பேய்களைத் தாங்குவனவாய் அரசர்களை அச்சுறுத்துகின்றன.
உயர்ச்சி (* )
சிறப்புறு முரிய வேசேடணங்க
ளமைந்துழி உயர்ச்சி யென்ப.
எவ்வாறெனில்:—
உருத்திரவேந்தரின் படைகள், பிளறிடும்[7] கயங்கணிரம்பியவும், கனைக்குங் குதிரைகணிறைந்தனவும், ஒலிக்குந் தேரையுடையவும் சங்கனாதஞ் செய்யும் வீரர்களையுடையவுமாய்த் திகழ்கின்றன.
ஓசம் (* )
நெடுந்தொகையுடைமையை
ஓசம் என்ப.
எவ்வாறெனில்:—
வீரருத்திரவேந்தனைச் சார்ந்த பெரும்புலவரில்லப்பந்திகள், அடங்காத மதக்களிற்றுத் தானநீர்ப்பெருக்கு மணநசையான் மொய்க்கும் வண்டினமிழற்றும் பண்ணொலி நிரம்பிய முற்றமுடையவும், எல்லையிலோங்கிய செல்வப்பெருக்காலிணியவுமாய் நிலவுலகில் மிக்க மகிழ்கின்றன.
நன்மொழியுடைமை (* )
பெயர் வினையிவற்றின்[8] விற்பத்தி
யை நன்மொழியுடைமை யென்ப.
எவ்வாறெனில்:—
திருமகள் கேள்வன்[9] காகதிக்குலத்தில் உருத்திரவேந்தனாய் அவதரித்து திசைமண்டில முடிவுகாறும் பரவிய புகழுடையவும் சிறப்புமிகுந்தனவுமாகிய செல்வங்களான், நன்மக்களைப் பெற்ற குடிமக்களைப் புரத்தலான் மூவுலகிற்கொரு நலஞ்செயுமியல்பினனும் ஒப்பிலாவுயர் குணங்கணிறைந்தவனுமாய் பொல்லாரை யொறுத்தற்கே பூவுலகிற் பெருமைகொண்டிதுகாலை யுலவுகின்றான்.
இனியவைகூறல் (* )
முகமனுரை கூறுங்கால் விருப்பிற்குரி
ய இன்சொற்களைக் கூறுதல் இனியவை[10] கூறலாம்.
எவ்வாறெனில்:—
கண்ணோட்டம் திறலுடைமை அருளுடைமை மேன்மை ஆழமுடைமை ஆண்மை அறிவுடைமை பொருளுடைமை திருவுடைமை வள்ளன்மை தைரியம் புவிப்பொறை தாங்கும்தன்மை என்னும் இவையாவும் நின்பாலனவாகலின் திருவளர் காகதிவேந்தனே! நூறு பிரமகற்பங்கள்காறும் இந்நிலவுலகைப் பாலித்தல் வேண்டும்.
வன்மை (* )
வல்லெழுத்துக்களானாய யாப்பு, வன்மையாம்.[11]
எவ்வாறெனில்:—
முயற்சிமிக்க வீரருத்திரவேந்தனது கழியனைய வலமிக்க வாகுவின் கேளிகள், பகையுலகைக் கலக்கலாற் காண்டற்கரிய வெற்றிமுறைகளையுடையவும், அற்பச்சத்திரியர் பக்கத்தைக் கடிதலில் உயர்த்தி வீசிய வாட்படையுடையனவும் கெர்ச்சிக்குந் துர்ச்சனரின் செருக்கெனுஞ் சிலையைப் பிளக்கு மசனியனையவுமாய் நிலவுகின்றன.
சமாதி (* )
வேற்றுப் பண்பைப் பிறவழியேறிடல்
சமாதி ஆம்.
எவ்வாறெனில்:—
வீரருத்திரவேந்தனது விளக்கமிக்க மிகுபுகழ், பாற்கடல் பாற்சுகத்தை வினாவியும்[12] கயிலையங்கிரியுடன் அன்பொடு பழகியும், தெய்வ நதியினை அடிதொறும் முகமனுறையினால் இன்புறுத்தியும், மதியத்தின் முன்னிலையில் அதனை யெள்ளி நகைத்தும், பிரமனூர்தியாம் அன்னப் பறவைபால் அருள்கொடு நல்வரவு கூறியும் இம்மூவுலகிலும் சிறப்புற்றுத் திகழ்கின்றது.
வித்தாரம் (* )
கூறியபொருளைப் பூரணப்படுத்துங்
கால் விரித்துக் கூறல் வித்தாரம் ஆம்.
எவ்வாறெனில்:—
காகதிவேந்தருடைய குணங்களை அடிதொறும் துதித்தற்கும் பார்த்தற்கும் செவியுறற்கும் மிகப் பாராட்டுதற்கும் மூவுலகில் அரவினத்திறைவனொருவனே வலியனாவன்; ஏனெனில்[13], இவ்விரலோனுடைய முகங்கள் ஆயிரம், கண்களும் செவிகளும் ஈராயிரம் வியந்தசைத்தற்குச் சிரங்களும் ஆயிரம் ஆம்.
நிறுத்தல் (* )
பொருளளவைக்கேற்ற பெற்றி[14]
சொல்லுடைமை நிறுத்தல் ஆம்.
எவ்வாறெனில்:—
மாதிரமகளிர் காகதிவேந்தரின் குணங்களைக் காதணியாக் கொண்டு அவரது மிகுபுகழாகுஞ் சந்தனத்தைப் பூசிக்கொள்ளுகின்றனர்.
ஆழமுடைமை (* )
ஒலிப்பொருளுடைமையை ஆழ
முடைமை யென்ப.
எவ்வாறெனில்:—
காகதிக்குலத்தவராகிய வுருத்திர தேவருடைய வாட்படையில் நஞ்சும் கீர்த்தியில் கங்கையும் பகைபால் திசையாடையும் முகத்தில் மதியமும் காணப்படுகின்றன.
இங்கண் சிவபிரானுடைய கழுத்தில் நஞ்சும் முடியில் கங்கையும் இடையில் திசையாடையும் சிரத்தில் மதியமும் திகழும் என்னும் பொருள் ஒலிக்கின்றது.
சுருக்கம் (* )
பொருளைச் சுருங்கச் சொல்லி
விளங்க வைத்தல் சுருக்கம் ஆம்.
எவ்வாறெனில்:—
காகதிக்குலமொன்றுள்ளது; அதிற் பல வேந்தர் பிறந்துளார்; அவரது நல்லூழின் பரிணாமமே இவ்வீரருத்திர வேந்தன் ஆவான்.
இங்கண் மிக்க விரித்துக் கூறற்குரிய பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தலான் இது சுருக்கம் ஆம்.
நுண்மை (* )
உள்ளடங்கிய நிலையிற் பொருளைத்
தெளிவாகக் கூறுந்தன்மையமைவுறல்
நுண்மையென்று நுவலப்படும்.
எவ்வாறெனில்:—
(* ) யென்னும் அடையுருபோடியைந்த (* ) என்னும் வினைப்பகுதிகள், காகதிவேந்தன்பால் எஞ்ஞான்றும் செய்வினைப் பொருளிலும் பிறர்பால் செயப்பாட்டு[15] வினைப் பொருளிலும் அமைகின்றன.
இங்கண், யாவர்க்குந் தலைவனாகின்றான் (*[16] )
தாழ்த்துகின்றான் (* ) அவமதிக்கின்றான் (* ) என்னும் இப்பொருள் உள்ளடங்கிய நிலையிற் கூறியமையான் இது நுண்மை ஆம்.
பிரவுடி (* )
சொன்முறையின் பரிபாகமே பிரவுடி
யென்ப காப்பிய முணர்வார்.
எவ்வாறெனில்:—
திருவளர் வீரவுருத்திரவேந்தன், கமலத்[17]தோற்கிரண்டாமவனும், பிறைமுடிக் கடவுட்கு ஆவிருத்தியும், திருமாலுக்கு ஆமிரேடிதமும் மேருவரைக்கு எதிருருவும் சந்திரற்குச் சாணைபிடித்த வடிவும், கன்னன் முதலியோர்க்கு மறுபிறவியும் கற்பதருவின் எல்லாவுடைமையும் காமதேநுவின் வெளிப்படு தோற்றமும் ஆவன் என்று கவிவாணர் கருதுகின்றனர்.
உத்தி (* )
சிறப்புறுங்கூற்றைக் கவிஞர்
உத்தியென்றுரைப்பர்.
எவ்வாறெனில்:—
மனக்கினிய நல்லொழுக்கமுடைய வேந்தனாகிய[18] உனது கமலாசத்தியைக் கண்டுணர்ந்தேன். நீ ஒளியோனாயினும் அத்தகைய குவலயத்திருவையும் அணிப்படுத்துகின்றாய்.
இரீதி (ரீதி)
தொடக்கத்தைக் கடவாது நிருவகித்தல்
இரீதி யென்ப.
எவ்வாறெனில்:—
அரசன் அறுகுணங்களை[19] யெய்துகின்றான்; அறுபகைகளை யவமதிக்கின்றான்; அறுவகைச் சாத்திரங்களை யறிகின்றான்; அறுபடைகளை நோக்குகின்றான்.
பாவிகம் (* )
கருத்தியைந்த சொற்றொடரமைப்பு
பாவிகம்[20] என்று கூறப்படும்.
எவ்வாறெனில்:—
சாமீ! அப்பனே! குலமணியே! வீரவுருத்திரனே! உலகிற்கொருதலைவ! இந்தயான், மகனாகிய வுன்னால் மகப்பேறெய்தினோரது மாட்சி மிகுந்துளேன்.
இங்கண் அன்பு வடிவாகிய கருத்தின் வயத்தால் சாமீ அப்பனேயென்று சொற்றொடர் அமைவுற்றது.
கதி (* )
ஓசையினுடைய ஆரோக அவரோகங்
களில் இனியதாதல் கதியென்பதாம்.
எவ்வாறெனில்:—
ஒப்பற்றனவும் எல்லையற்றனவும் பகலவன் கதிர்களென்னப் பெருமிதமெய்தி விளங்குவனவும் ஆகிய காகதிவேந்தனுடைய தேசுகளான் மூவுலகும் விளங்குங்கால் பகையரசருடைய மனங்கள் துன்பமென்னு மெரிதழற் பிழம்பின் சேர்க்கையை யெய்தியிருப்பினும் அவற்றில் எல்லாவிருளும் எஞ்ஞான்று மொருசேரவிருக்கின்றன.
இங்கண் முதனூலிற் கூறியுள்ள சுலோகத்தில் முன்னிரண்டடிகளிற் பெரிதும் நெட்டுழுத்துக்கள் விரவியிருத்தலான் ஓசையின் ஆரோகம் ஆம். பின்னிரண்டடிகளில் அவரோகம்[21] ஆம்.
இக்குணங்கள்[22], பொருளைப்பற்றியும் நிகழுமென்பர் ஒருசாராசிரியர். முன்னையாசிரியரின்[23] கொள்கையால் குணங்கள் சொல்லியைபைப் பற்றியதேயாம்.
அங்ஙனமே அலங்கார சருவசுவத்திலுங் கூறப்பட்டுள்ளது:—
சொல்லியைபின் தன்மையானும், சொற்
பொருளின் தன்மையானும், குணம் அலங்கா
ரம் என்னுமிவை நிலைபெறுவனவாம்” என்று.
இம்முறையே[24] பற்றி குணம் அலங்காரம் இவற்றின் வடிவின் வேறுபாடு கூறப்பட்டுள்ளது. இன்றேல்[25], இலக்கண வேறுபாடு அறிதற்கரிதாகலான்.
காப்பியத்தை யணிப்படுத்தலே குணம் அணி யிவற்றின் இலக்கணம் ஆம்.
அங்ஙனமே உருத்திரப்பட்டரும் கூறியுள்ளார்.
“காப்பியவனப்பிற்கேதுவாகுமது அலங்
காரமென்று கூறப்படும். குணமும் அத்த
கைத்தென அறியற்பாலது. குற்றம்
அவற்றிற்குமறுதலையாம்”, என்று.
அதனால் குணங்கள் சொல்லியைபைப்பற்றியதென்பதே தக்கதொன்றாம்.[26]
வித்யாநாதனியற்றிய “பிரதாபருத்
திரன் புகழணி” என்னும் அ
ணியிலக்கணத்தில்
குணவியல் முற்றிற்று.
[1] குற்றத்தை நீக்குதற்கு நிமித்தமாகாது, காப்பியச் சிறப்பிற்கே நிமித்தமாகும் என்பான் தாமேயென்னுந் தேற்றத்தால் விதந்து கூறினான் என்க.
[2] “சொற்கள் பலவாயினும் அவற்றினியைபு புலப்படாவண்ணம் ஒரு சொல்லென விளக்கமுற்றுழி சிலேடையென்னுஞ் சீரியகுணமாம்” என்று வாமனர் கூறுப.
[3] சேய்மைத்தாகிய பொருளையுணர்த்தும் கிலிட்டமென்னுங் குற்றத்தை, தெளிவென்னுமிக்குணம் பரிகரிக்குமென்பான் விரைவிற் பொருள்தரும் என்றான் என்க.
[4] அநுச்சுவாரம் — உயிரின் பின்வரும் மகாரவிகாரமாகிய புள்ளி; இது வடமொழியின் உயிர் வருக்கத்துப்பதினான்காம் எழுத்து.
[5] அவாய் நிலையின்றி நிறைவுற்று நிற்றலான் என்றதனால், வினைச் சொல்லின்றியவாய் நிலையாய் நிறைவுறாத உடலின்மை முதலிய குற்றங்களுக்கு மறுதலைக் காட்டுக் கூறப்பட்டதாம். “பொருட் செறிவின்மை யென்னும் குற்றத்தை மறுத்தற்குப் பொருள் விளக்கம் கொள்ளற்பாலது” என்னு முன் கூற்றுக்கிது முரணின்று; பொருட்செறிவின்மை பற்றிய இலக்கணவமைதியால் உடலின்மை முதலிய அக்குற்றங்களுக்கும் பொருட்செறிவின்மையுண்மையான். “நிகழ்ச்சிக்கேற்ற பயனில் பொருளுடைமை பொருட்செறிவின்மை” என்னும் இலக்கணமுடைய குற்றத்திற்கோ எனில் அவாய் நிலையின்றி நிறைவுற்று, இப்பொருள் விளக்கத்தின் வேறுபடாமையின் அதற்கிது மறுதலைக்காட்டின்றென்பது கண்டுணரற்பாலது.
[6] எழில் — சொற்கட்டின் வனப்பு எழில் என்பதாம். அத்தகைய எழில் இல்வழி பழமையான ஓவியம்போல காப்பியம் விளக்கமின்றியிருக்கும். அங்கனமே பெரியாரும் “சொற்கட்டின் விளக்கத்தை எழிலெனும் குணமாக குணமுணர்வார் கூறுவர். அத்தகைய எழிலின்றியமையும் கவியின் கூற்று, பழைய ஓவிய நிலையதாம்” என்று.
[7] பிளிறிடும் முதலிய விசேடணங்கள் கயம் முதலியவற்றிற்கே பொருந்துவனவாம் இதனால் விசேடணங்களை மாறுபடக் கூறிய வழி நிகழும் பொருத்தமின்மையென்னுங்க் குற்றம் பரிகரிக்கப்பட்டதாம்.
[8] விற்பத்தி — சொற்பொருளினறிவிற்குரியதாய் அவற்றை யிலக்கணவாயிலாகத் தூய்மைப் படுத்துஞ் செயல் ஆம்.
[9] முதனூலிற் கூறியுள்ள சுலோகத்தில் (*
) என்னுமிவை இலக்கண அமைதியிற் சிறந்து வனப்புறுஞ் சொற்களாம்.
நன்மொழியுடைமையென்னுமிக்குணம் வழூவுச்சொற் புணர்த்தலென்னுங் குற்றத்தை மறுத்தற்காமெனக் கூறல் தக்கதன்று. குணத்துளடங்காத வழூவுச் சொல்லின்மை யளவையில் இக்குற்றம் நீங்குமாகலான். இங்கண் அறிஞர் யாவரும் அகமகிழ்தற்குரிய நன்மொழிகளை வழங்கியிருத்தலாற் காப்பியவனப்பிற்குரிய நிமித்தமுண்மை பற்றி இதற்கே சிறப்புறு குணத்தன்மையுண்டென்பது பெற்றாம்.
[10] இது, கொடுஞ்சொற்கூறல் வடிவாகிய கொடுமைக்கு மறுதலையாம்.
[11] வன்மை — இது புணர்ச்சியின்மை யென்னுங் குற்றத்திற்கு மறுதலையாம்.
[12] சுகத்தை வினாதல் முதலிய பண்புகள் சேதன குணங்களாக அவற்றை அசேதனமாகிய மிகுபுகழ்பால் ஏறிடலான் இது சமாதியாம்
[13] துதித்தலாதிய செயல்களில் ஆதிசேடனொருவனே திறமை வாய்ந்தவன் எனப் பூர்த்தி செய்தற்கு நிமித்தம் கூறுவான் ஏனெனில் என்னும் தொடக்கத்தான் என்க.
[14] ஏற்றபெற்றி — இதனால் குறித்த பொருளை வெளியிடற்குரிய சொற்களை யேற்றத்தாழ்வின்றி நிறுத்தமைத்தல் நிறுத்தல் ஆம்.
[15] செயப்பாட்டுவினை — (* ) முறையே அகப்படுத்தப்படுகின்றான் தாழ்த்தப்படுகின்றான், அவமதிக்கப்படுகின்றான், என்னும் இவையாம்.
[16] (* ) என்னுமிது முதலிய மூன்றும் செய்வினைகளாம்.
[17] இங்கட் கூறியுள்ள இரண்டாமவன் ஆவிருத்தி ஆமிரேடிதம் எதிருரு சாணை பிடித்த வடிவு மறுபிறவி எல்லாவுடமை வெளிப்படு தோற்றம் என்னும் இவையாவும் ஒப்புப்பொருளில் வழங்கப்பட்டுள்ளன; பிரமன் முதலியோரது ஒப்புடைமையை வீரருத்திரன்பால் சொன்முறையின் பரிபாக விசேடத்தாலேறிட்டிருத்தலான் இது பிரவுடியாம். ஆவிருத்தி — மாறிப்பிறத்தல். ஆமிரேடிதம் — கூறியது கூறல்.
[18] வேந்தன் — இங்கண் அரசனையும் சந்திரனையும் உணர்த்தும். கமலாசத்தி — இது கமலையின்பால் ஆசத்தி — கமலங்கள்பால் ஆசத்தியென விரிந்து, திருமகள்பாற் பற்றையும் தாமரைப்பற்றையுமுணர்த்தும். ஒளியோன் ஈண்டு சூரியனையும் விளக்கமிக்க வேந்தனையுமுணர்த்தும். குவலயம் — இது குவளை மலரையும் நிலமகளையுமுணர்த்தும். ஒளியோனாயினும் என்புழி உம்மை முரணை விளைவிக்கும்; அத்தகைய முரண் இங்கட்போதரும் நிலமகளென்னும் உரியபொருளான் அழிவுறுமாகலான் இது முரண் விளைந்துழிவணியாம்; இதனை வடநூலார், (* ) என்ப.
[19] அறுகுணங்கள் — சந்தி — விக்கிரகம் முதலியன; அறுபகை — காமம் வெகுளி முதலியன; ஆறு சாத்திரங்கள் ஆன்மஞ்ஞானத்திற்குரிய வேதாந்த சாத்திரம் முதலியன. அறுபடை, மௌலம் ஆடவிகம் முதலியன.
[20] பாவிகம் — பாவம் (* ) கருத்து; அக்கருத்தினியைபுடையது பாவிகம் ஆம். இங்கட் கூறியுள்ள எடுத்துக்காட்டு, மகனுடைய குணங்களைக் கண்டு பெருமகிழ்வெய்திய தந்தை, அம்மகனை நோக்கிக் கூறியதாகும்.
[21] குறில் மிக்க விரவியிருத்தலான் அவரோகம் என்பது, ஒழிபனவையாற் போதரும். இதனால் நெடில் விரவியிருத்தல் ஆரோகம் என்பதும் குறில் விரவியிருத்தல் அவரோகம் என்பதும் பெற்றாம்.
[22] இக்குணங்கள் “ஓசம் தெளவு முதலிய இக்குணங்கள், பொருளைப்பற்றிய குணங்களாம்” என்று வாமனர் கூறுப. ஒருசாராசிரியர் என்றது வாமனர் முதலினோரை.
[23] முன்னையாசிரியர் — உற்படராதிய ஆசிரியர் கருத்தைப் பின்பற்றி, அலங்கார சருவசுவத்திலுங் கூறப்பட்டுள்ளதென்று கூறிய முதனூலாசிரியர் தனது கொள்கையை வெளிப்படுத்தினாரென்பது கருத்து. சொல்லியைபைப் பற்றியதேயாம் என்னுந் தேற்றத்தால் மொழிபலவியைந்துழி யொருமொழியென்னத் தோற்றமெய்தலை யிலக்கணமாகவுடைய சிலேடையாதிய குணங்கட்குப் பொருளைப் பற்றி நிகழுந்தன்மையின்றென்பது புலப்படுத்தவாறாம்.
[24] இம்முறை — சொல்லியைபு, சொற்பொருள், என்னுமிவற்றின் வடிவாகிய பற்றுக்கோட்டின் பேத முறையானே என்பது கருத்து.
[25] இன்றேல் — பற்றுக்கோட்டின் வேறுபாடின்றேல் என்பதாம். இலக்கண வேறுபாடு — குணம் அணி யிவற்றின் இலக்கண வேறுபாடென்பது உணரற்பாலது. அங்ஙனமாயின் “காப்பியத்தை வனப்புறச் செய்வன பண்புகளாகிய குணங்களாம்; அவ்வனப்பின் மிகைக்கு ஏதுக்களோவெனில் அலங்காரங்களாம்” என்று வாமனர் அவ்விலக்கண வேறுபாட்டினைக் கூறியிருத்தல் எங்ஙனம் பொருந்துமென்று கூறுமாலெனில், அங்ஙனஞ் சாதித்தலடாது; அத்தகைய வேறுபாடு ஒவ்வாதாகலின். இஃதன்றே அவ்விலக்கணத்தினுட்கிடை; காப்பியத்திற்கு ஆன்மா இரீதியாம்; அவ்விரீதியும், குணமிக்க சொல்லமைப்பு ஆம்; அச்சொல்லமைப்பும், வைதர்ப்பி முதலிய வேறுபாட்டினான் முத்திறத்து; அவற்றுள், எல்லாக்குணங்களும் நிரம்பியது வைதர்ப்பி இரீதியாம். சில குணங்கள் அமைந்தன கௌடியும் பாஞ்சாலியும் ஆம். அங்கண் குணங்கள் யாவும் ஒருங்கமைந்து அவை காப்பிய வனப்பிற்கேதுவாகுமெனில், கௌடிபாஞ்சாலியென்னுமிவற்றில் அவ்வியாத்தியாம். சில குணங்கள் காப்பிய வனப்பிற்கேதுவாகுமெனில் மலை நெருப்புடைத்து; புகையுடைமையான் என்னுமிவை முதலிய தொடர்கள் சாத்திர நூற்களுக்குரியவாய் காப்பியத்தன்மையினீங்கியவாயினும் அவற்றில் ஓசம் தெளிவு முதலிய குணங்கள் நிகழுமாகலின் இங்கண் அதிவியாத்தியும் வினையுமாகலான் அவ்வாமனரது மதத்தில் குணங்களுக்குக் காப்பியத்தை வனப்புறுத்துந்தன்மையின்றென்பது புலனாம்.
[26] தக்கதொன்றாம் — இஃது உற்படர் முதலினோரது மதத்தைப் பின்பற்றி, சிலேடை முதலியவற்றிற்கு இனிமையுள்ளடங்காமையைக் கொண்டு கூறியது. பாமகர் முதலினோரது மதத்தால் உள்ளடங்குமாகலின், சிலேடை முதலியன சுவைப்பண்புகளாம். அலங்காரங்களோ சொற்பொருளின் பண்புகளாம் என்னுமிதனால் இலக்கண வேறுபாடு உண்டென்பது உண்மைக்கருத்து ஆம். அதனாலன்றே இவ்வாசிரியரும் காப்பியவியலிற் “சிலேடை முதலிய குணங்கள்” என்று கூறியுள்ளார்.