எல்லாப் பிரபந்தங்கட்கும் உயிரெனப்பட்ட சுவையின் இலக்கணம் விளக்கப்படுகின்றது.
விபாவம் அநுபாவம் சாத்துவிகம் வியபிசாரி என்னுமிவை கருவியாக, அக்கருவியால் நுகரப்படும் ஸ்தாயீபாவம் சுவையென்பதாம்[1].
1
“விபாவம் அநுபாவம் வியபிசாரியென்னு மிவற்றினியைபாற் சுவைத் தோற்றம் ஆம்” என்பது பரத சூத்திரம்.
ஸ்தாயி பாவங்களுக்கு மகளிர் முதலிய ஆலம்பன காரணங்களோடும், உய்யானம் முதலிய வுத்தீபன காரணங்களோடும், கடைக்கணித்தன் முதலிய காரியங்களாகிய அநுபாவங்களோடும், நிருவேதம் முதலிய சககாரிகளாகிய வியபிசாரி பாவங்களோடும், முறையே பிறத்தல் பிறப்பித்தல், தோன்றல் தோற்றுவித்தல், வளர்தல் வளர்த்தல், என்னும் இயைபு நேர்ந்துழி சுவை முறையே உற்பத்தியையும் தோற்றப்படுதலையும் வளர்ச்சியையும் எய்துகின்றது. அங்ஙனமே, ஆலம்பனவுத்தீபன விபாவங்களால் இரதி முதலிய பாவங்கள், ஆக்கப்பட்டு, காரியமாகிய அநுபாவங்களாற் றோற்றமெய்தி, வியபிசாரிபாவங்களாற் பெருக்கு றீ இச்சிறப்பு வகையால் இராமன் முதலிய அநுகாரியர்பாலும், தம்மை யவ்வநு காரியராக அநுசந்தானஞ் செய்தலான் நடர்பாலும், சுவையாகத் தோற்றமெய்துவனவாம். அரவு இல்வழியும் அரவெனக்கண்ட கயிற்றின் அச்சம் விளைந்தாங்கு, சீதையைப் பற்றிய காதல் வடிவாய இராமனது இரதி, நடர்பால் இல்வழியும் அவர்மாட்டு இருப்பதே போலப் புலனாகின்றது; என்றதனால் வியஞ்சனையால் அமையும் இரதியின் விளக்கமே சுவைத்தோற்றம் எனப் பட்டலர் உல்லடர் முதலியவாசிரியர் கூறுவர்; இதனால் இவ்வாசிரியர் உற்பத்திவாதிகளாவர்.
அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.
விபாவம் அநுபாவம் சாத்துவிகம் வியபிசாரிபாவம் என்னுமிவற்றான் இனிய[2] நிலையெய்தும் ஸ்தாயீபாவம், சுவையெனப்படும்” என்று.
2
“இராமனே இவன்” “இவனே யிராமன்” என்றும், எதிர்காலத்தில் “இவன் இராமனல்லன்” எனத் தடைப்படற்குரிய நிலையில் “இராமன் இவன்” என்றும் “இவன் இராமனோ அல்லனோ” என்றும் “இராமனையொத்தவன்” என்றும் மெய்யுணர்வு பொய்யுணர்வு ஐயவுணர்வு ஒப்புணர்வு என்னுமிவற்றின் வேறுபட்ட ஓவியத்துரக நியாயத்தால் “இராமன் இவன்” என்னும் உணர்ச்சியாற் கொள்ளற்பாலனாகிய நடன்பால்,
“என்னுடைய வுறுப்புகளுக்கு அமுதச்சுவையின் கலவையும், கண்களுக்குக் கருப்பூரத்தானியன்றமை தீட்டுங்கருவியும், மனத்திற்கு உருவெடுத்த விருப்ப வனப்பமும் ஆகிய அந்த இந்த உயிர்க்காதலி, கண்களுக்குப் புலனாயினள்”.
“யானும், ஈண்டுத் தெய்வவயத்தால் உழிதருவிழியுடையவளிற் பிரிந்துளேன்; இடையறா தலைவுறுங்காருடைக் காலமும் வந்தெய்தியது”
என்னும் இவை முதலிய காப்பியங்களின் இடையறா நினைவின் ஆற்றலானும் பயிறல் பயிற்றல் என்னுமிவற்றான் செயலை முற்றுற வெளிப்படுத்தும் நடனாலேயே வெளிப்படுத்தப்பட்ட காரிய காரண சககாரிகள், கிருத்திரிமங்களாயினும் அச்சொற்களாற் கூறப்படாமல் விபாவம் முதலிய சொற்களான் வழங்கப்படுமவற்றுடன், தோன்றல் தோற்றுவித்தல் என்னுமியைபு பற்றி அநுமிக்கப்படுவனவாயினும்,
சுவைக்குறிப்பு
பொருள்வனப்பின் ஆற்றலாற் சுவைத்தற்குரிய நிலைமை நிமித்தமாக அநுமிக்கப்படும் பிறவற்றின் வேறுபட்டனவாய் ஸ்தாயியாந்தன்மைகொடு தோன்றும் இரதி முதலிய பாவங்கள் அந்நடன்பால் இன்றெனினும், அவையினரின் அறிவால் நுகரப்படுமவை சுவையாம். எவ்வாறெனில், பனிபரவுறுமோரிடத்திற் புகையின் றெனினும், அதன் றோற்றத்தாற் புகையகலா நெருப்பை யநுமித்தல் போல, இவ்விபாவம் முதலியன என்னைச் சார்ந்தனவே, என்று நடனாலேயே விளக்கப்படுவனவாய் அவன்பால் அவை இன்றெனினும், அவற்றால் அவையகலாவிரதி, அநுமிக்கப்படுகின்றது.
அநுமான வடிவம் வருமாறு:-
“இவ்விராமன், சீதையைப் பற்றிய காதலையுடையன்; சீதையாதிய விபாவ முதலியவற்றின் இயைபுடைமையான்; எது இங்ஙனம் இன்றோ; அஃது அங்ஙனமன்று; எங்ஙனம் யானோ?” என்று.
இரதியின் கண்கூடாய தோற்றமே இன்புறுத்துமன்றி, அநுமானம் இன்புறுத்தாதெனக் கூறுமாலெனில்; அற்றன்று. இரதி, அநுமிக்கப்படுவதாயினும், தன் வனப்பின் ஆற்றலான் சுவைத்தற்குரிய நிலைமை நிமித்தமாக அஃது அநுமிக்கப்படும் பிறவற்றின் வேறுபட்டதாகலான். அநுமிதி கணப்பொழுதிருக்குந் தன்மைத்தாகலின் சுவைக்கும் அத்தன்மை நிகழுமாலெனில், அற்றன்று; அநுமான விருப்பங்காரணமாக அநுமிதியில் சாத்தியசித்திக்குத் தடையின்மையான். அத்தகைய வநுமான விருப்பிற்காதாரமும், அவையினரையகலாது பற்றி நிற்கும் வாதனையே யாமெனக் கற்பிக்கப்படுகின்றது, என்று சங்குகர் முதலியவாசிரியர் கூறுப. இதனால் இவ்வாசிரியர் அநுமானவாதிகளாவர்.
3
காப்பியத்திற்கு அபிதைச் செயலென்ன, காப்பிய நாடகம் இவற்றிற்குப் பாவுகச்செயல் போசகச்செயல் என்னும் இரு செயல்கள் உள்ளன. காப்பியப் பொருளின் உணர்ச்சிக்குப் பின்னரே யவற்றுண் முதலாகிய பாவுகச் செயலான் விபாவமாதி யவற்றின் வடிவாகிய சீதையாதியவும் இராமனைச் சார்ந்த இரதியும் சீதையாந்தன்மை இராமனாந்தன்மை யென்னுமிவற்றின் இயைபு பற்றிய கூறுகளை நீக்கிப் பொதுவகையாக, மகளிர்த்தன்மையும் இரதித்தன்மையுமாம் அளவினானே நிகழ்த்தப்படுகின்றன; பொதுவாயமைந்த விபாவாதிகளாற்றுணை வலியுடைய போசகச் செயலான் இரதி நுகரப்படுகின்றது; என்று சுவை நுகர்ச்சியே சுவைத் தோற்றமாம்; எனப் பட்ட நாயகவாசிரியர் கூறுப. இதனால் இவ்வாசிரியர் நுகர்ச்சி வாதியாவார்.
4
5
காப்பியத்திலும் நாடகத்திலும், கவியினாலும் நடனாலும், விபாவம் முதலியன வெளிப்படுக்கப் பட்டிருக்குங்கால், துஷியந்தன் முதலியோர்பால் சகுந்தலை முதலியோரைப்பற்றிய இரதி, வியஞ்சனைச் செயலாற் கொள்ளற்பாலதாக, பின்னர், அறிவுடைத் தன்மையான் விளக்கமிக்க பாவனை விசேடமாகிய குற்றத்தின் மிகையாற்று ஷியந்தனாந்தன்மை கற்பிக்கப்பட, அதனாற் கவர்படுந் தனது ஆன்மாவில், அஞ்ஞானத்தான் மறைவுற்ற சிப்பியில் இரசதம்போல விளைந்தனவும் கூறற்கரியவுமாகிய, அவ்வண்ணமே விளங்குஞ் சகுந்தனை முதலியோரைப் பற்றிய இரதி முதலியனவே சுவையாம், என்று நவீனர் கூறுப.
பாவம்[3] நிலைபெறுதலாவது ஒத்த தன்மையது (ஸஜாதீய) பிறதன்மையது (விஜாதீய) என்னுமிவற்றாற் கேடுறாது நுகர்ச்சி[4] நிறைவுறுங்காறும் நிலைத்திருத்தல்.
அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.
“ஒத்த தன்மையது பிறதன்மையது என்
னுமிவற்றாற் கேடுறா வடிவுடையதாய்ச்சு
வை நிலைப்படுமளவும் இருப்பது ஸ்தா
யீபாவம்” என்று கூறப்படும்.
உவகை[5] நகை அழுகை வெகுளி பெருமிதம் அச்சம் இளிவரல் மருட்கை சமநிலை யென்னுமிவை முன்னையாசிரியர் கூறிய சுவைகளாம். (க)
இவற்றின் ஸ்தாயீபாவங்கள்:-
இரதி சிரிப்பு துன்பம் சினம் உற்சாகம் பயம் இளிவு வியப்பு சமம் என்னுமிவ்வொன்பதும் முறையே உவகை முதலியவற்றிற்கு ஸ்தாயீபாவங்களாம். (உ)
விபாவம்:— அவற்றுள் சுவைகளைத்[6] தோற்றுவித்தற்குரிய காரணத்தை விபாவம் என்ப; அவ்விபாவம், ஆலம்பனம் உத்தீபனம் என இருதிறத்து. (ங)
ஆலம்பன விபாவம், சுவைக்குச் சமவாயி காரணம் ஆம். உத்தீபன விபாவம் பிற காரணம் ஆம்; அவ்வுத்தீபன விபாவம் நால்வகைத்து. அங்ஙனமே சிருங்கார திலகத்திலும் கூறப்பட்டுள்ளது.
“சுவைப் பொருளின் குணங்களும்; அ
தன் செயலும், அதன் அலங்காரமும்,
நடு நிலைப்பொருள்களும் என, உத்
தீபன விபாவத்தின் முறை நால்வகையாம்”
சுவைப்பொருளின் குணங்களாவது:- உருவம் பருவம் முதலியனவாம்.
சுவைப்பொருளின் செயலாவது:- பருவத்தான் விளையும் குறிப்பும், உறுப்பவிநயமும் ஆம்.
அதன் அலங்காரமாவது, சிலம்பு, கைவளை, அலங்கல் முதலியனவாம்.
நடுநிலைப் பொருள்களாவது, தென்றல் மதி முதலியவாமெனக் கூறப்படும்.
அநுபாவம்:- காரியப்பட்டு[7] உடலின்கட்டோன்றும் கடைக்கணித்தன் முதலியன அநுபாவம் என்று கூறப்படும். (ஙஇ)
சாத்துவிகங்கள்:-
பிறர் எய்திய இன்பத்துன்பங்களைப் பாவித்தலான், அந்தக்கரணம் அவ்வண்ணமாந்தன்மை, சத்துவம் ஆம். அதனால் நிகழுஞ் செயல்கள் சாத்துவிகங்களாம்.[8]
அவை:—
தப்பித்தல் மயக்கம் மயிர்சிலிர்த்தல் வியர்த்தல் வெதும்பல் நடுக்கம் கண்ணீரரும்பல் குரற்சிதைவு என்னுமிவ்வெட்டும் சாத்துவிகங்களாம். (சஇ)
வியபிசாரிபாவங்கள்[9]:-
வெறுப்பு வாட்டம் ஐயம் அழுக்காறு களிப்பு (****) மெய்வருத்தம் (****) மடி எளிமை சிந்தை மயக்கம் நினைவு தைரியம் நாணம் சாபலம் மகிழ்ச்சி தடுமாற்றம் அறிவின்மை செருக்கு துன்பம் பேரவா கனவு அபசுமாரம் மிகுதூக்கம் விழிப்பு சினம் அடக்கம் கொடுமை துணிபு நோய் பித்தநோய் இறப்பு அச்சம் ஊகம் என்னுமிம்முப்பத்து மூன்றும் சுவைக்குத் துணைபுரியும் குறிப்புக்களாம். (அஇ)
அங்ஙனமே காப்பியப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது:-
“உலகில் இரதி முதலிய ஸ்தாயிபாவங்களுக்குக் காரணங்களும் காரியங்களும் துணைப்பொருள்களும் ஆகுமவைகளே, நாட்டியத்திலும் காப்பியத்திலும் விபாவங்கள் அநுபாவங்கள் வியபிசாரிபாவங்கள் எனக்கூறப்படுகின்றன” என்று.
உலகில் காரணம் காரியம் துணைப்பொருள் என்னுஞ் சொற்களாற் கூறப்படுந் தலைவன் றலைவி கடைக்கணித்தல் புருவநெறித்தல் வெறுப்பு முதலியன, காப்பியம் நாடகம் இவற்றில் விபாவம் அநுபாவம் வியபிசாரிபாவம் என்னும் சொற்களான் வழங்கப்படுகின்றன.
உவகை பெருமிதம் வெகுளி மருட்கை யென்னு மிச்சுவைகள், சிறப்புறுந்தலைவனையெய்தி பெருக்கமெய்துகின்றன. அதனால் உவகைச் சுவை கீழ்மகனைப் பற்றிய வழி அது போலிச் சுவையாகும் என்பதாம்.
அங்ஙனமே கூறப்பட்டுள்ளது:-
“காதல், தலைவன் றலைவியென்னு மிரு
வருள் ஒருவரிடத்தே பொருந்தியதும்,
கீழ்மகனையும் விலங்கினத்தையும்பற்
றியதும், தலைவி பலரைக்காதலித்த
லும் எனப்போலிச்சுவை, மூவகைத்தாம்” என்று.
வியபிசாரிபாவங்கள் எழுச்சி அடக்கம் என்னும் நிலைகளானும், ஒன்றற்கொன்று முரண்படுஞ் சுவையினைச் சார்ந்த வியபிசாரிபாவங்களின் பகைமையானும், இயைபால் ஒன்றற்கொன்று நெருக்கத்தானும், பலவற்றின் கலப்பானும் என நான்கு திறத்தவாம்.
அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.
குறிப்பின் அடக்கம் எழுச்சி இயைபு கல
வை என்பனவாம்.
————-
இரதி முதலிய ஸ்தாயிபாவங்களின்
இலக்கணமும் எடுத்துக்காட்டும்.
————-
இனி, நிறுத்தமுறையானே ஸ்தாயீபாவங்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும் கூறப்படுகின்றன. அவற்றுள்;
புணர்ச்சியைப்[10] பற்றிய ஓர்வகை
விருப்பம் இரதியாம்
எவ்வாறெனில்:-
உவகைச் சுவையொன்றுடைய காமனும், உலகின் இன்பப்பெருக்கிற்கொரு நிலைக்களனாகும் மதியமும், வனப்பிற்கோர் உறையுளாகிய வசந்தகாலமும், கண்கவர் கவினுடைப்பிறவும் அமைக; அவற்றால் என்? யாவரினுஞ் சிறந்து காமற்கும்[11] காமவிழாவாகும் காகதிவேந்தர் எற்குக் கணவன் ஆயினார். (கூஇ)
வேறுபாட்டின்[12] காட்சி முதலிய
வற்றால் விளையும் மனோவிகாரம்
நகையாம்.[13]
எவ்வாறெனில்
குழற்கற்றையைத் தாங்கி, கண்களுக்கு மைதீட்டி பொய் நகில் புனைந்து பெண் வேடமுடையராய் ஏகசிலைப்பதியில் மறைவுருக்கொண்டொழுகும் அரசரைக் காமுகவிடர்கள், ஆவணத் தடை யிரவிற் கண்ணுற்று மார்பகத்துகிலை விலக்கி நகிலை வலிந்து பற்றித் துகின்முடியை யவிழ்ப்பாராய் உண்மையுணர்ந்து கீ! கீ! கொடிதென அவரை விட்டுவிடுகின்றனர். (க0இ)
உறவோரின் பிரிவு முதலியவற்றால்
அகத்திற்றோன்றும் மிகு வருத்தம்
துன்பம் ஆம்.
எவ்வாறெனில்
விதியே![14] நீ அருளிலியாயினை; “காட்டிலிருந்து காய் கிழங்கருந்தி உடலைத் தாங்குக” என்று எங்களையேன் தண்டித்தாய்? அவ்வத்தகைய பெருமை வாய்ந்த இல்லங்கள் எங்கே போயின? பாலை நிலம், இருக்கையாகக் கற்பிக்கப்பட்டது. ஆகா! காதலரே! பிரதாபருத்திரவேந்தனது சினத்தீயில் வீழ்ந்தொழிந்தீர்களே! என்றழும் பகைமனைவியரின் கண்ணீரால் அப்பாலை நிலம் மருத நிலமாயிற்று. (ககசி)
பகைவரிழைக்குங்[15] தீங்கினால் விளை
யும் மனக்கொதிப்பு, சினம் ஆம்.
எவ்வாறெனில்:
அடா![16] அடா! சேவண! இதற்குமுன்னிராத இப்பெருஞ்செருக்கு, உனக்கு எங்ஙன் உண்டாயிற்று? அதனாலன்றே கௌதமயாற்றினைக் கடந்தனை; அங்ஙனங் கடந்தமையால் நீ, இயமன் வாயை யெய்தியவன் ஆகின்றாய்; ‘காகதிவீரருத்ரன்’ என்னும் மிவ்வேழக்கரமந்திரம் பகையரசர்களாகிய பெரும்பூதங்களையும் கிரகங்களையும் அச்சுறுத்தி யுச்சாடனஞ் செய்யுமெனக் கேட்டிலையோ? (க2இ)
உலகிற் சிறந்த செயல்களில்
தளராமுயற்சி, உற்சாகம்.
எவ்வாறெனில்
மூவுலகையு[17] மழிக்கும் விருப்பொடு கடல்கள், எல்லாப்புறத்துங் கலக்கமெய்திடினும், மலைகள் பலபுறத்தும் பெருங்கற்களை வீழ்த்துதற்குச் சித்தமாயிருப்பினும், அவற்றையும் விலக்க யாமே வலமுடையேம்; அங்ஙனமாக, இவ்வற்ப அரசரை வேறலிற் புகழெமக்கென்னை? எனக்காக காகதிவேந்தரின் படைவீரர், முழக்கஞ் செய்கின்றனர். (கஙஇ)
அச்சுறுத்துமவற்றின் காட்சி முதலிய[18]
வற்றாற் கேட்டையாசங்கித்தல்,
பயம் ஆம்.
எவ்வாறெனில்:
பாரெலாம் பரவு விறலுடைய வீரருத்திரனது போர்ச்செலவின் முழங்கு முழவொலியைப் பகையரசர் நெடுந்தூரத்திலுருந்து செவியுற்று நிறைவுறுங்காது நோயாற் கலக்கமெய்தியராய், மலைகளில் ஏறி அடர்ந்த அடவியிற் புக்கோடுங்கால், அங்கண் முண்மரங்கள், கூரிய முட்களால் அவரது குஞ்சியைப் பற்றியிழுக்க, தம் பகைவேந்தன் என்னும் எண்ணத்தால் “விடவேண்டும்; காத்தருளல் வேண்டும்” என்று அம்மரங்களை யிரந்து வேண்டுகின்றனர். (கசஇ)
பொருள்களின்[19] குற்றங் கண்ட வழி
நிகழும் அருவருப்பு, இளிவு ஆம்.
எவ்வாறெனில்:—
வீரருத்திரனால் நிருமிக்கப்பட்ட போர்க்களங்கள், எப்புறத்தும் ஊனீரான் மிகுதியான சேற்றில் வீழ்ந்திறந்த வேழங்களின் உடல்கள், வீக்கமெய்த, அவற்றின் பந்தியில் நரிகள் களித்துத்திரியவும், தசை ஊனீர் அரத்தம் இவை மிக்கப் பெருக்கெடுத்தோடவும், குவியலாக்கிடக்கும் என்புக்களால் பக்கவெளியாவும் மேடு பள்ளமாகவும் அமைந்து தீமணங்கமழ்வனவாய் அரசர்க்கு அச்சத்தை விளைவிக்கின்றன. (கருஇ)
அருமைப்பொருளைக்[20] காண்டலான் விளை
யும் மனவெழுச்சி, வியப்பு ஆம்.
எவ்வாறெனில்:— மாண்புறுமுயர்வும் மாட்சிமிக்கவிக்காம்பீரியமும் விறல் புகழ் இவற்றினொழுங்கும் வாகுவின் கீர்த்தியும் கூறற்கரியவாய் வேறுபட்டு விளங்குகின்றனவாகலின் வீரருத்திரனைச் சார்ந்தவெல்லாம் புதியனவென்றே
யறிகின்றேன்; அவ்வேந்தனைப் படைத்தலிற் கருவிப்பொருள்கள், எத்துணையவாக எத்தகையவாக யாண்டே நான்முகனாலீட்டப்பட்டில. (கசாஇ)
விராகம் முதலியவற்றான்[21] மனத்தின் விகாரமின்மை சமம் ஆம்.
எவ்வாறெனில்:—
பிரமன், மிக்கவாழ்நாட்பெருமையை யெய்திப் பெற்றதென்னை? இந்திரன், பிறர் எய்தற்கரிய இரு நிதியெய்தியும் அவன் புரிந்ததென்னை? எனக்கருதி யுட்பகையொழிந்த நல்லோர் தெலுங்கு நாட்டுத் திலகமாகிய இவ்வேந்தன் உலகைப் புறந்தருமிதுபொழுது வெளிப்பகையையுமறிந்திலர்[22]. (கஎஇ)
உவகைச்சுவையின் ஆலம்பன விபாவம் எவ்வாறெனில்:—
இலாவணியத்திற்கொரு[23] விளைநிலமும் பிரமனது படைப்புத் திறனுக்கு[24] எல்லையும் உவகைப் பிணையும்[25], விலாசங்கட்கு ஆவணமும்,[26] காமன் இன்புறற்குரிய இடனும் ஆகிய சிறப்புறுமித்தருணி, மகளிர்க்கு அதிதெய்வமும்[27] ஆவள்; பிற குணங்களைக் கூறில் என்னாம்?[28] காமற்குக் காமனாய் விளங்குந் திருவளர் வீரருத்திரவேந்தன் இவளுக்குக் காதற்கிழவனாய் அமைகின்றான்.(கஅஇ)
உத்தீபனவிபாவம் எவ்வாறெனில்:—
மான்விழியாளின் யௌவனப்பருவம் உரம்பருத்தமையுமளவில் நவம் நவமாகிய விலாசங்களான் இவ்வுலக மூன்றையும் மையற்படுத்துகின்றது. நகிற்பருமை[29] நிறைவுறுமேல் நிகழுஞ் செய்தி யதோ கூறவேண்டுவதென்னை? மலர்க்கணைக்கழவோன் யாவற்றையும் வென்றவன் ஆவன். (ககூஇ)
அநுபாவம் எவ்வாறெனில்:—
வாமலோசனை, காமத்தாற் சிறிது விரிந்தனவும் புன்முறுவலான் இனிய நறுமணங் கமழ்வனவும் அற்பநாண்மடியுடையனவும் அன்பு நீரலை நிரம்பினவும் பலவழிப்பட்டனுவும் ஆயிரங்காமன்மாரைப் படைப்பனவுமாகிய கடைவிழிகளை, வீரருத்திரவேந்தனைச் சுற்றிலுமிறைக்கின்றான். (உ0இ)
விறல்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்
தம்பம்.[30]
காதல் அச்சம் இவற்றான் உண்டாம்
உறுப்பின் செயலொழிவு, தம்பம் ஆம்.
எவ்வாறெனில்:—
காகதி நாட்டு மகளிர் மன்னனாகிய மன்மதனைக் கண்ணுற்று[31] அதனாற் காமன் கணை பாய்ந்தென்ன, அசைவறுமுறுப்பினையுடையராய் நின்றனர். (உகஇ)
மயக்கம்(பிரளயம்)[32]
இன்பத்துன்பங்கள் முதலியவற்றால்
உண்டாகும் ஆழ்ந்தபொறிமயக்கம்,
மயக்கம் ஆம்.
எவ்வாறெனில்:— தோழீ இவ்வீரருத்திரவேந்தனாகுந் திங்களஞ் செல்வன், காமவேள் வடிவழகை வென்றவனேயாவன்; இவ்வரசனைப் பார்த்துப் பொறிகள் யாவும் மயங்குகின்றன[33]. (உஉஇ)
மயிர்சிலிர்த்தல். நடுக்கம்
இன்பம் முதலியவற்றின் மிகையால் விளை
யும் உரோம விகாரம், மயிர்சிலிர்த்தல்[34] ஆம்.
அராகம் சினம் அச்சம் முதலியவற்றால்
உண்டாகும் மெய்விதிர்ப்பு நடுக்கம்[35] ஆம். (உஙஇ)
இரண்டற்கும் எடுத்துக்காட்டு எவ்வாறெனில்:—
காதலன் றழுவ[36], அதனான் மிக்க நடுக்கமெய்திய பெண்ணொருவள், அக்காதலனது பிரிவால் இளைப்புறும் உறுப்பினையுடையளாய், புளகந்
தலைக்கீடாக உட்புகுந்த காமன் கணைகளை வெளிப்படுத்துகின்றாள். (உசஇ)
வியர்த்தல்
இன்பம் துன்பம் வெப்பம் முதலியவற்
றால் மெய்யின் நீர் வெளிப்படுதல் வி
யர்த்தல்[37] ஆம். (உரு)
எவ்வாறெனில்: —
அழகுவிழியணங்கொருத்தி, தன்காதலனாகுங் காகதிவேந்தனது நற்செய்தியைச் செவியுற்று, ஆங்குக் காமனார் அரசியலில், அபிடேகஞ் செய்யப்பட்டவள் போல, உடல் நனைவுற்றனள். (உகா)
வெதும்பல்
துன்பம் செருக்கு சினம் முதலியவற்[38]
றால் நிறம் மாறுபடுதல் வெதும்பலாம். (உகாஇ)
எவ்வாறெனில்:—
மன்னவ![39] தங்களுடைய மதியனைய வெளிறிய குணங்களை, இடையறாவின்றி யெண்ணுகின்ற யான் சியாமையாயினும், என்னுடைய உறுப்புக்கள் வெள்ளியவாயின. (உஎசி)
கண்ணீரரும்பல்
துன்பம் சினம்[40] இவற்றான் கண்க
ளில் நீர் உண்டாதல், கண்ணீரரும்
பல் ஆம். (உஅ)
எவ்வாறெனில்:—
வீரருத்திரவேந்தற்கஞ்சிக் கடலின் மூழ்கிய பாண்டியனைத் தேடற்கென்ன, அவன் மனைவியின் கண்ணீர்ப்பெருக்கு[41], யாறாகப் பாய்கின்றது. (உக)
குரற்சிதைவு
மகிழ்ச்சி முதலியவற்றாற் குளறு
படக்கூறல், குரற்சிதைவு[42] என்பதாம். (உகாஇ)
எவ்வாறெனில்:—
பெண்ணொருவள், தனியிடத்திற்[43] றன் காதலனுடன் மிக்கக் குளறுபடப் பேசுங்கால், அச்சொற்களின் பொருளை யனங்கனொருவனேயறிய வல்லான்.(ங0இ)
வியபிசாரிபாவங்களாகிய வெறுப்பு முதலியவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்.
வெறுப்பு
துன்பம் அழுக்காறு மெய்யுணர்வு முதலிய
வற்றான் “எல்லாம் பயனற்றன” என்னும்
எண்ணம் வெறுப்பு ஆம்; அங்கண், ம
னக்கலக்கம் கண்ணீர் பெருமூச்சு எளி
மை என்னுமிவை, உண்டாகின்றன. (ஙகஇ)
எவ்வாறெனில்:—
தோழீ! கருப்பூரம் வேண்டா; கத்தூரியாற் பயன் என்? சந்தனமும் அமைக; குணங்களாற் குளிர்ந்து புகழ்மணங் கமழும் பிரதாபருத்திரனையே[44] யழைத்து வருக. (ஙஉஇ)
வாட்டம்
வெதும்பல் வெறுப்பு இவற்றிற்குக்கா
ரணமாகிய வலிக்குறைவு வாட்டம்[45] ஆம். (ஙங)
எவ்வாறெனில்:
எல்லாவற்றையும் நிலவுலகந் தாங்குகின்றது; அந்நிலவுலகைப் பிரதாபருத்திரனது புயம் தாங்குகின்றது.; அவ்வேந்தனை, வலியற்றவுடலையுடைய யான் உரத்தாற்றாங்கி, அதனால் ஆராய்ச்சியில்லாத[46] செயலுடையளாகின்றேன். (ஙச)
ஐயம்
சினம்[47] முதலியவற்றிற்குக் காரணமாய்
கேட்டின் விளைவை ஊகித்தல் ஐயம் ஆம். (ஙசஇ)
எவ்வாறெனில்:—
“பிறர்[48] அறிய வேண்டா” என்று கருதியே யான் காதலனது நட்பைக் கருத்துட் கொண்டேன்; ஆயினும், எல்லாவுறுப்புக்களினும் நிறைவுறு புளகங்களான் மக்களுக்கு அதனை வெளிப்படுத்துவேனோ? (ஙருக)
அழுக்காறு
பிறரது[49] மேன்மையைப் பொறாமை
அழுக்காறென்ப. (ஙகா)
எவ்வாறெனில்:—
குலத்தானும் குணத்தானும் வடிவானும் நிலமகள் என்னிற் சிறந்தவளோ? பிரதாபருத்திரன், அந்நிலமகளை வெகுமதிப்பானாயின் அஃது ஊழ்வினைப் பயனே யாம். (ஙஎ)
களிப்பு (மதம்)
கள்[50] முதலியவற்றான் விளைந்த மயக்
கம் மகிழ்ச்சி யிவற்றின் கலவை
களிப்பு என்பதாம். (ஙஎஇ)
எவ்வாறெனில்:—
காதலன் நினைவு என்னும் கள்ளையுண்ட இப்பெண், உடல் கருத்துக் கண் சிவந்து பரவயப்பட்டுப் பொருந்தாப் பொருள்படுஞ் சொற்களைக் கூறுகின்றாள்; இடையறவின்றிச் சிரிக்கின்றாள்; பாருங்கள். (ஙஅஇ)
மெய்வருத்தம் (****)
வழி நடத்தல் புணர்தல் முதலியவற்
றான் விளைந்து வியர்வையை மிகுவிக்
கும் அயர்வு, மெய்வருத்தம் ஆம். (ஙகூ)
எவ்வாறெனில்:—
சுந்தரி! உன்னுடைய காதலன் வருகின்ற இப்பொழுதே போக்குவரவாலயர்வெய்தியேன் வருந்துகின்றாய்? நறுமணப்பூச்சும், அழிந்தொழுகின்றது. (ச0)
மடி
செயக்கடவ[51] வினைகளில் முயற்சிக்
குறையே மடியெனக் கூறுப.
எவ்வாறெனில்:—
மான்விழியாளின் வீட்டு வினைச்செய்தியைப் பற்றிக் கூறல் வேண்டா; இவள் தன் உறுப்புக்களை[52] யணிப்படுத்தலினும் முயல்விலியாகின்றாள்; ஆனால் இஃதுண்மை; காதலன் வந்துழி அவன் முன்னிலையிற் செயற்பாலனவற்றைக் காமனே வலிந்து செய்விக்கின்றான். (சகஇ)
எளிமை
இயல்பு நீக்கம்[53] மனத்தளர்வு இவற்றான்
உண்டாகும் பெருமையின்மையை
யெளிமையென்ப.
எவ்வாறெனில்:—
தலைவனை யழைத்து வருதற்குச் சென்ற தோழி, காலந்தாழ்க்கின்றதென்னோ; காமதேவனே! நினக்கு வணக்கஞ் செய்கின்றேன்; “சிறிது தாழ்க்க”[54] எனத் திங்களஞ் செல்வற்கு நீ கட்டளையிடல் வேண்டும். (சங)
சிந்தை
விரும்பியது[55] கிடைக்கப்பெறாமையான்
இடையறவின்றியப்பொருளையே நினைத்
தல், பாழ்மை துன்பம் இவற்
றைச் செய்யுஞ் சிந்தையாம். (சஙஇ)
எவ்வாறெனில்:—
இத்தலைவி[56], தன்னிருமுதுகுரவர், அணிமைக்கணிருப்பினும், அவர்களைப் பார்க்கின்றாளில்லை; அவர் வினாவியும், மறுமொழி கூறுகின்றாளில்லை; ஆனால் காதலனைச் சென்றியைந்த மனத்தின் செலவையே தேடுகின்றாள்.(சசஇ)
மயக்கம்
அச்சம் துன்பம் ஆவேசம் இடையறா
நினைவு என்னுமிவற்றான் மாழாத்தல், மயக்
கம் என்பதாம். (சரு)
எவ்வாறெனில்:—
இம்மெல்லியலாள்[57] மிக்க நீட்டித்த பகற்பொழுதை யெவ்வண்ணமோ கடத்தி பின்னர்ப் புதுவேடம் புனைந்து கொண்டு காதலன்பாற் பாங்கியரை விரைவிற் போக்கினாள்; போக்கியும் மனக்கினிய காதலன், தாழ்க்குங்கால், தண்கதிர்ச் செல்வனுடைய நீடியபாதங்களால் எல்லாவுறுப்புகளும் புடைப்புற மயக்க மெய்தினான். (சகா)
நினைவு
முன்னர்த்[58] துய்த்த பொருளைப் பற்றிய
உணர்ச்சி நினைவெனப்படும். (சகாஇ)
எவ்வாறெனில்:—
பிரதாபருத்திரனது புயத்தின் பரிசத்தை எனது ஓருருப்பு ஒருகால் எய்த, அவ்வுலப்பிலா வூற்றின்பத்தை, எல்லா வுறுப்புகளும் எய்துகின்றனவென்றால், அவரது வாகுவில் நெடிது நிலவி நிற்கும் நிலமகள் எத்தகைய நல்வினை புரிந்தனளோ? (சஎஇ)
தைரியம்
அறிவு[59] விரும்பியது கோடல் என்னும் இவை
முதலியவற்றான் அவாவின்மை, தைரியம் ஆம்.
எவ்வாறெனில்:—
மனமே![60] மூவுலகிற்கொரு வீரனாகிய வீரருத்திரவேந்தன், நின் காதலனாக, நற்பேறு பெறுகின்றாய்; நன்று! நன்று! அதனால் உலகம் யாவையுஞ் சாரமற்றனவாகக் கருதுகின்றாய். (சகா)
நாணம்
காதல் துதி முதலியவற்றான்[61] மனத்து
நிகழும் கூச்சம் நாணம் ஆம். (சகாஇ)
எவ்வாறெனில்:—
பல எண்ணங்களாற்[62] பார்க்க விரும்புந் தெலுங்கு நகரங்கனைகளுடைய கண்கள், காகதிவேந்தன் காணப்படுங்கால் வீழ்தரு மிதழ்களை யுடையவாயின. (ரு0இ)
சாபலம்
விருப்பு[63] வெருப்பு முதலியவற்றான் மனம்
ஒருவழிப்படாமை சாபலம் ஆம். (ருக)
எவ்வாறெனில்:—
இளையவளொருத்தி[64], வீரருத்திரனைப் பார்த்துச் சுழல்வுறு விழியுடையளாய்க் காமவிலாசத்தான் முறுவலித்தவண்ணம் நன்முத்தலங்கலை யணிகின்றாள்; செவியணி குவளையைத் தொடுகின்றாள். (ருஉ)
மகிழ்ச்சி
உற்சவம்[65] முதலியவற்றாலுண்டாம்
மனத்தெளிவு, மகிழ்ச்சி; அது, வியர்
வை கண்ணீர் நடுக்கம் இவற்றை
உண்டுபண்ணும் (ருஉஇ)
எவ்வாறெனில்:—
நகிலங்களே![66] முன்னர்த் தாமரைமுகையே தலைக்கீடாக நீங்கள் ஓடைகளில் நின்றியற்றிய நற்றவம், இதுபொழுது பயனுடைத்தாயிற்று. அதனால், நற்பேறு பெற்றீர்கள்; ஏனெனில்; காகதிவேந்தர் மார்பகத்திற் பூசிய கத்தூரியால் இருமடங்காய நறுமணமுடைய செங்குவளையலங்கலை உங்களுக்கு அளித்தனர். (ருஙஇ)
தடுமாற்றம் (****)
விருப்பிற்குரியவும்[67] வெறுப்பிற்குரியவுமாகிய
வற்றை யெய்தலான் விளையும் மனப்பரபரப்
பு தடுமாற்றம் ஆம். (ருச)
எவ்வாறெனில்:—
காகதிவேந்தர்[68] முரசொலியைச் செவியுற்று இன்பவிளையாட்டிற்கு விரைந்து வெளியிற் போதருங்கால், நகர மடந்தையர் அவரைக் காண்டற்கு ஆவல் மிக்குடையராய் பாதி யலங்காரஞ் செய்து கொண்ட அளவில் அணிகலன்களை யிடன்மாறி யணிந்து பொன் மாடங்களின் வெளிப்புறச் சிகரங்களில் விரைந்தேறுகின்றனர். (ருரு)
அறிவின்மை
[69]விருப்பிற்குரியவும் வெறுப்பிற்குரியவும்
ஆகிய இவற்றின் வரவால் ஒன்றும்
தோன்றாமை அறிவின்மையாம். (ருருஇ)
எவ்வாறெனில்:—
[70]உடல் வனப்பாற் காமனை வென்று பெரும் புகழ் படைத்த உருத்திரவேந்தனாங் காதலன், மனமுவந் தில்லம் வந்துழி தலைவி, பாங்கியர் முன்னிலையில் உள்ளுவகைவயத்தால் அக்காதலனை இன்புறுத்தற்கு முற்படுகின்றாள்; அங்ஙனமே ஒழிவையுமெய்துகின்றாள். (ருகாஇ)
செருக்கு
[71]வலம் முதலியவற்றான் விளையும் தற்
பெருமை, பிறரைப் பழித்தற்கு நிமித்
தமாகிய செருக்கு ஆம். (ருஎ)
எவ்வாறெனில்:—
[72]வென்றிசேர் காகதிவேந்தனுடைய போர்வீரர், இத்தகைய நமக்குப் படைக்கலத்தைக் கையிற்றாங்குங் காலமேது? பகையரசராகும் மின்மினிப்புழுக்கள்பாற் பகைமை யெத்தகைத்து? என இறுமாந்து, அச்சுறுத்துங் கைவலத்தான் விலக்கற்கரிய செருக்கையுடையராய் அமர்க்களத்தில் ஆடற் புரிகின்றனர். (ருஅ)
துன்பம்
[73]உபாயம் இன்மையான் உண்டாகிய
மனமுறிவு, துன்பம் ஆம். (ருஅஇ)
எவ்வாறெனில்:—
மனம்[74] எனக் கருதி அதனைத் தலைவன்பாற் போக்கினேன்; அஃது என்னை விடுத்து அவன்பால் வறிதே பதிந்தது. காமன் என்னை விடுத்துச் செல்கின்றானில்லை; தோழி! இங்கட் செயக்கடவ தென்னே? (ருகாஇ)
பேரவா
[75]காலத்தாழ்வினைப் பொறாமையைப்
பேரவாவென்ப; அது மனவருத்தம்
பரபரப்பு முதலியவற்றைச் செய்யும். (சா0)
எவ்வாறெனில்:—
ஆந்திரத்தங்கனையார், உறுப்புகளை யலங்கரித்துப் பரபரப்புடையராய், உருத்திரவேந்தனது வருகையைப்பற்றிய காலத்தாழ்வை வருந்தியே[76] பொறுக்கின்றனர். (சாக)
உறக்கம்
மனம்[77] அடங்கி நிற்றல் கனவு என்பதாம்.
எவ்வாறெனில்:—
இந்த மடந்தை[78] கனவிற் கண்ட காதலனைத் தழுவற்கு முயன்றனளாய், விழிகளைச் சிறிது மூடிக் கைகளை உயர்த்தி விரிக்கின்றாள்; பாருங்கள். (காஉ)
அபசுமாரம்
மயக்கம்[79] துன்பம் முதலியவற்றால் உண்
டாகும் வெறி, உறுப்புகளை வறுத்தும்
உணர்ச்சியின்மையாகிய அபசுமாரம் ஆம்.
எவ்வாறெனில்:—
பகைவர்குழாம்[80], கனவிற் காகதிவேந்தனைச் சினமுடையனாகக் கண்டு, ஆகா! காத்தல் வேண்டும்; என அறுகுறையாகிய சொற்களைக் கூறிப் பரபரப்புடனெழுந்து ஓடுகின்றனர்; அடவி நடுவிடைப் புரளுகின்றனர்; உறவினர், அணிமைக்
கணிருப்பினும் அவர்களை மாறிய பெயர்க்கொடு விளிக்கின்றனர். (சாச)
மிகுதூக்கம்
உறக்கமிகையே மிகுதூக்கம்[81] ஆம்.
எவ்வாறெனில்:—
காகதிவேந்தன், எல்லாவற்றையும் புறந்தருங்கால் மனங்கவலொழிந்த மாதவன் உறக்கமெய்தினான்;[82] எய்தவே பாற்கடல், அவ்வேந்தனது புகழ்மதிக்கதிராற் பொங்கிப் பெருகியும் அவரது உறக்கத்திற்குக் கேடு விளைக்கவேயில்லை. (காரு)
விழிப்பு
உணர்வினைப் பெறுதல் விழிப்பு[83] ஆம்;
அது கொட்டாவி கண்துடைத்தல்
இவற்றைச் செய்வதாம். (சாருஇ)
எவ்வாறெனில்:—
மன்னர் மன்னனாகிய பிரதாபருத்திரன் பகைவரைத் தகவொறுத்து உலகைப் பாலிக்குங்கால் மக்களின் செல்வ வளங்கள் பலவாகச் செழித்து விழிப்புறுகின்றன[84].
சினம்
குற்றமுடையார்பால் நிகழும் மனக்
கொதிப்பு சினம்[85] ஆம். (சாஎ)
எவ்வாறெனில்:—
அடே! அரசர்களே! விற்களை வளைக்க; சிரங்களை நிமிர்த்துக; தெய்வமகளிர்க்கு வீரரை வரித்தலில் யான்முன்; யான்முன்; என்னும் விரைவு நிகழ்ந்தது. எங்கள் வாட்படைகள், ஈர்த்தலாகுங் கேளியில் விரைவுறுத்துகின்றன; என்று வீரருத்திரனுடைய போர்வீர்ர், போர்முனையிற் சினத்தை வெளிப்படுத்தி முழக்கஞ்செய்கின்றனர். (சாஅ)
அடக்கம்
மகிழ்ச்சி முதலியவற்றின் குறிப்புகளை
நன்கு மறைத்தல் அடக்கம்[86] ஆம். (சாஅஇ)
எவ்வாறெனில்:
பெண்களின் குழுவில் பிரதாபருத்திரனுடைய சரிதங்களைக் கேட்ட இப்பேதை, தலைகுனிந்து காலாற்றரையைக்[87] கீறுகின்றாள். (சாஇ)
கொடுமை
குற்றங்கண்ட வழிச்சினமுறல்
கொடுமையாம்[88]. அஃது உரப்ப
லாதிய புரியும். (எ0)
எவ்வாறெனில்:—
இத்தலைவி[89] விழியாகும் உற்கைகளை மதியின்பால் வீழ்த்தி அம்மதியத்தை மாசு படுத்தினள்; ஆதலின் காதலனையழைத்து வந்து இவளது பிரிவுத்துன்பத்தைப் போக்குக. (எக)
துணிபு
உண்மை[90] நெறியை யுணர்ந்து பொரு
ளைத்துணிதல் துணிபு ஆம். (எகஇ)
எவ்வாறெனில்:—
ஐயப்பாடென்னே![91] வீரருத்திர வேந்தன் மண்ணுலகிற்கு மதியமே யாவன்; ஏனெனில், அவனுடைய கரங்களின் ஊற்றின்பத்தால் உறுப்புகள், மதிமணிகளாக அமைகின்றன. (எஉஇ)
நோய்
உள்ளக்கொதிப்பு அவமானம் முதலிய
வற்றால் உண்டாகும் வெப்ப நோய் முதலியன
நோய் ஆம்.
எவ்வாறெனில்:—
திசைகளை வென்ற பிரதாபருத்திரனுடைய பகைமனைவியரின் உடற்கண் உண்டாகிய காமநோயின் வெப்பம், பனிவரைச் சாரலிற் பனியினை யறவேயொழிக்கின்றது. (எச)
பித்தநோய்
[92]உயர்திணை அஃறிணைப் பொருள்களிலும்
ஒருபடித்தாகிய நிலைமையுடையனாதல்
பித்தநோய் என்பதாம். (எசஇ)
எவ்வாறெனில்:—
பிரதாபருத்திரனது போர் முழவொலி, திசைவெளிகளிற் பரவுறுங்கால் அதனைக் கேட்டஞ்சி நடுங்கிய பகையரசர், மயக்கமெய்தி மரங்கள்பால்[93] வழியினை வினாவுகின்றனர். (எருஇ)
சிறப்பு
இறத்தற்குரிய முயற்சி இறப்பு[94]
எனப்படும். (எகா)
எவ்வாறெனில்:—
தலைவி, தன் காதலன் பிரிவைப் பொறாது தனதுயிரை வெறுத்து நிலவை[95] யெய்துகின்றாள்; தென்றற்கு உடலையளிக்கின்றாள். (எஎ)
இறப்பை வெளிப்படையாகக் கூறல் அமங்கலமாகலின் அவ்வண்ணம் அதனை யெடுத்துக்காட்டல் தக்கதன்று.
அச்சம்
தற்செயலான் நிகழ்ந்த ஓர் நிமித்தத்தான்
மனங்கலக்கமுறல் அச்சம் என்பதாம். (எஎஇ)
எவ்வாறெனில்:—
இத்தலைவி, புலவி நீட்டத்தை யெய்தியும் மிகுதியான இடியொலியைச் செவியுற்று, உடல் நடுக்கமுடையளாய், விரைந்து வந்து காதலனைத் தழீஇக்கொள்ளுகின்றனள். எஅஇ)
ஊகம்
ஐயத்தாற்[96] பல கற்பனைகள் நிகழ்தல்
ஊகம் என்பதாம். (எகா)
எவ்வாறெனில்:—
எனது இதயம், தலைவனுடைய உயரிய குணங்களால் அவனைப் பற்றி நிற்கின்றது; பிறிதொன்றையும்[97] நினைந்திலது; இவ்வரசன், கிடைத்தற்குரியனா? அன்றா? என்று பாங்கியருடனும்[98] ஆலோசிக்கவில்லை; அவனை அடைதற்கு எத்தகைய சூழ்ச்சியைப் புரியலாம்; மனமோ மயக்கமெய்துகின்றது.[99] அத்தகைய உள்மயக்கம் எவ்வளவினது? எத்தகைத்து? எது காறுமிருப்பது என்று அறிதற்கியலவில்லை. (அ0)
விறல்களும் குறிப்புகளும் பல சுவைகளுக்குப் பொதுவாகலான் ஒருவகைச் சிறப்பைக் கருதி எடுத்துக்காட்டப்பட்டில; அங்ஙனமே, உவகைச் சுவையில் எல்லாம் நிகழும். நகைச்சுவையில், வாட்டம் மெய்வருத்தம் சாபலம் மகிழ்ச்சி அடக்கம் என்னும் இவை நிகழ்வனவாம். அழுகைச்சுவையில், களிப்பு தைரியம் நாணம் மகிழ்ச்சி செருக்கு பேரவா கொடுமை இவையன்றிப் பிற நிகழ்வனவாம். வெகுளிச் சுவையில் வாட்டம் ஐயம் மடி எளிமை கலக்கம் நாணம் ஆவேசம் அறிவின்மை துன்பம் மிகுதூக்கம் உறக்கம் நோய் அடக்கம் மனநோய் பித்தநோய் சமம் அச்சம் என்னும் இவை நிகழாவாம். பெருமிதச்சுவையில், வெகுளியிற் கூறியவற்றுடன் வெறுப்பும் நிகழாவாம். அச்சச்சுவையில் அழுக்காறு களிப்பு தைரியம் நாணம் மகிழ்ச்சி செருக்கு உறக்கம் மிகுதூக்கம் சினம் அடக்கம் கொடுமை நினைவு என்னும் இவையன்றிப்பிற நிகழும். இளிவரல் மருட்கை யிவற்றில் சிந்தை அச்சம் முதலியன நிகழ்ச்சிக்கேற்ப உய்த்துணரற்பாலன.
உவகைச் செயல்கள் விளக்கப்படுகின்றன. பாவம் ஆவம் ஏலை இனிமை தைரியம் இலீலை விலாசம் விச்சித்தி சம்பிரமம் கிலிகிஞ்சிதம் மொட்டாயிதம் குட்டமிதம் விப்போகம் இலலிதம் குதூகலம் சகிதம் விகிருதம் ஆசம் என்னும் இவை பதினெட்டும் உவகைச் செயல்களாம். (அஉஇ)
இவற்றின் இலக்கணமும்
எடுத்துக்காட்டும்
——–
பாவம்:— (****)
சுவையறியுந் தகுதியுடைமை[100]
பாவம் எனக் கூறப்படும். (அங)
எவ்வாறெனில்:—
பெண்கள், இளமைப்பருவத்தில் உருத்திரவேந்தனுடைய குணங்களை மனவேறுபாடின்றிப் பாடுகின்றனர்; யௌவனப் பருவத்தில், சிறிது[101] புளகத்தை யெய்திப்பாடுகின்றனர். (அச)
ஆவம்:— (ஹாவ:)
பாவம் சிறிது விகாரப்படுமாயின்
அஃது ஆவம் எனப்படும். (அசஇ)
எவ்வாறெனில்:—
முன்னர்க் கூறியுள்ள “சிறிது[102] புளகத்தை யெய்திப்பாடுகின்றனர்” என்பதே இதற்கும் எடுத்துக்காட்டு ஆகும்.
ஏலை:— (****)
பாவம் நன்கு வெளிப்படுமாயின்
அஃது ஏலையெனப்படும். (அரு)
எவ்வாறெனில்:—
பெண்ணே! யார்க்கும் வெளிப்படலாகாது; என்று காதலனை யகத்திலமைத்தனை; அத்தகைய உனது கருத்தை எல்லா உறுப்புகளிலும் பரவிய புளகங்கள் வெளிப்படுத்தின. (அசா)
இனிமை:— (****)
அணிகலன் இன்மையிலும் வனப்
புடைமை இனிமையென்பதாம். (அசாஇ)
எவ்வாறெனில்:—
மான்விழியாள், இயல்பாகவே[103] உலகிற் சிறந்த மிகுவனப்பெய்தியவள் ஆவள். ஆனால், அணிகலன்களை யணிப்படுத்தற்கே அவற்றையணிகின்றாள் என்பது எனது கருத்து. (சுஎஇ)
தைரியம்:— (****)
ஒழுக்கம் முதலியவற்றைக் கடவாமை
தைரியம் என்று கூறப்படும். (அஅ)
எவ்வாறெனில்:—
எத்தகைய துன்பங்கள் நேருமாயினும், குலமகளிர் வரைவு கடத்தல் தக்கதன்று; உருத்திரவேந்தனுடைய குணங்களோ மனத்தைக் கவர்கின்றன. ஈண்டுச் செயக்கடவதென்னே! (அகா)
இலீலை:— (****)
உரைநடைசெயல் இவற்றாற் காத
லனை யொத்திருத்தல் இலீலை
யென்பதாம். (அகாஇ)
எவ்வாறெனில்:—
பாங்கியரே! பாருங்கள்; இவ்விலக்குமியென்பாள்[104], பிரதாபருத்திரவேந்தனுடைய செயல்களைப் பின்பற்றி யொழுகுமியல்பினளாகலின் இவள், அவ்வேந்தனுடைய மனைவிமாருள் கற்புடையளாகின்றாள். (கா0இ)
விலாசம்:— (****)
கணவனைக் கண்ட அப்பொழுதே
உண்டாகும் விகாரம் விலாசம்
என்பதாம். (காக)
எவ்வாறெனில்:—
இயலழகமைந்த[105] உருத்திரவேந்தனைக் காதற்குறிப்புடன் காணும் மான் விழியாளது இளமைப்பருவத்தில், அப்பொழுதே பல படவெழுந்த உறுப்பு மென் செயற் பெருமையால் இனியதும், சுவையினெழுச்சியானொருமித்தெழும் விறலையுடையதுமாகிய மலர்க்கணைவேட்செயல், விளங்குகின்றது. (காஉ)
விச்சித்தி:— (****)
மிக்கக் குறைந்த அணிகளானும் மிகு
வனப்புடைமை விச்சித்தியென்பதாம் (காஉஇ)
எவ்வாறெனில்:—
தோழீ! காகதிநகர மடந்தையர்க்குப் பொதுவணிகளான்[106] உலகிற் சிறப்புறுமழகு அமைகின்றதாகலின், இவர்பால் மிகுவனப்பு, யார் பொருட்டு யாவரால் உண்டாக்கப்பட்டது. (காஙஇ)
விப்பிரமம்:— (****)
காதலன் வந்துழி, பரபரப்பான் அணி
கலன்களை இடம் மாறுபடவணிந்
து கோடல் விப்பிரமம் ஆம். (காச)
எவ்வாறெனில்:—
[107]“பகற்பொழுது சென்றது, எனப்பாங்கியின் முகமாகக் கேட்ட தலைவி, பரபரப்பாற் கைகளிற் சிலம்பையும், கால்களில் வளையலையும் அணிந்தனள். (காரு)
கிலகிஞ்சிதம்:— (****)
சினம் மகிழ்ச்சி கண்ணீர் அச்சம்
இவற்றின் கலவை கிலிகிஞ்சிதம்
என்று கூறப்படும். (காருஇ)
எவ்வாறெனில்:—
காகதிவேந்தன், தனியிடத்தில் மான்விழியாளின் சேலைத்தானையைப்பற்றி யிழுக்குங்கால், உடலந்துடிக்கின்றது; புருவமும் நடிக்கின்றது; சொற்களும் குளறுகின்றன. (காசாஇ)
மொட்டாயிதம்:— (****)
காதலுனுடைய செய்தி முதலியவற்
றைச் செவியுறுங்கால், காதற்குறிப்
பை வெளிப்படுத்தல் மொட்டாயிதம்
என்பதாம். (காஎ)
எவ்வாறெனில்:—
உருத்திரவேந்தனுடைய இனிய சரிதங்களைச் செவிக்கொளுந்தலைவியின் காதற்குறிப்பு[108] உடலை மறைத்தலான் வெளிப்பட்டாங்கு, புளகங்களான் வெளிப்படவில்லையோ? (காஅ)
குட்டமிதம்:— (****)
[109]புணர்ச்சியில் துன்பமுள்வழியும்
அஃது இன்பமிகையாதல், குட்ட
மிதம் என்றும் கூறப்படும். (காஅஇ)
எவ்வாறெனில்:—
[110]எல்லையிலின்பக்கலவியின் உண்மைச் செய்தியைப் புலப்படுத்துமுறுப்புகளான், மிக்க வியப்பெய்திய அன்புமிக்க பாங்கியைப் பார்த்து நாணமிக்க மதிமுக மடந்தை, தனது துணி செயலையும், காதலற்குக் காமத்தான் விளைந்த ஆய்வில் செயலையும் அறிந்து அப்பொழுதே மதிமுகம் குனிதர தரையினைக் கீறியவண் ணமாய் நின்றனள். (காகாஇ)
விப்போகம்:— (****)
[111]காதலன் இனியவை கூற, அவற்
றைச் சிறிது புறக்கணித்தல், விப்
போகம் ஆம். (க00)
எவ்வாறெனில்:—
[112]இல்லத்திற்றிருமகள், இடையறவின் றியாடற்புரிக; நிலமகள் புயத்திற்
றங்கி விளையாட்டை யிடைவிடாது புரிக; மேலும் கலைமகள், முகத்தில் எஞ்ஞான்றும் அமைக; அறிந்தேன்; உருத்திரவேந்தனுடைய இன்னுரை பலவற்றையும் யான் முன்னரேயறிந்துளேன். அவை வேண்டவே வேண்டா; தோழீ! காமன் கணைகளைத் தொடுத்தற்கு முயலுக. (க0க)
இலலிதம்:— (****)
உறுப்புக்களின் மெல்லிய செயல்
இலலிதம் ஆம் (க0கக)
எவ்வாறெனில்:—
[113]உருத்திரவேந்தருடைய மனைவிமார், அவரைத் தனியிடத்திருந்து இன்புறுத்தும் விலாசங்கள், விளையாட்டாக அடிவைத்து நடத்தலான் மணிச்சிலம்புகளும் இடையணி சதங்கைகளும் ஒலிக்கவும், மெல்லிய கரங்கள் அலைதர வளையல்கள் இனிமையாக ஒலிக்கவும், முறுவலாம் நிலவலையிற் றவழ்தரு சொல்லமுதையுடையவாய் அமைந்தன. (க02இ)
குதூகலம்:— (****)
இனிய காட்சியில் விழைவுறல்
குதூகலம் என்று கூறப்படும். (க0ங)
எவ்வாறெனில்:—
தெலுங்கு நகரணங்குகள், வேழமீதிவர்ந்த வீரருத்திரனைக் காண்டற்கு விரைந்தடி நடந்து உயரிய மேன்மாடங்களிலேறுகின்றனர். (க0ச)
சகிதம்:— (****)
அச்சத்தால் விளையும் பரபரப்பு
சகிதம் ஆம்.
எவ்வாறெனில்:—
அரசன் தன் வருகையைத்[114] தலைவியறியாமலும், தோழியும் அவளையெள்ளி நகைத்தற்கே அவ்வரவினை யவட்குத் தெரிவிக்காமலும் இருக்குங்கால், தற்செயலாய் அத்தலைவி அரசனை[115] நிமிர்ந்து நோக்கி மிக்க வெருவுறீச்சுழல்வுறு விழிகளையுடையளாக, அதுகாலை யம்மெல்லியலாளின் கரைகடந்திலங்குங் காதற்பெருக்கையுடைய விலாசங்களைக்[116] கண்டு மீண்டும் அவ்வண்ணமே[117] வருதற்கு விரும்புகின்றான். (க0ரு)
விகிருதம்:— (****)
அமயத்திற்குரிய சொற்களைக்
கூறாது ஒழிதல், விகிருதம் ஆம். (க0ருஇ)
எவ்வாறெனில்:—
“பிரதாபருத்திரனது[118] மார்பகத்திலிருக்குஞ் செங்குவளையலங்கலை, இவற்றாற் றழீஇக்கொள்ளுக” எனக் கூறி யிரண்டு நகிலங்களிலும் தெய்யிலிடுந்தோழியைத் தலைவி, செருக்குடன் பார்க்கின்றாள். (க0சாஇ)
அசிதம்:— (****)
[119]யௌவனம் முதலிய விகாரங்க
ளுக்கியல்பாய்க் காரணமின்றி
விளையும் நகை, அசிதம் ஆம். (க0எ)
எவ்வாறெனில்:—
[120]மான்விழியணங்கினுடைய முறுவல், யௌவனத்திருவாற் பயில்வுற்றினியதாய் மலர் தரற்கேற்ப, பூவிலிக்கணைகளும், காதலனது ஆசையும் மலர் தருகின்றன.(க0அ)
பன்னிரு காமாவத்தைகள் கூறப்படுகின்றன.
காட்சி மனப்பற்று சங்கற்பம் புலப்பம் விழிப்பு இளைப்பு வெறுப்பு நாணமின்மை சுரம் உன்மாதம் மயக்கம் இறப்பு என்னுமிவை காமசாத்திரத்தைப் பின்பற்றிய பன்னிரு அவத்தைகளெனப்படும். (கக0)
சிலர் அவத்தைகள் பத்தெனக் கூறுகின்றனர்.
இவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்
காட்சி:— (****)
அன்புடன் காண்டலைக் காட்சி யென்ப (கக0இ)
எவ்வாறெனில்:—
தோழீ! இவ்வுருத்திரவேந்தன், வடிவெடுத்த மதனன் போலும், கறையிலாக் கலை நிறை மதியம் போலும் உள்ளவன்; ஆதலின் இவன், கண்களுக்கு எதிர்பாராத பெருவிழாவாயினான்[121]. (கககஇ)
மனப்பற்று:— (****)
காதலன்பால் மனம் நாளும் நாடி
நிற்றல் மனப்பற்றென்பதாம். (ககஉ)
எவ்வாறெனில்:—
எனது மனம் எப்பொழுதும் உருத்திரவேந்தரைப்பற்றி நிற்கின்றது. பாங்கியரே! ஏன் சினக்கின்றீர்கள்? [122]அம்மனத்தானும் யான் விடப்பட்டவளே; அங்ஙனமாக உங்களைப் பற்றிக் கூறுவதென்? (ககங)
சங்கற்பம்:— (****)
தலைவனைப் பற்றிய விருப்பம்
சங்கற்பம் என்று கூறப்படும். (ககஙஇ)
எவ்வாறெனில்:—
[123]புன்முறுவல் உண்ணிறைந்தனவும் இனிய நேயமிக்குடையனவும் காதல் நிறைந்தனவுமாகிய உருத்திரவேந்தனுடைய பார்வைகள், எஞ்ஞான்றோ என்பால் விழும்? (ககசஇ)
புலப்பம்:— (****)
காதலுடைய நற்குணங்களைப்பற்
றிய பேச்சு புலப்பம் ஆம். (ககரு)
எவ்வாறெனில்:—
சிறந்த மகளிர் கூட்டத்தார், வீரருத்திரவேந்தனொருவனே அத்தகைய நிபுணன்; அத்தகைய இனியன்; அத்தகைய சுபகன்[124]; அத்தகைய நல்லொழுக்கமுடையன்; என்று சொற்பொழிவியற்றுகின்றனர். (ககசா)
விழிப்பு:—(****)
உறக்கமின்மையே விழிப்பு என்பதாம்.
எவ்வாறெனில்:—
[125]பகற்பொழுதை யெவ்வண்ணமோ கடத்தியுள்ளேன்; இரவு, மதிவெயிலெறித்தலாற்றாங் கொணாவாறு நீட்டித்தது. காமனும் நிறைவுறு கணைகளையுடையனாயினான். உறக்கமும் நிருபனும் வரவில்லை. (ககஎ)
இளைப்பு:— (****)
உறுப்புக்களின் மெலிவு இளைப்பு ஆம்.
எவ்வாறெனில்:—
[126]மதிமுகத்தவளே! நீயிந்த ஆழியை வளையலாக்கியதென்னே! தோழீ! யானன்று; காதலனைப்பற்றிய காதற்பெருமை, அங்ஙனம் ஆக்கியுள்ளது. அக்காதலனயாவன்? நிலமகட்கென்னை மாற்றவளாக்கிய அவனே காதற்கிழவன். செருக்குடையாய்! அறிந்தேன். காகதிவேந்தர்பாற் காதற்பற்றுடையையாயினை. மங்கலமுடையாய்! அவ்வேந்தர், சியாமாங்கியும் நன்னிலையளும் மலைமுலையளுமாகிய உன்னையும் அந்நிலமகளையும், ஒருபடித்தாக இன்புறுத்துவர். (ககஅ)
வெறுப்பு:— (****)
[127]பிறவழி விருப்பின்மை வெறுப்பு.
எவ்வாறெனில்:—
[128]சுபகனே! அத்தலைவி, விழாவிலும் விருப்பிலளாய் மதியின்படைப்பையும், தென்றலின் பெருமையையும் பழித்துரைக்கின்றாள்; தாங்கள், இங்கட் கருதுவதென்னே? (கககூ)
நாணமின்மை:
எவ்வாறெனில்:—
[129]காமத்த னெறி பிறழ்ந்தொழுகுமித்தலைவி, மாதராரது வரையறையைக் கடந்தும், பெற்றோரும் செவியுற்று நாணெய்திய கலவிலகும் வண்ணமும் அத்தகைய சொற்களைக் கூறுகின்றாள். (க20)
சுரம்:— (ஜர0)
உடலின் வெப்புநோய் மிகை சுரம் ஆம்.
எவ்வாறெனில்:—
உருத்திரவேந்தே! குளிர்ப்பிக்கும் உபசாரங்கள் யாவும் இத்தலைவிபாற் பயனற்றனவாக, அவள் மிக்க காமக்காய்ச்சலால் உமது காட்சியாகும் அமுதத்தை யிதுபொழுது விரும்புகின்றாள். (கஉக)
[130]உன்மாதம் மரணம் என்னுமிவை முன்னரேயெடுத்துக்காட்டப்பட்டன.
மயக்கம்:—
புறப்பொறிகள், தத்தம் புலன்க
ளைப்பற்றாமையான் மனமழிந்து நிற்
குநிலை, மயக்கம் ஆம். (க2கஇ)
எவ்வாறெனில்:—
[131]மான்விழியாள், அரசனை நினைந்து மனமழிந்து நின்றுழி, அவளது மனத்திலிருக்கு மவ்வரசனைப் பார்த்தற்குப் புறப்பொறிகளும் அகத்தினுட் புகுந்தன. (க22இ)
இனி [132]உவகைச்சுவை
உவகைச்சுவை, சம்போகம் விப்பிரலம்பம் என இருதிறத்து.
கூடிய தலைவன் றலைவியர்க்குச்
சம்போகமும், பிரிவெய்தினோர்க்
கு விப்பிரலம்பமும் ஆம்”,
என்று சிருங்கார திலகம் கூறும்.
சம்போகம், ஒருவரையொருவர் பார்த்தல் உரையாடல், தழுவல் முத்தமிடல் என்னும் இவையாதிய பல செயல்வடிவாய், அது முடிவற்றதாகலின் ஒருபடித்தாக எண்ணப்பட்டது.
எவ்வாறெனில்:—
[133]மனக்கினிய காதலனாகிய உருத்திரவேந்தன் தன் தனிமையி லணிமைக்கணெய்தி யிருக்குங்கால், துனிவயப்பாடு நீங்கியது; நாணப்[134] பெருமிதமும் நலிந்தது; அன்புடைத்தோழீ! நின்பாற் கூறத்தகாத தென்னே? உள்ளும் புறத்தும் உவகைப் பெருக்காய்க் கூறற்கரிய காமாவேசம், அவ்வேந்தனோடென்னை யிரண்டற[135] பிணைக்கின்றது. (க2ஙஇ)
விருப்பம் பொறாமை பிரிவு பிரவாசம் என விப்பிரலம்பம் நான்கு வகைப்படும்.
விருப்பம் என்பது கலவிக்கு முன்னர் நிகழுங் காதலாகும்.
எவ்வாறெனில்:—
[136]ஒருவர்க்கொருவர் உரையாடல் பின்னர் இன்புரை நிகழ்ச்சி ஒருபாயலெய்தல் என்னுமிவை விருப்பிற் கெட்டாதனவாம்;
அன்புடனியைந்ததும்[137] காதன் மிக்கெழுந்ததுமாகிய உருத்திரவேந்தனது பார்வையை யாதல் யான் அடையப்பெறுவனோ? (கஉசஇ)
பொறாமையென்பது தலைவற்குப் பிறிதொரு தலைவியின்பாற் பற்றுள்[138] வழி மனத்தே நிகழுஞ் சினக்குறிப்பாம்.
அப்பொறாமையான் விப்பிரலம்பம் எவ்வாறெனில்:—
காகதிவேந்தனது[139] கமலக்கண்ணை, உறைவிடமாகக்கொண்ட திருமகள், அவ்வேந்தன் உன்னைப் பார்ப்பதில் அழுக்காறெய்துகின்றாள்; நாவிலுறைக்கலைமகளும் உன்னுடன் உரையாடலைப் பொறுக்கின்றாளில்லை; வாகுவில் நிலவு நிலமகளும் உன்னை விளையாட்டாகப் பற்றியிழுத்தற்கு இடையூறு செய்கின்றாள். ஆதலின், சுபகனாகிய அவ்வேந்தன்பால் வஞ்சனைகள் இல்லை. ஏன் சினமுற்று வருந்துகின்றாய்? (கஉருஇ)
பிரிவென்பது கூட்டமெய்திய தலைவன் றலைவியர், [140]யாதாமொரு காரணத்தாற் பிரிவெய்தி மீண்டுங் கூடுதற்குரிய காலத்தைக் கடந்து நிற்றல் ஆம்.
எவ்வாறெனில்:—
உறுப்புகள் மெலிவுற்றிருக்குங்கால் அணிகலன்களை யிடம் மாறுபட அணிதலும்[141] அவை அங்கட் சிறுபொழுது விளக்கமுறுவனவாம்; ஆகலின் பாங்கியரே! அலங்காரமுறை யமைக; உருத்திரவேந்தனை யழைத்துவருக; இதனையன்றிப் பிறிது செயலென்னே! (கஉசாஇ)
தலைவன் தலைவியர்க்கு நேர்படும் வேற்றிடத்திருக்கை, பிரவாசம் ஆம்.
எவ்வாறெனில்:—
உருத்திரவேந்தன், எல்லாவேந்தரானும் வழிபடற்குரியனாயிருக்க; நன்னாட்களிலும்[142] நங்கணவர் நமது அணிமைக்கணிருத்தற்கியலவிலையே யெனப்புலம்பும் களிங்கதேயத்தங்கனை களினுறுப்புகள், பிரிவுத்துன்பத்தின் வெப்பத்தான் இளைப்பையெய்துகின்றன; பகற்பொழுதும் யுகப்பொழுதாகின்றது. (கஉஎஇ)
———
போலிச்சுவை:— (ரஸாஹாஸ)
எவ்வாறெனில்:—
[143]மாளிகைகளின் உட்கொடுங்கைகளிலும், அங்கட் பறவைகளிருக்குஞ் சந்துகளிலும் ஆண்புறாவான் முத்தமிடப்பட்ட அலகுநுதியினையுடையதும், தோன்றுங் கலவியொலியாலினிய குரலுடையதுமாகிய பேடைப் புறாவைப் பார்த்த காகதிவேந்தன், புந்நகை புரிகின்றான். (கஉஅஇ)
குறிப்பெழுச்சி:—(****)
எவ்வாறெனில்:—
சுந்தரி! உனது மனத்தில் இருப்பவன் யாவன்? தோழீ! நின்பாற் சூளுற்றுக்கூறுவேன்; மனோபவனேயன்றிப்[144] பிறிதொருவறுமிலன்; அவற்கிங்கட்காரியமென்னை? பிறப்பிடம் என்னும் பற்றுக்கோடன்றி வேறென்னை? மற்றவன் யாவன்? அவனது எதிருருவேயாம்; மதிவலமுடையாய்! ஏமாற்று முறையையறிகின்றாய்; காமனிற் சிறப்புறுங்காதலனாகிய உருத்திரவேந்தன், நின் இதயத்திலிருக்கின்றான் என்று கூறிய அவ்வளவில் தலைவி, தலைகுனிதர நின்றனள். (கஉகாஇ)
இங்கண் இலச்சையென்னுங்
குறிப்பின் எழுச்சியாம்.
குறிப்படக்கம்:— (****)
எவ்வாறெனில்:—
நீ, திருமகள்; நின்காதலனாகிய வீரருத்திரவேந்தன், திருமாலேயாவன்; தக்க பொருத்தமுடைய நும்மிருவீரையும் படைத்தற்குக் கமலத்தோன், நீள நினைந்து முயன்றனன். ஆதலால் நீங்கள் பொய்மையாகவேனும் சிறிதுஞ் சினமுறல், தக்கதன்று; என்று கூறி வணங்கி நின்ற பாங்கியைப் பார்த்துப் பிணங்கிய தலைமகள், அப்பிணக்கம் நீங்கி மலர்தரு[145] தாமரை முகத்தினளாயினள். (கங0இ)
இங்கட் சினம் என்னுங் குறிப்
பின் அடக்கம் ஆம்.
குறிப்பியைபு:— (****)
எவ்வாறெனில்:—
பிரதாபருத்திரனுடைய திசைவெற்றிச்செலவு குறித்து முழக்கப்படும் போற் பறையினொலிகளானும், காதலியின் சொற்களானும்[146] போர் வீரரது உடலம் புளக கவசத்தைப்போர்த்துக் கொண்டது. (கஙகஇ)
இங்கட் பெருமிதம் உவகையென்
னும் சுவைகளைப் பற்றிய மகிழ்ச்
சிகளுக்கு இயைபு ஆம்.
குறிப்புக்கலவை:— (****)
எவ்வாறெனில்:—
குலமகளிர்[147], இது பொழுது என்னைப் பழித்துரைக்க. எத்தகைய நல்லூழாற் காதலனை யெளிதிலடைவேன்? பெற்றோர்கள் இதனையேன் ஒருப்பட்டிலர்? எந்தத் தோழியை அனுப்புவேன்? இஃது உலகிற்கு விரைவில் வெளிப்படுமோ? யான் விரும்பியாங்கு என் காதலனது மடிக்கண் எப்பொழுது ஏறுவேன்? எனது மனம் எப்பொழுது உறுதிப்பாடெய்தும்? எவ்வாற்றானும் காதலரே! அடையற்பாலார். (கஙஉஇ)
இங்கட் பேரவா[148] முதலிய குறிப்புக
ளின் கலவையாம்.
சுவைக்கலவை
உவகை அழுகை யென்னுமிவற்றின் கலவை எவ்வாறெனில்:-
காகதிவேந்தனே! தம்பகைவருடைய மனைவியர், “மகோற்சவம் அணித்து நிகழவிருக்குங்கால் அவ்விழாவை விடுத்து இவணிருந்து அயல் நாட்டை யேன் எய்தல் வேண்டும்? நம்மைப் பிரித்து வைக்க எத்தீயூழ் விரும்புகின்றது? அக்கொடிய செயலை யிகழ்தல் வேண்டும்” என்றிங்கனம் தங்காதலரது வழிச்செலவைக் கனவிற் றடைப்படுத்தியராய்ப் பின்னர் விழிப்பெய்தி மயக்கமுறுகின்றனர். (கூஙஙஇ)
வெகுளி இளிவரல் இவற்றின் கலவை
எவ்வாறெனில்:—
[149]வீரருத்திரனது வாட்படை இறைச்சியைப் புசித்து, களிற்றின் கதுப்பிற் பெருகு மரத்தமாகிய கட்பெருக்கைப் பருகி மூளையிற் பொருந்து மென்புக்களால் திற்றிப்பல்லைப் படைத்து செருக்குடன் அரசருடலைத் துணித்து நரப்பு மாலையையணிந்து மக்களையச்சுறுத்தி பைரவனுருக் கொடு கொடியதாய்ச் செருக்களமாகுங் காளிதேவியர்க்குக் களிங்கராற் பலிபூசனையாற்றியது. (கஙசஇ)
இங்கனம் பிறவும் வந்துழிக்காண்க.
இங்கட்சுவை[150] தலைவனைப் பற்றியதேயாம். கலைவல்லோனாகிய[151] நடனது செயலானும், அத்தகைய காப்பியக் கேள்வியின் வலியானும் அவையினர் அச்சுவையைக் கண்கூடாய்த் துய்ப்பரேல், அஞ்ஞான்று அச்சுவை, பிறன்கட் டோன்றியதாயினும் அதன் நன்னுகர்ச்சியாற் பிறவழி யெல்லையிலின்பவிளைவு முரண்படா.
அன்றியும்[152] மாலதி முதலிய சொற்களாற் பெண்மாத்திரை யிலுண்டாமுணர்ச்சியிலும், இராவணன் முதலிய சொற்களாற் பகைமாத்திரை
யிலுண்டாகுமுணர்ச்சியிலும் நினைவையெய்திய அவ்வப்பெண் விசேடமாகிய அநுகாரியமுகமாகச் சுவை, அவையினரைப்பற்றி நிற்பதாமென்பதூஉம் முரண்படா.
நடன் அவிநயத்தளவின் அமைதலான் அவன் சுவை நிலைக்குத் தக்கவன் அல்லனே யாம். “அவன் சுவை நுகர்ச்சியில் சிறந்தவன்” எனக் கொள்வேமெனில், அந்நடன் அவையினருள் ஒருவனேயாவன். அநுபாவம் முதலியவற்றை வெளிப்படுத்தலோ எனில் கோடல், கொண்டன, பயிறல் என்னுமிவற்றின் வலியானே அது பொருந்துவதாம்.
ஒன்றற்கொன்று மறுதலையாகிய சுவைகளும், கவிகளின் சீரிய சொல்லமைவைப்பற்றி ஓரோவழிக்கூடுதல் முரண்படா.
மறுதலை முறை சிருங்கார திலகத்தில் கூறப்பட்டுள்ளது.
“உவகையும் இளிவரலும், பெருமிதமும்
அச்சமும், வெகுளியும் வியப்பும், நகை
யும் அழுகையும், ஒன்றற்கொன்று
மறுதலைச்சுவையாம்” என்று.
ஒரு சுவையிலிருந்து பிறிதொரு சுவையின் தோற்றமும் விரும்பப்பட்டதாம்.
அங்ஙனமே சிருங்கார திலகத்திலுங் கூறப்பட்டுள்ளது.
“உவகையினின்றும் நகைதோன்றும்;
வெகுளியினின்றும் அழுகை தோன்றும்;
பெருமிதத்தினின்றும் வியப்பு தோன்றும்;
இளிவரலினின்றும் அச்சந்தோன்றும்” என்று
சிருங்கார திலகத்தில், அவ்வச்சுவைக்கேற்ற பெற்றி வியபிசாரிபாவங்கள் என்னும் குறிப்புக்களும் கூறப்பட்டுள்ளன.
ஐயம் அழுக்காறு அச்சம் வாட்டம்
நோய் சிந்தை நினைவு, தைரியம்
பேரவா வியப்பு தடுமாற்றம் நாணம்
உந்மாதம் களிப்பு துன்பம் மடி
உறக்கம் அடக்கம் சாபலம் மர
ணம் என்னும் இக்குறிப்புக்கள் கூறற்பாலன.
நகைச்சுவையில்
மெய்வருத்தம் சாபலம் உறக்கம் கனவு வாட்டம் ஐயம் அழுக்காறு அடக்கம் என்னுமிவை கூறற்பாலன.
அச்சச்சுவையில்
அச்சம் மரணம் எளிமை வாட்டம் என்னுமிவை கூறற்பாலன.
இளிவரற்சுவையில்
அபசுமாரம் துன்பம் அச்சம் நோய் மரணம் செருக்கு உற்சாகம் என்னுமிவை அறியற்பாலன.
வியப்புச்சுவையில்
தடுமாற்றம் மடி மயக்கம் மகிழ்ச்சி வியப்பு நினைவு என்னுமிவை கூறற்பாலன.
அழுகைச்சுவையில்
எளிமை சிந்தை வாட்டம் வெறுப்பு மடி நினைவு நோய் என்னுமிவை கூறற்பாலன.
வெகுளிச்சுவையில்
மகிழ்ச்சி அழுக்காறு செருக்கு உற்சாகம் களிப்பு சாபலம் கொடுமை யென்னுமிவை கூறற்பாலன.
பெருமிதச்சுவையில்
பொறாமை தெளிவு ஊகம் அறிவு தைரியம் சினம் அழுக்காறு மயக்கம் தடுமாற்றம் மகிழ்ச்சி செருக்கு களிப்பு கொடுமை யென்னுமிவை கூறற்பாலன.
எல்லாச் சுவைகளும் ஒரோவொன்றும் விபாவம் முதலியவற்றான் நிறைவுற்று உறுப்பாகிய பிற சுவைகளை மறைக்கின்றது. என்று.
பரதமுனி மரபினர் கூறிய முறையாற் சுவையொன்றேயெனினும், மகாகவிகளின் வழக்காறு[153] பற்றி சுவைக்கலவை கொள்ளற்பாலது.
அக்கலவையில் சுவை முதலியவற்றிற்குச் சிறப்பில் வழி சுவையுடையணி முதலியன (****) நிகழ்கின்றன.
ஒரு சுவைக்குறுப்பாகப் பிறிதொரு சுவையைக் கூறிய வழி சுவையுடையணியாம்.
குறிப்புகளைக் கூறிய வழி பிரேயோலங்காரம். (****)
போலிச்சுவை போலிக்குறிப்பு இவற்றைக் கூறிய வழி ஊர்ச்சசுவிதலங்காரம்.(****)
குறிப்படக்கத்தைக் கூறிய வழி சமாகிதாலங்காரம். (****)
அங்ஙனம் குறிப்பெழுச்சி முதலியனவும் ஆம்.
இஃது அலங்கார சருவசுவத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
“சுவைக்குறிப்பு அதன் போலி அதன்
அடக்கம் என்னும் இவற்றைக் கூறி
யவழி இரசவத் பிரேய ஊர்ச்
சசுவிது சமாகிதம் என்பனவாம்.
குறிப்பெழுச்சி குறிப்படக்கம்
குறிப்பினியைபு குறிப்பின் கலவை
என்னுமிவை, தனிப்பட்ட அலங்கா
ரங்களாம்” என்று.
இவற்றின் எடுத்துக்காட்டுகள், அணியியலின்கட் கூறப்படும்.
குணம்[154] அணி யிவற்றின் நிறைவான் வெளிப்பட்டு, சுவைத்தன்மையை யெய்தற்குரிய நிலையிற் றோன்றும் ஸ்தாயிபாவத்தின் இனங்கள், வேற்றுப் பொருளைப் பற்றிய நினைவை முறையே விலக்கித் தலைவன் றலைவியர்க்கு இன்பத்தையாதல் துன்பத்தையாதல் உறுதிப்படுத்துவனவாமெனினும், அவையினர்பால் எல்லையில் இன்பவடிவாய் நிறைவுறுஞ் சுவைப் பெருக்கமாகப் பரிணமிக்கின்றன. (கஙருஇ)
சுவை[155], வாக்கியப் பொருளாய் விளக்கமெய்துகின்றது; இவ்விபாவம் முதலியனவோவெனில் பதப்பொருள்களாம்; அவை அச்சுவையில் உரிய ஓய்வினை யெய்துகின்றனவன்றே! ஆதலின் ஸ்தாயிபாவங்களே, தத்தம்
வளங்கள் முறையே வளரப்பெற்றுப் பின்னரே! பஞ்சிநூல் படத்தன்மையை யெய்தியாங்கு, அவை சுவைத்தன்மை யெய்துகின்றன. (கஙசாஇ)
அலைகள் கடலில் விளைந்து அக்கடலிலேயே அவையொழிவெய்தியாங்கு, குறிப்புகளும்[156], விளக்கமிக்க இரதி முதலிய ஸ்தாயிபாவங்களில் அடிதொரும் விளைவெய்தி அங்ஙனமே அவ்வுருக்கொண்டொழிகின்றன. சுவை, வெறுப்பு முதலிய குறிப்புகளினுகர்ச்சியாலாக்கப்பட்டுத் தன்னளவிலறியக் கிடக்கும் பேரினிமையுடையதாய் உலகில் அநுகாரியர்பாலும் கூத்தில் அவையினர்பாலும் நிலைபெறுவதேயாம். (கஙஎஇ)
விதயாநாதனாலியற்றப்பட்ட “பிரதாபருத்
திரன் புகழணி, யென்னுமணியிலக்கணத்
தில் சுவையியல் முற்றிற்று.
[1] இங்ஙனம் கூறிய சுவைக்குக் கருவிகள், காப்பியத்திற் கூறப்படுஞ் சுவைப்பொருள் முதலியனவாதல், திறமைவாய்ந்த நடன் அவிநயஞ் செய்யுங்கால், அவ்வவிநயத்தைக் கண்ணுறும் அவையினராற் பாவிக்கப்படுமவையாதல் கருவிகள் என்பது கருத்து.
[2] இனிய நிலை — கறி முதலியவற்றின் சேர்க்கையாற் சோறு இனியதாதல் போல விபாவம் முதலியவற்றின் சேர்க்கையால் ஸ்தாயிபாவமும் இனிய நிலையை யெய்துகின்றதென்பதாம்.
[3] பாவம் — இஃது ஈண்டு உய்த்துணரற்பாலது;
காப்பியத்தாலாதல் அவிநயத்தாலாதல் இராமன் முதலினோரின் இன்பதுன்பங்களையறிந்த வழியவற்றின் அநுபவத்தால் விளைந்த வாதனைவடிவாய் “சம்ஸ்காரம்” என்னும் பிறிதொரு பெயரினையுடையதாய் விளங்கும் அவையினரின் மனோவிகாரம் பாவம் என்பதாம்.
அங்ஙனமே கூறப்பட்டுள்ளது:-
“இன்பத்துன்பங்கள் முதலிய குணங்க
ளான் அவையினரது மனம், அவ்வண்
ணமாதல் பாவம் ஆம்” என்று.
அந்தப்பாவம், அணிமைத்து சேய்மைத்து என இருதிறத்து; அவற்றின் அணிமைத்தென்பது, ஆடைக்கு நூல்போலச் சுவைக்கு, வடிவளவில் விலகிய ஸ்தாயீபாவம் என்று கூறப்படும். “அந்த ஸ்தாயீபாவமே சுவை”, என விளங்க வைத்திருத்தலான். அங்ஙனமே பெரியாரும்,
எந்த பாவம், வலிந்திழுக்கப்பட்டு, சுவைத்தன்மையை
யெய்துகின்றதோ; அந்த பாவமே, ஸ்தாயீபாவம்
எனப் பரதமுனி முதலினோர் கூறுப”, என்று கூறியுள்ளார்.
சேய்மைத்தென்பது சேணியர் போல்வது; ஸ்தாயி பாவத்தான் மறைவுற்று விலக்கமெய்திய விபாவம் முதலியதாம்; அது ஸ்தாயிபாவத்தின் வாயிலாகச் சுவையினை மலர்விக்கும் எனக் கூறியிருத்தலான். இதனால் பிரமானந்தத்தை நிகர்த்த சுவையினுடைய முன்னவத்தை விசேடம், அவையினரது உள்ள நெகிழ்ச்சியாகும் உபாதியுடையதாய் ஸ்தாயீபாவம் ஆம் என்பது பெற்றாம்.
அதனாற் பெரியாரும்:-
“உவகை முதலியவற்றின் நுகர்ச்சிக்குரி
ய நிலையில் அமைவுறுந் தனது சத்துவம்
பாவம் ஆம்” என்று.
உண்மைப் பேதத்தைப் பற்றிய ஐயப்பாடில்லதூஉம், உபாதியற்றதூஉம், சன்மாத்திரையிலமைவதூஉம் ஆகிய சுவைக்கு அவத்தையினியைபு, பொருந்துமாறென்னையென ஐயுறற்பாலதின்று; “விண்ணடுவணொளிரும் தண்கதிர்ச்செல்வற்கு நீர்முதலியவுபாதியினியைபு நிமித்தமாய அலைவமைந்தாங்கு” என்னும் உத்தி கூறி விளக்கற்பாலதாகலின்.
உபாதி — தனக்குரியதன்மை வேற்றுப்பொருளை யெய்தியாங்குத் தோற்றுவிக்கும் பொருள்.
ஒத்ததன்மையது — ஒருதலைவியின்பால் ஒருதலைவன் வைத்த காதற்குணத்திற்கு, பிறிதொரு தலைவியைப் பற்றிய காதல் ஆம். பிறதன்மையது — முரண்படுமியல்புடையதென்பது கருத்து. இளிவரல் முதலியதாம். உவர்க்கடல், தன்னுட் கலந்த இனிய ஆற்று நீரையும் உவர்ப்படுத்தாங்கு தன்னைச் சார்ந்தவற்றையெல்லாம் தன்னோடொற்றுமைப்படுத்தும் ஸ்தாயீபாவம் பிறவற்றாற் சிறிதுங் கேடுறாதென்பது கருத்து.
[4] நுகர்ச்சி நிறைவுறுங்காறும் — அந்தக்கரணவிருத்தி, சுவைப்பொருளைப்பற்றிய வழி அஃது எவ்வாற்றானுங்கேடுறாது அப்பொருள்வடிவாய் நிற்றலே நுகர்ச்சியாம்; இதே ஸ்தாயீபாவம் நிலைபெறுதலின் இலக்கணம் ஆம்.
[5] உவகையொன்றே சுவையென்ப சிருங்காரப் பிரகாசநூலார். சமநிலையின்றிச்சுவை யெட்டனக் கூறுப தனிகர் முதலினோர். சமநிலையும் அன்புச்சுவையுங் கூட்டிச் சுவை பத்தென்ப பிறரும். இத்தகைய முரண்பாட்டினால் விளையுஞ் சுவையலகின் ஏற்றத்தாழ்வைப் பரிகரித்தற் பொருட்டு முன்னையாசிரியராற் கூறப்பட்ட சுவையென்றான் என்க. உறுதிப்பயன் நான்கனுள் எல்லாவுயிர்களின் நுகர்ச்சிக்கு எளிதாகிய இன்பமே யாவர்க்குமினியதாகலின், அவ்வின்பந்தருமுவகைச் சுவையை முதற்கண் வைத்தான். அதனால் நகை விளைகின்றதாகலின் அதன்பின் நகையை வைத்தான். அதன்பின் அதற்கு மறுதலையாகிய அழுகையை வைத்தான். அதன்பின் இன்பத்திற்கேதுவாய பொருட்சிறப்புடைய வெகுளியை வைத்தான். பொருளும் இன்பமும் அறத்தை யடிப்படையாக வுடையவாகலின் அறச்சிறப்பெய்திய பெருமிதத்தை யதன்பின் வைத்தான். அப்பெருமிதம், அஞ்சினோர்க்கபயமளித்தலானே சிறக்கின்றதாகலின் அதன்பின் அச்சத்தை வைத்தான். அவ்வச்சத்திற்குக் காரணமாகிய இளிவரலை யதன்பின் வைத்தான். பெருமிதங்காரணமாக வந்த இவற்றிற்குப்பின் அவ்வீரத்தின் பயனாகிய மருட்கையை வைத்தான். இங்ஙனம் முப்பொருட்குரிய சுவைகட்குப் பின்னர் வீடு பேற்றிற்குரிய சமநிலையை வைத்தான் என்க.
[6] சுவைகளை — ஈண்டு உலகிற்கியல்பாகத் தோன்றும் இரதி முதலிய ஸ்தாயிபாவங்களை; அவை, சோறு சமைகிறது என்புழிப்போல எதிர்கால நிலை கொண்டு வழங்கப்படுகின்றன. உரிய சுவைக்கு உறபத்தியின்மையான். இதனால் உலகில் தலைவன் றலைவி முதலிய ஆலம்பன காரணங்களும், குறியிடம் காலம் முதலிய உத்தீபன காரணங்களும் காப்பியம் நாடகம் இவற்றின் வாயிலாக அவையினரகத்து உருக்கொடுதோன்றி, அவராற் பாவிக்கப்படுதலான் அவர்பால் அமைந்தவாய் ஆலம்பனவிபாவம், உத்தீபனவிபாவம் எனக் கூறப்படுகின்றன; என்னுமிப்பொருள் விபாவம் என்னுஞ் சொல்லாற் போதரும்.
[7] காரியப்படுதலாவது, பிற்காலத்தில் உறுதியாக உற்பவித்தலாம்; அக்காரியத்தன்மையும், அநுபாவத்திற்குச் சுவைநோக்கி நிகழ்வதா? அன்றேல் ஸ்தாயிபாவத்தை நோக்கி நிகழ்வதா?
- சுவைநோக்கி நிகழ்வதின்று.
“சுவைப்பொருள் அநுபாவம் விறல் குறிப்பு என்னுமிவற்றால் இனிய நிலையெய்து ஸ்தாயிபாவம் சுவையெனப்படும்” என்புழி இவற்றாலென்னும் மூன்றனுருபு கருவிப்பொருளதாகலின், சுவைக்குக் கருவியாகிய அநுபாவம், அச்சுவைக்கு முன்னரே தோன்றுமாகலான். கருவிப்பொருளுக்கு முற்பொழுதி லின்றியமையாதிருத்தலென்னும் இலக்கணத்தையுடைய காரண விசேடத்தன்மையுண்மையான். இங்கண் மூன்றனுருபிற்குக் கருத்தா முதலிய பொருள் வேறுபாடு, கொள்ளற்பாலதின்று; கொள்வேமெனின், அநுபாவத்தைப் பற்றிச் சுவையும் சுவையினைப்பற்றிய நுபாவமும் நிகழுமென – “ஒன்றையொன்று பற்றல்” என்னுங் குற்றமாமாகலின்.
- ஸ்தாயிபாவத்தை நோக்கியும் நிகழ்வதின்று.
ஸ்தாயிபாவமே சுவையாகப் பரிணமிக்கின்றதாகலின்; அதனால் அநுபாவத்திற்குச் சுவை நோக்கிக் காரியத்தன்மையின்றெனக் கூறியாங்கு, ஸ்தாயிபவத்தை நோக்கியும் அத்தன்மையின்றாமென்பது போதரும்.
அவையினரகத்தில் நிலைப்பெய்தும் ஸ்தாயிபாவத்திற்கு முன்னரே நிகழும் மடந்தையரின் கடைக்கணித்தல் புருவநெறித்தல் முதலிய அநுபாவங்கள், அதற்குக் காரியமாகாவன்றே; ஆதலின், ஸ்தாயித்தன்மையை யெய்தற்குரிய இலௌகிக இரதி முதலியவற்றிற்குக் காரியமாகிய கடைக்கணித்தன் முதலியன, அவையினரகத்திலெதிருருப்பட்டு அவரது மனத்திலிருக்கும் இரதி முதலிய ஸ்தாயிபாவங்களை, வெளிப்படுத்துகின்றனவாகலின் அவற்றை, அநுபாவம் என்று கூறுவர் என்பதாம்.
(****) இக்குறியிடப்பட்ட அனைத்தும் தெலுங்கு மொழியில் உள்ளன. பின்னர் இவற்றையும் இங்கு தருவதற்கு முயற்ச்சிக்கிறோம்.
வெளிப்படுத்துகின்றதென்பது அச்சொற்கு உரியபொருளாம். அங்ஙனமே பெரியாரும்,
“புருவனெறித்தல் கடைக்கணித்தல் முதலிய
விகாரங்கள், மனத்துறும்ஸ்தாயிபாவத்
தை வெளிப்படுத்துகின்றனவாகலின்” அவை
அநுபாவம் எனக் கூறப்படும்.
என்று கூறியுள்ளார். இதனால் அநுபாவம், இலௌகிக இரதி முதலியவற்றை நோக்கிக் காரியப்படுவதாம்.
[8] சாத்துவிகங்கள் — இவற்றை விறல் என்ப. இலௌகிக இரதி முதலியவற்றை வெளிப்படுத்துமுகமாகக் காரியப்பட்டு அநுபாவத்துளடங்குமாயினும், பிராமண பரிவிராசக நியாயத்தால் வேறுபடுத்துக் கூறுவதிற் சிறப்பு நிமித்தத்தை யீண்டுக் கூறுகின்றார். பிறரெய்திய இன்பத்துன்பங்களை அவிநயாதி வாயிலாகப் பாவித்தலில் அந்தக் கரணத்தின் மிக்கவநுகூலமாந்தன்மை, சத்துவம்ஆம். அத்தகைய சத்துவத்தினின்று விளைவன சாத்துவிகங்களாம்; சத்துவமெனக் கூறத்தகுமித்தகைய அந்தக்கரணத்தால் கடைக்கணித்தன் முதலியன பாவிக்கப்படுகின்றனவாகலின், அவையநுபாவங்களே யன்றிச் சாத்துவிகங்களாகா வென்பது கருத்து. அங்ஙனம் பாவப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.
“பிறருடைய இன்பத்துன்பங்களைப் பாவித்த
லில் மனம், எந்த மிக்க அநுகூலத்தன்மை
யால் அவ்வண்ணமாந்தன்மையெய்து
கின்றதோ அத்தன்மை சாத்துவம்ஆம்.
அதனால் நிகழ்வனவும் சாத்துவிகங்களாம்
எனக் கூறப்படும்; இச்சாத்துவிகங்களுக்
குப் பொதுவகையாலநுபாவத்தன்மையுண்
டெனினும், இவை சத்துவத்தானிகழ்வன
வாகலான் சிறப்புவகையாலிலக்கணங்கூ
றப்பட்டது. அச்சாத்துவிகங்களும்,
தம்பம் முதலியனவாம்” என்று.
இங்கண் அவ்வண்ணமாந்தன்மை யெய்தலாவது மனம், அவ்வின்பத்துன்ப வடிவாய் நிற்றலாம். அங்ஙனமே பெரியாரும்,
“அவையினர், இராமன் முதலியோரது இன்பத்
துன்பங்களையநுபவித்தலான், அவரதும
னம் அவ்வடிவாய் நிற்றல் அவ்வண்ண
மாந்தன்மையெய்தலாம்” என்று.
இங்ஙனமாக, விபாவம் முதலியவற்றின் காட்சியான் விளைந்த அநுராகம், நிருவேதம் முதலிய மனோவிருத்திகள், விபாவம் முதலியவற்றின் தன்மயமாம் வடிவினதும் சத்துவமென்னுஞ் சொற்குப் பொருளாயதும் அவையினர் மனத்தின் மிக்கவநுகூலத்தன்மையான் விளைவுற்றதுமாகிய சிறப்பு நிமித்தத்தாற் பிறிதவத்தை யெய்தித் தம்பம் முதலிய பாவங்களாய்ச் சாத்துவிகபாவங்களாகின்றன. அவைகளும், தங்காரியங்களாகியவும் அதனால் சாத்துவிகம் என்னுஞ் சொல்லான் விளக்கற்குரியனவும் புறத்தன்மைவனவும் சடத்தன்மையும் பௌதிகத்தன்மையும் உள்ளனவும் மெய்யின்கட்டோன்றுவனவும் ஆகிய தம்பம் முதலிய அநுபாவங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. அதனால் இரதி நிருவேதம் முதலிய பாவங்களே புலப்படுத்தவாறாம் என்பது பெற்றாம். அங்ஙனமே, ஏமசந்திர ஆசிரியருங் கூறியுள்ளார்.
“புறம்பாகிய தம்பாதிகளோவெனில் உடற்கு
ணங்களாகிய அநுபாவங்களாம்; அவை
களும், அகக்கண்ணவாகிய பாவங்களைத்
தோற்றுவிப்பனவாய் உண்மைநிலையில்
இரதிநிருவேதாதியவற்றைத் தோற்று
விப்பனவாம் என்பது உறுதியாம்” என்று.
இதனால் ஸ்தாயி சஞ்சாரியென்னுமிவற்றின் குழுவே உயிரின் மனோமயநிலையையெய்தி காரணகாரிய வடிவாலிருதிறப்பட்டு அகப்புறக்கண்ணவாகிய சாத்துவிகக்குணங்களை விளைவிக்கின்றது என்பது உட்கிடையாம்.
[9] வியபிசாரிபாவம் — இச்சொல், வி அபி என்னும் அடையுருபகளோடியைந்து “நடை” யென்னும் பொருளதாகிய “அர” என்னும் வினைப்பகுதியினடியாகப்பிறந்து ஸ்தாயிபாவத்தை நன்கு வளத்தற்கே இயங்குவது என்று பொருள்படும். இங்ஙனம் இச்சொல்லின் பொருளளவில் வெறுப்பு முதலியவற்றின் பொதுவிலக்கணம் போதரும் எனக்கருதிப் பொதுவகையானும் சிறப்புவகையானும் அவற்றின் பெயர்க்குறிப்பைக் கூறுகின்றார். இதனைத் தொல்காப்பியர், குறிப்பென வழங்குப; இக்குறிப்புகள், கல்லோலம் கடலைப் பெருக்கியாங்கு இலௌகிகங்களாகிய இரதி முதலியவற்றை வளர்க்குங்கால், சககாரிகன் (ஸஹகாரி) என்னும் பெயரெய்தியவாய் காப்பியம் நாடகம் இவற்றில் வியபிசாரிபாவங்கள் என்று வழங்கப்படுகின்றன. இஃது ஈண்டு அறியற்பாலது.
செயலிலக்கணம் அமைந்து உத்தீபனவிபாவங்களாகிய பாவம் ஆவம் என்னுமிவை முதலியன உவகைச்சுவையின் காரியமாகலான் இவற்றிற்கு அநுபாவத்தன்மை போதருகின்றது. கடைக்கணித்தல் புருவநெறித்தல் முதலிய அநுபாவங்கள், காதற்பற்றை விளைவித்தலான், அவற்றிற்கு விபாவமாந்தன்மை நிகழ்கின்றது. இங்கட் கூறியுள்ள இவ்விரண்டும் அலையென அமைந்து சுவையினை வளர்த்தலான் இவை வியபிசாரிபாவமாந்தன்மையை யெய்துகின்றன. சிந்தை முதலிய வியபிசாரிபாவங்கள் யாவும் அநுராகத்திற்குக் காரியமாகலான் இவை அநுபாவங்களும் ஆம். அத்தகைய வியபிசாரிபாவங்களின் காட்சியானும் கேள்வியானும் காதற்பெருக்கம் விளைதலான் அவற்றிற்கு விபாவத்தன்மையும் விளைகின்றது. அங்ஙனமே பாவப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.
“விபாவம் அநுபாவமாகவும், அநுபாவம் விபா
வமாகவும், அவ்விரண்டும் வியபிசாரிபாவங்
களாகவும், அவ்வியபிசாரிபாவங்களே ஒன்
றற்கொன்று விபாவஅநுபாவங்களாகவும்
ஆம்” என்று.
அதனால் இங்கட்கூறிய விபாவம் முதலியவற்றின் வரையறை, எங்ஙன் அமையுமெனில்; உண்மையே; ஒருபடித்தாய காதல் வெளிப்படுதற்கு எவை, காரியம் காரணம் கருவியென்னு மிவைகளாக அமைகின்றனவோ; அவை அவ்வெளியீட்டைக் குறித்து அவ்வப்படியேயாம்; சிறிதுங் கலப்பென்ன்பதின்று. வேறு காதலின் வெளியீட்டைப் பற்றிய வழியாதல், ஒரே காதலை வேறுபடித்தாகக் கருதிய வழியாதல், காரியகாரண கருவித்தன்மைகள் மாறுபட்டுழிமுரண்பாடென்னே? எவ்வாறெனில், ஒருவற்கு மகனை நோக்கிய வழி தந்தையாந்தன்மையும், தந்தையை நோக்கிய வழி மகனாந்தன்மையும் அமைவது காண்க. ஆதலின் விபாவங்களும் எதிர்மறை வேறுபாடுகளாற் கற்பிக்கப்பட்ட வேற்றுவடிவுடையனவாய் அவற்றிற்குக் கலவை நிகழுமென்னும் ஐய்யத்திற்கிடன் இன்மையான் விபாவம் முதலியவற்றிற்குக் கூறிய வரையறை, சாலப்பொருந்துமென்பது போதரும்.
[10] புணர்ச்சியென்பது தலைவன் தலைவியரது ஒருவர்க்கொருவர் காட்சி தழுவல் முதலிய இன்பம் விளைக்கும் செயலாம்; அதைப்பற்றிய விருப்பமாவது மகிழ்ச்சியின் வடிவாகிய மனோவிருத்தியாம்.
[11] காமற்கும் — இச்சொற்றடராற் றன்னைக் காதலித்த காதலனைப் பெறுதற்கே விளைந்த மிகுமகிழ்ச்சியெய்திய ஆலம்பனவிபாவமாகிய தலைவியொருத்தியின் மகிழ்ச்சி வடிவாகிய இரதி, குறிப்பிற்புலப்படுத்தவாறு; இரதியும், இயல்பு முதலிய நிமித்தங்களின் வேறுபாட்டினால் எழுவகைப்படும்; அவற்றுள், காமன் மதி வசந்தன் இவற்றில் வெறுப்பானும், காதலனைப் பற்றிய விருப்பானும் இங்கட்கூறிய இரதி, செருக்கு நிமித்தமாக நிகழ்ந்ததென அறியற்பாலது. இஃதொன்றே எனது விருப்பிற்குரியது; பிறிதன்று. என்னும் நம்பிக்கையே செருக்கென்ப. பிறவேறுபாடுகளின் எடுத்துக்காட்டுகள் ‘இரசாருணவம்’ என்னும் நூல்வாயிலாகக் கண்டுணர்க
[12] வேறுபாடுகள் — தன்னுடையவாதல் பிறனுடையவாதல் வேடம் பாடை உடல் இவற்றின் வேறுபாடுகளாம்; முரண்படு வேடம் விளக்கமில் பேச்சு கூன் ஆதிய இவைகளாம். இவற்றைக் காண்டலானும் கேட்டலானும் விளையும் மனோவிகாரம் நகை யென்பதாம். அந்நகை, கண்ணீரரும்பல் முதலிய விறல்களானும் உறக்கம் மடி முதலிய குறிப்புக்களானும் வளர்ந்து தலையிடை கடையென்னும் முத்திறத்து மக்கள்பாலும் தனித்தனி இரண்டிரண்டு வகையாக அமைவதால் அறுவகைப்படும்; அவை, கண்மலர்ச்சியளவில் அமைவது ‘ஸித0’ என்றும் பற்சிறிது துலங்குமளவிலமைவது ‘ஹஸித0’ என்றும், இனிய ஓசையுடையது, ‘விஹஸித0’ எனவும், உறுப்புக்களுடன் தலையையும் அசைத்தல் ‘உதஸித0’ எனவும் கண்ணீரொழுக நகைப்பது ‘அபஹஸிதம்’ எனவும் மெய்மறந்து சிறிப்பது ‘அதிஹஸித0’ எனவும் ஆம். தலையிடை கடையென்னும் மக்கள்பால் இவ்வாறும் இவ்விரண்டாக அமைந்து தன்பாலும் பிறர்பாலுமென இருவகையவாய் அறுவகைத்தென்பது கருத்து.
“தலைமக்களுக்கு தன்னுடையவும் பிறனுடையவும் வேறுபாட்டினைக் காண்டலான் முறையே ஸிதமும் ஹஸிதமும் ஆம். இடை மக்களுக்கு விஹஸிதமும் உதஸிதமும் ஆம். கடைமக்களுக்கு சாவஹஸிதமும் சாதிஹஸிதமும் ஆம்”, என்று.
[13] இங்கட்கூறிய நகை கடைமக்கள்பாற் பொருந்தி பிறரது வேடத்தான் விளைந்ததாம். கீ, கீ என்பது கீழ்மக்களது மிகப் பெருநகையின் ஒலிக்குறிப்பாம்.
[14] இங்கண், நிலத்திற் புரளுதல் மார்பினையடித்தல் முதலிய அநுபாவங்களும், எளிமை மயக்கம் மனக்கலக்கம் துன்பம் என்னும் இவை முதலிய வியபிசாரி பாவங்களும் அழுகைச்சுவையை வெளிப்படுத்துகின்றன. பகைமனைவியர் வாய்விட்டழுதலாற் காதலர் பிரிவு அரசியல் அழிவு என்னுமிவற்றான் விளைந்த துன்பமிகை புலனாம்.
[15] பகைவரெனக்கூறியது பணியாளர் முதலியோர்க்கும் உவலக்கணம் ஆம். இங்கட்கூறிய சினம், குரோதம், கோபம் உரோசம் என மூவகைத்து; அவற்றுள், குரோதம் தீயவரையெய்திக் கொலை அவமதிப்பு முதலிய நிகழும் வரை நிலைத்திருப்பதாம். கோபம், சிறந்த வீரரை யெய்தி பகைவர் வேண்டிக் கொள்ளும் வரை நிலைப்பதாம். உரோசம், ஆடவர் மகளிருள் ஒருக்கொருவரைப் பற்றியதாய் ஒருவரையொருவர் இன்னுரையாலின்புறுத்தித் திருப்பும் வரை நிலைத்திருப்பதாம்.
[16] இச்சுலோகத்திற் பகைவரின் காட்சியாகும் விபாபவமும், உறுமுதல், பற்கடித்தல் முதலிய அநுபாவங்களும் செருக்கு பொறாமை முதலிய வியபிசாரிபாவங்களும் விரவிய சினம் வெகுளியாகும் என்பதாம். “காகதிவீரருத்திரன்” என்பது, மெய்நீங்கிய எழக்கரமந்திரமெனக் கொள்க.
[17] கடற்கலக்கத்தையும் மலையின் செயலையும் விலக்க யாமேவலமுடையேம் என்னுஞ் சொற்றொடக்கத்தாற் பகைவரை வேறற்குரிய உற்சாகம் புலப்படுத்தவாறு. இங்கண், தற்புகழ்ச்சி அயற்பழித்தல் முதலியன இவ்வீரர்க்கு உண்மையான் இவர் தீரோத்தத்தலைவராவர்; அத்தலைவர், பெருமிதச் சுவைக்கும் உரியராகலான். இவ்வுற்சாகமே, பிரதாபம் விநயம் முதலிய விபாவங்களானும் அருள் போர் முதலிய அநுபாவங்களானும், செருக்கு மகிழ்ச்சி முதலிய வியபிசாரிபாவங்களானும், பெருமிதச்சுவையாகின்றது; அப்பெருமிதம், கொடை போர் அறம் என்னுமிவற்றான் முத்திறத்தென்ப. அறநிலையில் அருளெனக் கொண்டு மூவகைத்தென்ப தனிகர் முதலியோர். கொடைவீரர், பலி, பரசிராமன் முதலியோர்; போர்வீரர், இராமன் முதலியோர்; அறவீரர், யுதிட்டிரர் முதலியோர்; அருள்வீரர், சீமூதவாகனன் முதலியோர். இங்கண் வியர்த்தல் கண்சிவத்தல் முதலிய அநுபாவங்கள் இல்வழி போர்ப்பெருமிதமும், அவையுள் வழி உருத்திரச்சுவையும் ஆம்.
[18] முதலியவற்றான் என்றதனான், அச்சுறுத்தும் ஒலி முதலியவற்றைக் கேட்டலான் விளையும் மனக்கலக்கமும் பயம் ஆம் என்பது போதரும். இவ்வச்சம், மகளிர் கீழ்மக்கள் இவர்பால் இயல்பானும், மேன்மக்கள்பாற் செயலானும் நிகழும் என்ப ஏமசந்திரன் முதலியோர்; சிங்கபூபாலன், எங்கணுஞ் செயலானேயாம் என மறுத்துரைத்தார். பல திறப்பட்டதென்ப பிறரும். இங்கண் பகைவரை விட்டகலாப் பயமெனும் ஸ்தாயீபாவம் புலனாம்; இது, உடல் நடுக்கம் வியர்த்தல், வெதும்பல் குரற்சிதைவு முதலிய விறல்களானும் எளிமை பரபரப்பு மயக்கம் முதலிய குறிப்புகளானும் அச்சச்சுவையாக ஆகின்றது.
[19] அரத்தம் கக்கல் முதலிய இழிபொருள்களைக் காண்டலானும் கேட்டலானும் உண்டாகும் மனக்கூச்சம் இளிவு ஆம்; இது மூக்கை மூடல் காறுதல் முதலிய அநுபாவங்களானும், பயம் நோய் முதலிய வியபிசாரிபாவங்களானும் இளிவரலாகின்றது. அது, சுவைப்பொருளின் வேறுபாட்டினால், சோபம் உத்துவேகம் என இருவகைத்து. “அரத்தம் நரம்பு முதலியவற்றைக் காண்டலானும் கேட்டலானும் உண்டாவது சோபமும், புழுகக்கல் தீமணம் மலம் என்னும் இவற்றால் விளைவது உத்துவேகமும் ஆம்” எனப் பாவப்பிரகாசம் கூறும். இங்கட்கூறிய எடுத்துக்காட்டு சோபம் ஆம்.
[20] அருமைப்பொருளென்பது — ஈண்டுத் தன்னியல்பைக் கடந்து நிற்கும் பொருளை; அதன் காட்சி முதலியவற்றால் விளையும் மனவெழுச்சி வியப்பு ஆம்; அவ்வியப்பே, தற்செயலாய்த் தன்விருப்பு நிறைவுறல், அருமைப் பொருளின் காட்சி முதலிய விபாவங்களானும், கண்மலர்ச்சி பாராட்டுரை முதலிய அநுபாவங்களானும் மகிழ்ச்சி பரபரப்பு முதலிய குறிப்புக்களானும் மருட்கைச்சுவையாகின்றது. இவ்வெடுத்துக்காட்டிற்கூறிய, “கூறற்கரியவாய் வேறுபட்டு விளங்குகின்றன” என்னுஞ் சொற்களான், வீரருத்திரன்பால் விளங்கும் ஒரோவொன்றும் அருமைப்பொருளெனப் புலனாகலின், அவ்வுயர்வு முதலியவற்றைக் காண்டலான் மருட்கைச்சுவை நிகழ்ந்ததென்பது கருத்து.
[21] முதலிய என்றமையான் இறைவனருள், நல்லாரிணக்கம் முதலியன கொள்ளற்பாலன.. விகாரம் — புலன்களைப் பற்றிய விருப்பு; அவ்விருப்பு நீங்கிய மனமுடைமை சமம் ஆம். இஃது இயமம் நியமம் முதலிய அநுபாவங்களானும் தைரியம் வெறுப்பு முதலிய குறிப்புகளானும் சமநிலைச் சுவையாகின்றது.
“சமநிலை யொழிந்த வெட்டுச் சுவைகளே கூத்திற்குரியவாம்” எனத் துணிந்து கூறியிருத்தலான் அச்சமநிலைச் சுவை வேண்டாவெனக் கூறுமாலெனில், அங்ஙனங் கூறுவாரை யிங்ஙனம் வினாதல் வேண்டும்.
- ஆசிரியர், சமநிலையின் ஸ்தாயிபாவத்தை விளக்கிக் கூறாமையான் அதற்குச் சுவைத்தன்மையின்றா?
- அன்றியதற்குப் போதிய கருவிகள் இன்மையானா?
- அன்றேல், சிறப்பின்மையானா?
- இன்றேல் இவ்வெட்டனுள் ஒன்றிலடங்குந்தன்மையானா?
- அல்லது உறுதிப்பயன் இன்மையானா? என்று சமநிலை, சுவையாகாதென்பதற்கு இங்கட் கூறியுள்ள ஐவகை நிமத்தங்களுக்கும் தனித்தனியே மறுப்புப் பின்வருமாறு கூறியுள்ளார்.
- வெறுப்பே (**) சமநிலைக்கு ஸ்தாயிபாவம் என்று கூறியுள்ளார். அவ்வெறுப்பும், எல்லாச்சுவைகட்கும் பொதுவாகிய வியபிசாரிபாவமாயினும், அமங்கலவடிவாயினும் சிறப்புவகையாற் சுவையொன்றைக் குறித்து ஒத்ததன்மையிற்றலை சிறந்ததும் பொதுவற நிற்பதும் ஆகிய ஸ்தாயிபாவம் ஆம்; என்று அறிவுறுத்தற்கே அவ்வாசிரியர் விளக்கிக் கூறியுள்ளார். அங்ஙனமே காப்பியப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.
“அமங்கல வடிவாகிய வெறுப்பு குறிப்பு
களின் முதற்கட்கூறற்குரியதன்றாயி
னும் அங்ஙனங்கூறல், அதற்குக்கு
றிப்பாந்தன்மையுண்டெனினும் ஸ்
தாயிபாவத்தன்மையை விளங்கவைத்
தற் பொருட்டென்க; அதனால், அவ்வெ
றுப்பினை ஸ்தாயிபாவமாகக்கொண்ட
சமநிலையும், ஒன்பதாம் சுவையாக
நிலவும்” என்று.
துவனியாசிரியரும் கூறியுள்ளார்.
“ஆசையழிவாகுமின்ப வளர்ச்சியை
இலக்கணமாகவுடைய சுவை, கா
ணப்படுவதொன்றே” என்று.
இதற்கு உரைகூறுமுகமாக உலோசனத்திலுங் கூறப்பட்டுள்ளது.
ஆசை — புலனுகரு விருப்பம்; அதன் அழிவு, அந்நுகர்ச்சியின் ஒழிவெய்தலாகிய வெறுப்பு; அவ்வெறுப்பே இன்பவடிவாய் ஸ்தாயிபாவமாக, அதன் வளர்ச்சி — அவ்வின்ப நுகர்ச்சியானாயது. அதனையிலக்கணமாகவுடைய சமநிலைச்சுவை, காணப்படுவதொன்றே, என்று.
வெறுப்பு, ஆசையழிவின் வடிவாகிய சமத்தின் பரியாயம் ஆம்; இன்பவடிவன்று. எனக் கூறுமாலெனில், அற்றன்று. வேதாந்திகள் கூறும் அவிச்சையின் நிவிருத்தியொப்ப இவ்வாசையழிவுக்கும் இன்பவடிவாந்தன்மையுண்மையான்.
அங்ஙனமே பெரியாரும்,
“மண்ணுலகிற்குரிய காமசுகம், விண்ணு
லகிற்குரிய நல்லின்பம் என்னுமிவை,
ஆசையழிவாகுமின்பத்திற்கு வீசமும்
ஒப்புடையவாகா” என்று.
- அதற்குப் போதிய கருவிகள் இன்மையானா? அன்று; வைராக்கியம் முதலிய கருவிகள் இதற்கு எளியவாகலின். அங்ஙனமே:— வைராக்கியம் iஇறைவனருட்பேறு முன்னைய நலங்களின் பரிபாகம் பெரியாரின் வழிபாடு, வேதாந்த விசாரம் என்னும் இவை முதலியன விபாவங்களாம். இயமம் நியமம் முதலியன அநுபாவங்களாம். உலோசனத்தில், சனகன் முதலியோர்க்குச் செங்கோன்மை முதலியனவும் சமநிலையின் அநுபாவங்களெனக் கூறப்பட்டுள்ளன. அறிவு நினைவு சிந்தை தைரியம் ஊகம் முதலியன வியபிசாரிபாவங்களாமாகலின். சுவைக்கருவிகள் விபாவம் முதலியனவென்று முன்னரே விளக்கியுள்ளோம்.
- சிறப்பின்மையானா? அன்று, அராகம் துவேசம் என்னும் இவற்றான் மாசுறு மனத்தினர் நுகராமை பற்றிச் சிறப்பிலதாயினும் அச்சமநிலைச் சுவையைப் பற்றற்ற பெரியார் நுகர்வராகலின்; ஒரு சிலர் கருத்தாற் சிறப்பின்மை கருதியிது சுவைத்தன்மையின் நழுவுறூஉமெனின், உவகைச்சுவையும் பற்றற்ற பெரியார் கருத்தாற் சிறப்பின்மை கருதிச் சுவைத்தன்மையின் நுழுவுறூஉமெனக் கூறல் வேண்டும்.
- இவ்வெட்டனுளொன்றிலடங்குந்தன்மையானா? அன்று. இஃது உவகைச் சுவையினுள் அடங்குவதின்று; இயபின்மையான்.
“கொடைப்பெருமிதம் போர்ப்பெருமிதம்
அறப்பெருமிதம் எனப் பெருமிதம் முத்
திறத்தென பிரமதேவன் கூறியுள்ளார்.”
என்று ஆசிரியராற் கூறப்பட்டுள்ளது. இச்சமநிலையும் அறச்சிறப்புடைய அறப்பெருமிதத்து ளடங்குமாலெனின், அற்றன்று. பெருமிதச்சுவையின் ஸ்தாயிபாவமாகிய உற்சாகத்திற்கு, “யான் இத்தகையன்” என்னுமித்தன்மையுண்மையாற் பெருமிதம் செருக்குவடிவாயமைவது; சமநிலை, அகங்காரம் யாவும் அடங்கிய வடிவாயமைவது. இங்ஙனமிரண்டிற்கும் மிக்க வேறுபாடுண்மையான்; ஆயின் அருட்பெருமிதத்துளடங்குமெனக் கூறுமாலெனில், அற்றன்று; அவ்வருட்பெருமிதம், இத்தன்மைத்தாமாயின், சமநிலையே பிறிதொரு பெயராற் கூறப்பட்டதாகும். அஃது இத்தன்மைத்தன்றெனில் பெருமிதப்பேதங்களுள் ஒன்றேயாம். அங்ஙனமாயினும் உள்ளடங்கு நிலையையுடன்படுவேமாயின், யாண்டும் ஒரு சுவை வழக்கு நிகழுமாகலின்.
- உறுதிப்பயன் இன்மையானா? அன்று. வீடெனப்படும் நான்காம் உறுதிப்பயன் இச்சமநிலையொன்றானே பெறக்கடவதாகலின். அங்ஙனம் பாவப்பிரகாசத்திலும் கூறப்பட்டுள்ளது. “எல்லாவகையானும் விருப்ப நிறைவெய்தியவனும், மகிழ்வுறு மனமுடையனும் ஆகிய பெரியோன், முடிவில் சமநிலைச் சுவையொன்றானே வீட்டின்பத்தை யெய்துகின்றான்.” என்று உலோசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
“வீட்டின்பத்தை பயக்கு முகமாகச்
சிறப்புறுமுறுதிப்பயனையளிக்க
வல்ல இச்சம நிலை எல்லாச்சு
வையினுஞ் சிறந்து நிலவுகின்றது” என்று.
அதனால் சுவைகள் ஒன்பதென்றே பெற்றாம்.
[22] இந்தச்சுலோகத்தில் கூறிய வாழ்நாட்பெருமை ஆயிரஞ் சதுர்யுகம் ஒருநாளாக இம்முறையே பற்றி நூறுயாண்டுகள் பிரமனுக்கு ஆயுள்காலமாகலின் இங்ஙன் கூறினான் என்க. உட்பகை — காமம் வெகுளி முதலியன. வெளிப்பகை — வெப்பம் தட்பம் காற்று முதலியன. வாழ்நாட்பெருக்கம் செல்வப்பெருக்கம் என்னும் மிவ்விரண்டே யாவரானும் விரும்பற்பாலன. அவற்றையெய்தினோர்க்குள் தலைசிறந்தார் பிரமனும் இந்திரனுமேயாவர். அவரையும் துரும்பெனக் கருதுவரெனக் கூறியமையான் வைராக்கியத்தை யிலக்கணமாகவுடைய சமம் புலப்படுத்தவாறு.
[23] இலாவண்ணியம் — நன்முத்த நடுவண் இலங்கும் ஒளிபோல உடலிற் காணப்படுமாயின் அஃது இலாவண்ணியம் ஆம். மிகுவனப்பு என்பது கருத்து; அதற்கு விளைநிலம் என்றமையான் அவ்வனப்பு ஒருபொழுதும் குறைவுறாதென்பது கருத்து.
[24] இதற்குமேல் எவ்விதம் சிருட்டிப்பதென்று மனத்தான் எண்ணித் துணிதற்கும் பிரமனால் இயலாதெனில் சிருட்டிக்க எவ்வாறு இயலுமென்பதாம்.
[25] “பெருமான் பணியாளன் கடன் வாங்கினோன்,
இவர்களுக்குள் வரையறை செய்தற்கு நிருமிக்
கப்படும் பிறிதொரு பெரியோன் பிணையாளன்
ஆம்”
என்று சோமேச்சுரர் கூறுவர்.
[26] ஆவணம் — விலாசங்கள் வேண்டுமாயின் இவளிடத்தே கொள்ளற்பாலனவென்பது கருத்து.
விலாசம் — காமலீலை. ஆவணம் — கடைத்தெரு.
[27] எல்லாக்குணங்களும் நிறைந்திருத்தலான் அதிதெய்வம் எனக் கூறினான் என்க.
[28] இத்தகைய குணங்கட்குரிய கணவனை யெய்தலை யன்றிப் பிறவற்றைக் கூறலிற் பயன் என்? என்பதாம். இச்சுலோகத்திற் கூறியுள்ள இலாவண்ணியம் முதலியன சுவைப்பொருளின் (ஆலம்பன) குணங்களாய் அநுபாவங்களாயினும் சுவைப்பொருளையணிப்படுத்தற்கே யீண்டவற்றைக் கூறியிருத்தலான் சிறப்புடைமை சுவைப்பொருட்கேயன்றி இலாவண்ணியம் முதலியவற்றிற் கில்லையென்பது உணரற்பாலது.
[29] பெண்களின் யௌவனப்பருவம் உலகை மயக்கிய வண்ணமாய்த் தொடங்குகின்றது என்றால் அப்பருவம் நிறைவுற்றுத் திகழுங்கால் கூறவேண்டுவதில்லை யென்பதாம்.
[30] இன்பத்துன்பங்கள் வியப்பு முதலியவற்றான் விளைந்து அறிவின்மை அசைவின்மை முதலிய அநுபாவங்களோடு உணர்ச்சி கேடுறாத நிலையில் உண்டாகுஞ் செயலொழிவு தம்பம் என்பதாம்.
[31] கண்ணுற்று அசைவறு முறுப்பினராய் என, உணர்ச்சியுள்வழி செயலொழிவைக்கூறலான் இது காதலான் விளைந்த தம்பம் ஆம்.
[32] மயக்கம், இன்பம் மதம் ஹக்கம் அடி முதலியவற்றான் விளைந்து துன்பம் அவமானம் முதலியவற்றான் வளர்ந்து உணர்ச்சியின்றிச் செயலற்றிருத்தல் மயக்கம் என்பதாம்.
[33] இச்சுலோகம், தலைவியின் கூற்று இங்கட்கூறிய மயக்கம் இன்பத்தான் விளைந்ததாம்.
[34] மயிர்சிலிர்த்தல் — இன்பம் உற்சாகம் அச்சம் வியப்பு முதலியவற்றான் விளைந்து ஊற்றின்பம் முதலிய அநுபாவங்களான் வெளிப்படுவதாம்.
[35] நடுக்கம் — அச்சம் வெப்ப நோய் கிழமை முதலியவற்றான் உண்டாவது.
[36] இவ்வொரு சுலோகத்தான் மயிர் சிலிர்த்தல் நடுக்கம் என்னும் இரண்டற்கும் எடுத்துக்காட்டுக் கூறப்பட்டவாறாம்.
[37] வியர்த்தல் — இங்கட் கூறப்பட்டதையன்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி நாணம், அச்சம் வெகுளி முதலியவற்றானும் உண்டாகும் என்பதாம். காற்று விருப்பம் சிவிறிகோடன் முதலியன அநுபாவங்களாம்.
[38] முதலியவற்றால் என்றதனான் வெப்பம் தட்பம் அச்சம் முதலியவற்றானும் நிறம் மாறுபடும் என்பதாம். இந்நிறமாற்றத்திற்கு அநுபாவங்கள், இளைப்பு வனப்புக்கேடு முதலியனவாம்.
[39] இங்கட்கூறிய வெதும்பல், பிரிவுத்துன்பத்தான் விளைந்ததாம். சியாமை — ஈண்டுக் கரிய நிறத்தவ ளையும் யௌவனமங்கையையும் உணர்த்தும். உறுப்புகள் வெண்ணிறமுடையவாதல் பிரிவுத்துன்பத்தானாம். நற்குணங்களை வெண்மையாக வன்னித்தல் கவிமரபு. அத்தகைய குணங்களை யிடையறாது நினைக்குந் தலைவியின் உறுப்புகளும் அவ்வண்ணமாதல் பிரமரகீட நியாயத்தானாம்..
[40] துன்பம் முதலியன — கொட்டாவி, மகிழ்ச்சி அச்சம் இவற்றிற்கும் உவலக்கணம் ஆம்.
[41] இது, துன்பத்தால் உண்டாயதாம்.
[42] இது, துன்பம் அச்சம் வெப்பநோய் முதலியவற்றானும் உண்டாகும்.
[43] தனியிடத்தில் — இது தலைவன் றலைவி யிவரது கூட்டத்தை யுணர்த்தும். மிக்கக்குளறுபடல், புணர்ச்சியின்பத்திலீடுபட்டமையானாம். இங்கண், குளறுபடுஞ் சொற்கள், காதற்பெருக்கத்தை மிக்க ஊக்கிவிடும் என்பது சிறந்த கருத்து.
[44] தேற்றம் — கருப்பூரம் முதலியவற்றினும் சிறந்த மணம் தட்பம் இவற்றைப் பிரதாபருத்திரன்பால் எய்தல் எளிதென்பதை யுணர்த்தும்.
[45] பசி நீர்வேட்கை முதலியவற்றால் உண்டாகும் வலக்குறைவு ஆம். இங்கட் கூறப்பட்ட வெறுப்பு முதலியன உடல் உரை செயல் இவற்றின் மெலிவுக்கும் உவலக்கணம் ஆம்.
[46] ஆராய்ச்சியில்லாத செயலுடையள் என்பது தலைவி தான் மெல்லியவுடலுடையளென அறிந்திருந்தும் இச்செயலின் முயன்றமையான் இங்ஙனம் கூறினள் என்பது கருத்து.
[47] பிறரது கொடுஞ்செயலானும் தனது தீயொழுக்கத்தானும் கேட்டின் விளைவை ஊகித்தல், ஐயம் என்பதாம். முதலியவற்றிற்கு என்றமையான், வெதும்பல் குரற்சிதைவு திசை நோக்கம் முதலியன கொள்ளற்பாலன.
[48] களவொழுக்கமுள்ள மடந்தையரது மறைவுற்ற காதல் வெளிப்படுதலே, அம்மடந்தையர்க்குக் கேடு விளைவிப்பதென்பது கருத்து.
[49] இவ்வழுக்காறு செருக்கு தீக்குணம் சினம் இவற்றால் உண்டாவதாம். பழித்துரைத்தல் அவமதித்தல் புருவநெறித்தல் முதலியன அநுபாவங்களாம்.
[50] களிப்பில் சொற்றளர்வு உடற்றளர்வு சிரிப்பு அழுகை என்னும் இவை தலையிடைகடை பற்றி அநுபாவங்களாம். “காதல் மயக்கம் கலந்ததும் கட்குடியால் விளைந்ததுமாகிய களிப்பினால் உத்தமத் தலைவன் உறங்குவான்; இடைத்தலைவன், சிரித்துப்பாடுவான்; கடைத்தலைவன் வன்சொற்கூறியழுவான்” என்று சாகித்திய தருப்பணம் கூறும்.
[51] மடி, செருக்கானும் மெய்வருத்தத்தானும் உண்டாவதாம். இங்கண் கொட்டாவி படுக்கை முதலியன அநுபாவங்களாம்.
[52] தன்னுறுப்புகளை யணிப்படுத்தலென்பது, கத்தூரி முதலிய கலவையணிதல், தொய்யில் முதலியன வரைந்து கோடல், மலரலங்கலணிதல் முதலிய அலங்காரச் செயலை. காதலன் முன்னிலையிற் செயற்பாலன:— சென்றெதிர்கோடல் வலியத்தழுவல் இன்சொற்கூறன் முதலியன; அவற்றைக் காமன் வலிந்து செய்விக்கின்றான் என்பது இத்தலைவியின் காதற்பெருக்கையுணர்த்தும்.
[53] இயல்பு நீக்கமென்பது தீயூழ் முதலியவற்றிற்கும் உவலக்கணம். மனத் தளர்வு என்பது உடற்றளர்வு சொற்றளர்வு முதலிய அநுபாவங்களுக்கும் உவலக்கணம் ஆம்.
[54] ‘சிறிது தாழ்க்க’ என்னுமிக்கட்டளை திங்களஞ் செல்வன் விரைவிலுதித்தலாகா தென்பது கருதி; அவன் விரைவில் உதயமெய்திடில், காமநோய் பொறுத்தற்கியலாதென்பது கருத்து.
[55] சிந்தைக்கு நெட்டுயிர்த்தல், வெப்பநோய் முதலியன அநுபாவங்களாம்.
[56] இச்சுலோகத்தில், ‘மறுமொழி கூறுகின்றாளில்லை’ என்பது இறுவாய்க்கூறியுள்ளது, பாழ்மையையுணர்த்தும். பின்னர்க் கூறியுள்ளது, காதலன் எய்தப்பெறாமையின் அவனைப்பற்றிய சிந்தையையுணர்த்தும்.
[57] இம்மெல்லியலாள் புதுவேடம் புனைந்து கோடல், தன் வேடத்தைக் காதலன் கண்டு இன்புறற் பொருட்டு. இங்கண், நீடிய பாதங்களான் என்று கூறியமையான் “மெலியவர், வலியவராற் காலாலுதையுண்டு மயக்கமெய்துவர்” என்னும் பொருள் ஒலிக்கின்றது.
[58] நினைவுக்குப் புருவத்தை உயர்த்தல் சிரத்தையசைத்தல் என்னுமிவை அநுபாவங்களாம்.
[59] முதலிய என்றமையான் ஆற்றல் முதலியவற்றானும் தைரியம் உண்டாகும் என்பதாம்.
[60] இச்சுலோகத்தில் விரும்பிய காதலன் பேற்றினால் தைரியம் விளைந்தவாறு காண்க.
[61] முதலியன என்றமையான் ஒழுக்கக்கேட்டினாலும் நாணம் உண்டாகும் என்பதாம். இங்கண், மறைதல் வெதும்பல் தலைகவிழ்தல் முதலியன அநுபாவங்களாம்.
[62] பல எண்ணங்கள் — தடையின்றி யிமைக்காது விருப்பிற்கேற்ப காதலனைப் பார்த்து, வாழ்க்கையின் பயனையும் கண் படைத்தமைக்குரிய பேற்றையும் எய்துவோம்; என்னுமிவை முதலியவாம். “வீழ் தரு மிதழ்களையுடையவாயின”, என்றமையான் அவ்வேந்தன் காணப்படுங்கால் கண்ணிமைகள் நாணத்தாற் றாமே குவிந்தன என்பதாம். காதலனது அருள் நோக்கத்திற்குப் பின்னரே கன்னியர்க்குக் காதல்மிகுமாகலின். அந்நோக்கம் இல்வழி நாணமுண்டாயிற்றென்பது கருத்து. இதழ் — இமை.
[63] முதலிய என்றமையான் அழுக்காறானும் சாபலம் உண்டாம் எனக் கொள்க. இங்கண் அதட்டல் கொடுஞ்சொற்கூறல் விரும்பியாங்கொழுகல் என்னும் இவை முதலியன அநுபாவங்களாம்.
[64] விழிசுழல்வுறப்பார்த்தல் புன்முறுவல் செய்தல் முத்துமாலையணிதல் செவியணி குவளை மலரைத் தொடுதல் என்னும் இங்கட்கூறிய செயல் நான்கினுள் ஒன்றிலாதல் மடந்தையின் மனம் ஒருவழிப்படவில்லையெனக் கூறுமாற்றாற் காதலடியாக நிகழுஞ் சாபலம் புலப்படுத்தவாறாம்.
[65] உற்சவம் — ஈண்டு, காதலன் காதலி யிவர்களின் சேர்த்தி, மகப்பேறு முதலியவாம். வியர்த்தல் முதலியன அநுபாவங்கள்.
[66] இது, காதலன் கூட்டமெய்திய தலைவியொருத்தி தன் நகில்களை விளித்துக் கூறியது; காதலன் அளித்த கல்லார மாலையை அந்நகிலங்களெய்தப் பெற்றமையான் விளைந்த அவற்றின் நற்பேறுடைமையைக் கூறுமுகமாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினள் என்பதாம்.
[67] காதலன் கூட்டம் முதலியன விருப்பிற்குரியன; கொடுங்கோன்மை அதிவிருட்டி முதலியன வெறுப்பிற்குரியன. இங்கண் இன்பம் துன்பம் பரபரப்பு தம்பம் முதலியன அநுபாவங்கள்.
[68] பாதியலங்காரஞ் செய்து கோடல், ஒரு கண்ணிற்கு மைதீட்டுதல், ஒரு காலுக்கு செம்பஞ் சூட்டல் முதலியவாம்; அணிகலன்களை யிடன் மாறியணிந்து கோடல், இடையணியைக் கழுத்திலும், முத்துமாலை முதலிய கழுத்தணியை யிடையிலும், அணிந்து கோடலாம்.
[69] அறிவின்மைக்கு இமையாமை வாளாமை என்னும் இவை முதலியன அநுபாவங்களாம்.
[70] பாங்கியரணிமைக்கணிருத்தலே தலைவியின் நாணத்திற்கு நிமித்தம்; அதனால் மகிழ்ச்சியாகும் அநுபாவத்தை மறைத்துக் கொண்டாளாயினும், காதலனை யின்புறுத்தற்குரிய உபசாரங்களைச் செய்வதற்கு, விரைந்து முற்பட்டு அங்ஙனமே ஒழிவெய்துகின்றாள் என்னுமிதனால் மகிழ்ச்சியும் நாணமும், முறையே ஒருபுறம் முயற்சிக்கும், ஒருபுறம் அதன் நீக்கத்திற்கும் நிமித்தமாகலான். இவை இருபுறமும் இடர்ப்படுத்துங்கயிறு போலாயின என்பது கருத்து.
[71] முதலியவற்றான் என்றமையான் செல்வம் குலம் பேரழகு முதலியவற்றானும் ஆம். பிறரை அவமதித்தல் விலாசமாக மார்பைப் பார்த்துக் கோடல் முதலியன அநுபாவங்களாம்.
[72] இங்கட்கூறிய எடுத்துக்காட்டு வீரத்தினடியாக வந்த செருக்கைப் பற்றியதாம். படைக்கலத்தைக் கையினாற்றாங்குங் காலமேது என்றதனான் எதிர்த்துப் போர் புரிதற்குரிய பகைவர் இன்மையான் அக்காலமின்றென்பது கருத்து. தமக்குப் பகைவரும் உளர் எனக்கூறலும் நாணம் தருவதாம் என்பான் பகையரசராகுமின்மினிப் புழுக்கள்பாற் பகைமை எத்தகைத்தென்றான் என்க.
[73] முயன்ற செயன் முறிவு குற்றம் வெளிப்படல், இடையூறு விபத்து என்னும் இவைமுதலியவற்றால் விளைவது துன்பம் ஆம். இது சூழ்ச்சி தேடல் மனக்கலக்கம் மகமலர்ச்சி முதலிய அநுபாவங்களின் வேறுபாட்டினால் தலையிடைகடையென்னும் முறைபற்றி முத்திறத்தாம் எனக் கூறுவர்.
[74] இவ்வெடுத்துக்காட்டு உத்தமரைப் பற்றி நிற்கும் துன்பத்தைப் பற்றியதாம். மனம், அலிப்பாலென வழங்கப்படுவதாகலின் அஃது ஆடவரைக் கூடற்கு விரும்பாதெனக்கருதி, தலைவன்பாற் போக்கினேன் என்பது கருத்து. இங்கண், தோழீ! செயக்கடவதென்னே எனக் கூறுமாற்றான் சூழ்ச்சியைத் தேடற்குரிய சொற்றொடகத்தாற் புலனாகும் ஆராய்ச்சியால் துன்பம் குறிப்பிற் புலப்படுத்தவாறு. இதன் சூழ்ச்சி தேடல் அநுபாவம் ஆம்.
[75] விருப்பிற்குரிய பொருளின் பிரிவானும் வனப்புமிக்க பொருளைக்காணும் விருப்பத்தானும் பேரவா நிகழுமென்பதாம். மனத்தாபம் நெட்டுயிர்ப்பு உறக்கம் முதலியன அநுபாவங்களாம்.
[76] இங்கண் “வருந்தியே பொறுக்கினர்” என்றதனால் உணர்த்தப்படும் மனத்தின் ஒருவழிப்படாமை உடற்பசலை புணர்ப்பு விருப்பம் என்னும் அநுபாவங்களால் காதலனைக் காணும் விருப்பத்தைப் பற்றிய பேரவா குறிப்பிற் புலப்படுத்தவாறு.
[77] மனம் அடங்கி நிற்றலாவது புறப்பொறிகளோடியைபின்றி நிற்றல்; நினைவு நினைவின்மை உடற்பயிற்சி முதலியவற்றான் விளைந்து, கொட்டாவி கண்மூடல் முதலியவற்றான் விளக்கமுற்று மனம் அடங்கி நிற்றல், உறக்கம் என்பதாம்.
[78] கனவிற் கண்ட காதலன் என்றதனால் காதலனைப் பற்றிய இடையறா நினைவாலுண்டாகிய உறக்கம் என்பது கருத்து. “அன்பிற்குரிய பொருளை நினைந்தே உறங்கும் ஒருவற்கு அந்நினைவின் பெருக்கமே அப்பொருளின் வடிவாகப் பரிணமிக்கின்றதென்ப”, பெரியாரும்.
[79] அபசுமாரம் — தூய்மையின்மை தாதுக்களின் மாறுபாடு பேய்ப்பற்று முதலியவற்றால் உண்டாவதும் தரையில் வீழ்தல் அலைதல் தோளடித்தல் மாறுபடக்கூறல் சாற்றுவாய்நீர் நுரையிவற்றால் வெளிப்படுவதுமாகிய வெறி; இது உணர்ச்சியை முற்றிலும் கெடுப்பதாம்.
[80] பகைவர்க்கு அச்சங்காரணமாக உண்டாகிய உணர்ச்சியின்மையாகும் அபசுமாரம், எளிமை விரைந்தோடல் முதலியவற்றாற் புலனாகின்றது.
[81] மூச்சுவிடல் மூச்சுவாங்கல் அசைவின்மை கண்மூடல் முதலியன உறக்கத்தை வெளிப்படுத்தும் அநுபாவங்களாம்.
[82] காவற்சுமையைக் காகதிவேந்தன் ஏற்றுக்கொண்டமையான் மாதவன் உறக்கமெய்தினான் என்பதாம். கிளர்ந்தெழுந்த பாற்கடலும் உறக்கத்தைக் கெடுக்கவில்லையென்றதனால் மிகுதூக்கம் புலப்படுத்தவாறு.
[83] ஊறு ஓசை யிவற்றான் விளைவது; புயத்தை உயர்த்தல் விரல்களை ஒலிப்படுத்தல் கொட்டாவி கண்ணைக்கசக்குதல் முதலியவற்றான் விளக்கமுறுவதாம்.
[84] செல்வ வளங்கள் சிறந்து விளங்குகின்றன என்னும் பொருளில் அச்செல்வங்கட்கு விழிப்புறுந் தன்மையை யேறிட்டுக் கூறியிருத்தலான் இது விழிப்பு ஆம்.
[85] குற்றமுடையாரைப் புறக்கணித்தல் பழித்துரைத்தல் முதலியவற்றால் நிகழும் மனக்கொதிப்பு சினம்; அது வியர்த்தல் சிரமசைத்தல் சூழ்ச்சி தேடல் உற்சாகம் அதட்டல் முதலியவற்றான் வெளிப்பட்டு விளங்குவதாம்.
[86] நாணம் அச்சம் முதலியவற்றான் உண்டாவது இதற்கு முறுவலின்மை மாறுபடக்கூறல் பொய்த்தைரியம் பேசாதொழிதல் முதலிய அநுபாவங்கள் உய்த்துணரற்பாலன.
[87] இங்ஙனஞ் செய்தல் தன் முகவிகாரம் வெளிப்படாமைப் பொருட்டென்க.
[88] அதட்டல் அச்சுறுத்தல் அடித்தல் பிணித்தல் முதலியன அநுபாவங்களாம்.
[89] இச்சுலோகத்தினால், தலைவியைத் துன்புறுத்திய மதியம் குற்றமுடையதாக, அம்மதியமிழைத்த குற்றத்தைப் பொறாத இவள் கடைக்கண்களாகுங் கொள்ளிகளால் மதியத்தை மாசுபடுத்தற்கு முயன்றாளாகலின், இது கொடுமையென்பது புலனாம்.
[90] நூலாராய்ச்சி ஊகம் ஐயந்தீர்த்தல் முதலியவற்றான் உண்மைப் பொருளைத் துணிதல் என்பதாம்.
[91] மதிக்கதிரின் இயைபால் சந்திரகாந்தமணி நீரைப் பெருக்குதல்போல, வீரருத்திரன் கரத்தின் இயைபானும் உறுப்புகள் நீரைப்பெருக்குவனவாகலின் இவன் மதியமெனத் துணியப்பட்டான். கரம் — ஈண்டுக்கதிர்களையும் கையினையும் உணர்த்தும்.
[92]அச்சம் சன்னிபாதநோய் கணவற்பிரிதல் பொருளழிவு முதலியவற்றான் உண்டாகும் மனமயக்கம் பித்தநோய்ஆம்; இதற்கு, சிரிப்பு இயபில்வார்த்தை ஓடுதல் அமர்தல் எழுதல் அழுதல் என்னுமிவற்றை நிமித்தமின்றிச் செய்வது அநுபாவம் ஆம்.
[93] மறுமொழியிறுத்தற்கியலா மரங்களை வினாதலான் இவ்வஃறிணைப் பொருளிடத்து அப்பொருளியல்பு கருதப்படாமையான் பித்தநோய் ஆம்.
[94] நோய் அடி இவற்றான் உடலினின்றும் மனத்தின் நீக்கம் இறப்பு ஆம். விக்கல் நெட்டுயிர்ப்பு முதலிய அநுபாவங்களாம். இறப்பை அவ்வண்ணமே எடுத்துக்காட்டல் அமங்கலமாகலின்
[95] இவ்விருசெயல்களும் பிரிவாற்றாமையான் இறத்தற்குரிய முயற்சிகளாம்.
[96] ஐயம் உவலக்கணமாக ஆராய்ச்சியானும் ஊகம் விளையும் என்பதாம். புருவ நெறித்தல் தலையசைத்தல் முதலியன ஊகத்திற்கு அநுபாவங்களாம்.
[97] மனம் காமவயத்தாதலின் காதலன் கிடைத்தற்கரியன் என்பதை நினைந்திலது என்பது கருத்து.
[98] உம்மை — பாங்கியர், அகப்பொருட்டுறையிற் கூறிய மதி நுட்பம் வாய்ந்தவர் என்பதையுணர்த்தும்.
[99] காதலனையடைதற்குரிய வுபாயத்தைத் தேடுதற்கு மனத்தெளிவு இன்றியமையாதது. அஃதின்றிக் கலக்கமெய்தலின், உபாயத்தைத் தேடுதல் அமையாதென்பது கருத்து. இங்கண் ஐயத்தாற் பல கற்பனைகள் நிகழ்ந்தமையால் இஃது ஊகம் ஆம்.
[100] தகுதியுடைமை, வாலைப்பருவ முடிவும் யௌவனத் தொடக்கமும் பொருந்திய நிலையை யெய்தல் அந்நிலையில் அந்தக் கரணம் சிறிதளவு விகாரப்படுதல் பாவம் ஆம். பாவம் — மனக்குறிப்பு என்பாரும் உளர்.
[101] சிறிது புளகம் — காண்டற்கரிய புளகத்தையுணர்த்தும்; இதனால் அந்தக்கரண வேறுபாட்டின் றொடக்கமென்பது புலனாம்.
[102] சிறிது — இச்சொல் ஈண்டு உரிய பொருளையுடையதாய், சிறிது காண்டற்குரிய புளகத்தை யுடைமையை யுணர்த்தும். இதனால் புளகம் காண்டற்கரிய நிலை பாவம் என்பதூஉம் அது காண்டற்குரிய நிலை ஆவம் என்பதூஉம் புலனாம்.
[103] இயல்பாகவே: — முயற்சியில்லாமலே யென்பதாம்; இதனால் இயல் வனப்புடையார்க்கு அலங்காரம் விரும்பற்பாலதின்றாகலின் இது மாதுரியம் என்பது கருத்து.
[104] இலக்குமி — பிரதாபருத்திரன் மனைவியருள் ஒருத்தியின் பெயர்; இது, அரசியற்றிருவையும் உணர்த்தும்; அத்திருமகளும், கொடை முதலிய செயலில் மிக்க ஒருப்பாடுடையளாய்ச் சலனமின்றி யரசன்பால் நிலைப்பெய்தினள் என்பது குறிப்பிற் புலப்படுத்தவாறு.
[105] இதன் குறிப்பு, தலைவனியல் 59ஆம் சுலோகத்தில் காண்க.
[106] பொதுவணிகன் — என்பது, அலங்கல் சந்தனம் தாம்பூலம் என்னும் இவற்றையுணர்த்தும்.
[107] இதனால், காதலன் வயத்த மனத்தினளாதலின் பகற்பொழுது சென்றதையும் அறிந்திலள் என்பது கருத்து.
[108] காதற்குறிப்பு வெளிப்படல், பாவப்பிரகாசத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
“தலைவனுடைய குணங்களைக் கணக்கிடல், விரு
பிற்கேற்பக்காதன்மிக்குக் கடைக்கணித்தல்,
மெய்ம்மயிர்பொடித்தல், குளறுபடப்பேசுதல்,
கதுப்பு வியர்த்தல், பாங்கியர்பால் காத
லுண்மையையுரைத்தல், அப்பாங்கியர்
முகமாக அத்தலைவனைக் கூடுஞ் சூழ்ச்
சியைத் தேடுதல் என்னுமிவை, தலைவ
னுடைய குணங்களைப் புகழ்ந்து கூறுங்
கால் விளையுங் காதற் குறிப்புகளாம்”.
இச்சுலோகத்தில் ஈற்றில் உள்ள ஓகாரம் காகுப்பொருளதாய் அக்குறிப்பு வெளியீட்டின் உறுதிப்பாட்டையுணர்த்தும்.
[109] துன்பம் — ஈண்டுக்காதலன், கலவியிற் குழலைப் பற்றுதலும் இதழைக்கடித்தலும் ஆகிய இவை முதலியவற்றால் உண்டாகும் மெய்வருத்தம்; வெளிப்படையான சினத்திற்கு நிமித்தமாமிஃது உள்வழியும் நிகழும் உள்ள நிறைந்த மகிழ்ச்சியே குட்டமிதம் ஆம்.
[110] இச்சுலோகம், இரவிற்காதலனோடு கூடியின்பந் திளைத்த தலைவி, காலையிற் பாங்கியர் முன்னிலையில் அவள் நாணிய நிலையைக் கூறுவது:— தலைவியின் இதழ் குழல் முதலியன புணர்ச்சிக்குறிப்பை வெளிப்படுத்துகின்றனவாகலின் “உண்மைச் செய்தியைப் புலப்படுத்துமுறுப்புகள்” என்று கூறினான் என்க. காமத்தான் விளைந்த ஆய்வில் செயல் எவ்வாற்றானுந் தடைப்படாத கலவிக்கு நிமித்தம் ஆம். கீறியவண்ணமாய் என்னும் நிகழ்காலத்தால் அச்செயற்கு நிமித்தமாகிய நாணத்தின் ஒழிவின்மையைப் புலப்படுத்தும். முன்னர்க் காணப்படாத கலவிக்குறிகளைக் காண்டலான் வியப்பெய்திய பாங்கியரைப் பார்த்த அப்பொழுது தலைவிக்குண்டாகிய நாணமிகையானும், முன்னர்த்துய்த்திராத இதழ்க்கடி முதலியவற்றான் விளைந்த துன்பத்தானும் மனமொன்றிய இன்பமிகையைப்புலப்படுத்தலான் இது குட்டமிதம் என்பதாம்.
[111] இனியவை — இது செருக்கு முதலியவற்றாற் காதலனைப் புறக்கணித்தற்கும் உவலக்கணம் ஆம்.
[112] இச்சுலோகம் — “அடி தலைவி! நீ யினியும் துனிமிக்களாயின், திருமகள் முதலிய தலைவிமார் பலதிறப்பட்ட வாடல்களாற் காதலியாம் நிலையினை யெய்துவர்; எய்தவே, மீண்டும் உனக்கு அந்நிலை கிடைத்தலரிது; காதனோ இயவையே கூறுகின்றான்” என்றிங்ஙனம் தலைவன் அநுப்பிய தூதி கூறுங்காற் றலைவி, செருக்காற் பிணிப்புண்ட மனத்தினளாய் இறத்தற்குந்துணிந்து காதலன் கூறிய இன்சொற்களையும் புறக்கணித்துக் கூறிய கூற்று. இதனால் இது விப்போகம் என்பதாம்.
[113] இங்கண், உருத்திரவேந்தர் தம்மனைவியரின் மணிச்சிலம்பு முதலியவற்றின் ஒலியால் கரசரணங்களின் அமைப்பையும், சொற்களுக்குப் புன்முறுவலினியைபால் இனிமையையும் கூறி உறுப்புக்களின் மென்செயலைப் புலப்படுத்தியமையான் இஃது இலலிதம் என்பதாம்.
[114] தலைவியின் பின்புறமாக மெல்லன நடந்து வருதலால் அவ்வரவை அவளறியவில்லையென்பதாம்.
[115] அமர்ந்த நிலையிலுள்ளார், நின்ற நிலையிலுள்ளாரை நிமிர்ந்து பார்த்தலியல்பு என்பது கருத்து.
[116] விலாசம் — இதன் இலக்கணமும் எடுத்துக்காட்டும். கா0, காக — இவ்விலக்கச்சுலோகத்திற் காண்க.
[117] தேற்றம் — சென்று மீண்டும் திரும்பி வருதலால் தலைவிபால் அச்சத்தானிகழும் விலாசங்களைக் கண்டு உவகை யெய்தலில் அரசனது அவாமிகையையுணர்த்தும். இதனாற் காதற்பெருவிழா யாவும் இச்சகிதத்திற்கு இறையேனும் ஒப்பாகாவென்பது கருத்து.
[118] இது, பாங்கியின் கூற்று; இக்கூற்று, தலைவியின் விருப்பிற்குரியதாயினும், சினந்தென்ன அப்பாங்கியைப் பார்க்கின்றாளன்றி அத்தலைவி நாணத்தால் எதுவுங் கூறவில்லையென்பது கருத்து. தொய்யில் — உடலிலிடும் சாந்துக்கோலம்.
[119] இதனால் இது நகைச்சுவைபோல வேடம் பாடை முதலியவற்றின் விகாரங்களால் விளையாதது என்பது கருத்து; அதனால் காரணமின்றி விளையும் நகையென்று கூறினான் என்க;
[120] காதலிக்கு யௌவனத்தான் விளைந்த அசிதம், காதலற்குக் காமத்தை ஊக்கிவிட, அதனால் அக்காமம் பெருமிதமெய்துகின்றதென்பது கருத்து.
[121] அரசர்பாற் பெருவிழாவாந்தன்மையை யேறிட்டுக்கூறலான், அவ்வரசரது காட்சியில் மிக்க ஆதரம் புலனாகின்றது.
[122] அணிமைக்கணுள்ள மனத்தானும் விடப்பட்டவள் என்னில் சேய்மைக்கணுள்ள பாங்கியரைப்பற்றிக் கூறவேண்டா என்பதாம்; இதனால் இத்தலைவி, காதலன்பாற் சிறந்த மனப்பற்றுடையளென்பதும் பாங்கியரது பழிப்புரைக்குரியளல்லள் என்பதும் புலனாம்.
[123] புன்முறுவலியைந்த பார்வைகள், கலவியிலவாமிகையைப் புலப்படுத்துவனவாம். நேயம் — புலன்களில் என்னுடையவென்னும் உரிமைபற்றி நிகழும் மனநெகிழ்ச்சி; அஃது, அச்சம், ஐயம் இவற்றின் முடிந்த வடிவாய்க் காணப்படுவது. இந்நேயத்தின் முதிர்ந்தநிலை காதல் என்பதாம்; இந்நேய முதிர்ச்சியால் நேரும் பல துன்பங்களும் மனத்தின்கண் இன்பமயமாகவே நுகரப்படுகின்றன. இதனாற் காதல், யாவற்றினுஞ் சிறந்ததென்பதும் அக்காதல் பற்றிச் சங்கற்பம் நிகழுமென்பதும் புலனாம்.
[124] “சுபகன் — மிகுவிளக்கம் பெருஞ்செல்வம் நன்றியறிதல் வனப்புடைமை இளமை மானம் நல்லொழுக்கம் சாதுரியம் நற்குடிப்பிறப்பு பகலறுக்கம் இன்சொற்கூறல் மகளிரண்முதற்குரிய நிலைமை யென்னுமிவை பொருந்தியுள்ளவன் சுபகன்” எனப் பாவப்பிரகாசம் கூறும்.
[125] பகற்பொழுதைக் கடத்தியமை காதலன் வருகையை எதிர்பார்த்தன் முதலியவற்றானாம். உறக்கமும் நிருபனும் வரவில்லையென்பது, உறக்கம் வந்துழி காதன்றேற்றமும் கலவிநுகர்ச்சியும் கனவிற் றோன்றும்; அக்கனவுப்புணர்ச்சியையும் இவ்விழிப்பு, தடைப்படுத்துகின்றதென்று இதனையிழித்துக் கூறியவாறாம்.
[126] இச்சுலோகம், பாங்கி தலவியென்னுமிருவருடைய வினாவிடை வடிவினதாகும். சியாமாங்கி நன்னிலையள் மலைமுலையள் என்னும் மூன்று அடைமொழிகளும் தலைவிக்கும் நிலமகளுக்கும் பொருந்துவனவாம். சியாமாங்கி — யௌவனப்பருவத்தால் விளக்கமுறுமுறுப்புகளை யுடையளையும் கரியமேனியுடையாளையும் உணர்த்தும்; நிலமகள் கரியமேனியுடையவள் என்பது நூன்மரபு. நன்னிலையள் — கணவனிற் பிரியாத நிலையையுடையவளையும், நிலையென்னும் பெயரையுடைய நிலமகளையும் உணர்த்தும். மலைமுலையள் — இச்சொல் மலலைபோலும் முலை, மலையாகும் முலையென உவமத்தொகையும் பண்புத்தொகையும் ஆகி இருபேரையும் உணர்த்தும்.
[127] பிறவழி — காதலனையன்றிப் பிறவழியென்பதாம்.
[128] சுபகன் என்பான் ஒருவகைத் தலைவன்; அவன், மாற்றவளுடைய உகிர் பல் முதலியவற்றின் அடையாளங்கள் இல்லானாய், தலைவிக்கு உண்டாகுஞ் செருக்கையும் பொறாமையையும் மறக்கச் செய்யும் இயல்பினன் ஆவன்; ஆதலால் இத்தலைவன்பால் வெறுப்பிற்குரிய குறியின்மையால் இவன் தலைவியின் காதற்கிழமைக்கு நிலைக்களன் என்பது போதரும்.
[129] குலமகளிர், கலவியிலன்றிப் பிறகாலங்களில் நாணுறல் வேண்டுமென்பது அம்மகளிர்க்குரிய வரையறையாம். அத்தகைய சொற்கள், “ஏன் காலந்தாழ்த்தல் வேண்டும்? முத்தமிடல் முதலிய செயல் இது போழ்தே செய்தல் வேண்டும்”, என்னுமிவை முதலியனவாம்.
[130] இவ்விரண்டு அவத்தைகளும் வியபிசாரிபாவங்களை விளக்கிக் கூறுமிடத்து விளக்கப்பட்டுள்ளன. ஸ்தாயிபாவத்திற்குத் துணையாக நிற்குங் காரணம் பற்றிக் குறிப்பாகுந்தன்மையும், சுவை நுகர்ச்சிக்கு நிமித்தமாகுங் காரணம் பற்றி அவத்தையாம் தன்மையும் இவற்றிற்கு உண்டென்பது உணரற்பாற்று.
[131] இங்கட்கூறியுள்ள மயக்கம் வியபிசாரிபாவத்துட் கூறிய மயக்கத்தையொத்திருத்தலின், உன்மாதம் முதலியவற்றிற்குப் போல எடுத்துக்காட்டுக் கூறாது முன்னர்க் கூறியதையே கொள்ளலாமாயினும் தனிப்படக் கூறியதால் இம்மயக்கம், அதனிற் சிறந்ததென்பது போதரும்.
[132] நிறுத்தமுறையானே சுவைகளை யவற்றின்பிரிவுகளுடன் இலக்கணங் கூறியெடுத்துக் காட்டி விளக்குகின்றார்.
[133] இச்சுலோகத்தில் — மனக்கினிய காதலன் என்றதனால் ஆலம்பன விபாவமும் தனிமையில் என்றதனால் உணர்த்தப்படும் உத்தீபனவிபாவமும் துனி நீக்கத்தானிகழும் மகிழ்ச்சி முதலிய குறிப்புகளும் புகலாமற் போதரும் கண்ணீரரும்பன் முதலிய விறல்களும் ஆகிய இவைகளால் நிறைவெய்திய இரதியென்னும் ஸ்தாயிபாவம் உவகைச்சுவை ஆம்.
[134] புணர்ச்சிக்காலத்தில் மகளிர்க்கு நாணமின்மை யணிகலனாகலின் நாணப்பெருமிதமும் நலிந்தது என்றான்; உம்மை மகளிர்க்கு நாணம் இயல்பு என்பதையுணர்த்தும்.
[135] இதனால் இவ்வின்பத்திற் கிணை பிறிதொன்றில்லை யென்பது போதரும்.
[136] தலைவன் றலைவி ஒருவர்க்கொருவர் முன்னர்ப் பொதுவகையிலுரையாடி மனத்தியைபு நிகழ்ந்த பின்னர் காதலியைபு பற்றிய இன்புரை நிகழ்த்தலும் பின்னர் அந்நிகழ்ச்சி காரணமாக விளைந்த அன்பின் மேலீட்டினால் ஒருபாயலெய்தி இன்புறலும் இயல்பாகலின் இங்ஙனம் அம்முறைபற்றிக் கூறினான் என்பது கருத்து. இங்கட் கூறிய ஒரோவொன்றும் கிடைத்தற்கரியதென்பான் விருப்பிற் கெட்டாதன என்றான்.
[137] அன்பென்பது ஈண்டுத் தலைவன் றலைவி யிவர்களில் ஒருவர்க்கொருவர் ஆழ்ந்தெழுந்த கருத்தின் பிணிப்பாம். அன்பு தொடங்கி காதலீறாகவுள்ள பின்வருவன, இரதியின் நிலைவேறுபாடுகளேயாம் என்று இரசாருணவம் கூறும். “அன்பு சினம் நேயம் பற்று ஆசை காதல் என்னுமிவை, முறையே முளை தளிர் முகை மலர் கனி துய்ப்புறல் என்பனவாம்”.
[138] பற்றுண்மையைக் காட்சி கேள்வி அனுமானம் என்னுமிவற்றான் றலைவி யறிந்தாள் என்பதாம். அங்ஙனமே தசரூபகமும் கூறும்.
“காதலன் வேற்றிடத்து பற்றுடையனாயவழி
தலைவி, யதனைக் கேட்டும் அனுமானித்
தும் பார்த்தும் பொறாமையான் அவளுக்கு
விளையுஞ் சினம் மானம் எனப்படும்.”
என்று. இதனால் பொறாமையால் விளையும் விப்பிரலம்பச்சுவை தலைவிக்கேயன்றித் தலைவற்கு இல்லை என்பது போதரும்.
[139] காகதிவேந்தனுடைய கண் நா வாகு இவற்றில் விளங்கி நிற்கும் திருமகள் கலைமகள் நிலமகள் என்னுமிவர்கள் முறையே பார்த்தல் பேசுதல் விளையாட்டாகப் பற்றியிழுத்தல் என்னுமிவற்றை ஊறுபடுத்துகின்றனர். இவ்வேந்தனோ அத்தகைய வஞ்சகன் அல்லன்; அவன்பாற் சினமுறல் தக்கதன்றென்பதாம்.
[140] யாதாமொரு காரணத்தால் எனக்கூறியமையான், தலைவற்குப் பிற தலைவியின்பாற் பற்றில்வழி இப்பிரிவு நிகழ்ந்ததென்பது கருத்து. இதனால், தலைவன் றலைவியர்க்குக் காரணமின்றி நிகழும் பிரிவு விப்பிரலம்பம் என்பதாம்.
[141] மாறுபட அணிதல் — வளையலை யணிதற்குரிய முன் கைகளில் மோதிரத்தை யணிந்து கோடல்; மீண்டும் மிக்க இளைப்பால் அம்மோதிரம் அவ்விடத்தும் நிலைத்திராது நழுவுறுமென்பாள் சிறுபொழுது விளக்கமுறுவனவாம் என்றாள். இவ்வெடுத்துக்காட்டு தலைவனிற் பிரிந்த தலைவியைப்பற்றியது. இவ்வாறே தலைவியிற் பிரிந்த தலைவற்கும் உய்த்துணரற்பாலது.
[142] நன்னாட்கள் — வறியரானும் கடமையாகக்கொண்டு கொண்டாடுதற்குரிய பண்டிகைப் பெருநாள் என்பதாம்; அந்நன்னாட்களில் திரீபுருடர் பிரியாது சேர்ந்திருத்தல் இல்லற நெறியாம். இராப்பொழுது தாங்கற்கியலாதென்பான் பகற்பொழுதும் யுகப்பொழுதாகின்றது என்றார்.
[143] பறவைகள், அஃறிணையவாகலின் அவற்றின் இன்பச்சுவை, கலைத்திறன் இன்மைபற்றி விபாவம் முதலியவற்றின் நிறைவின்றி யமையப்பெறுவதால் இது போலிச் சுவையென்று அறியற்பாலது. ஒருசாரார், இது சுவையே; போலியன்றென்ப. அங்ஙனமே வித்தியாதரரும் கூறியுள்ளார்.
“விபாவம் முதலியவற்றின் நிகழ்ச்சியே சுவை நிகழ்ச்
சிக்கு நிமித்தம்; அவற்றின் அறிவு, நிமித்தம் இன்று
ஆதலால் அஃறிணை வகுப்பிற்கும் சுவையுண்டாதல்
இயல்பேயாம்”
என்று பிறபோலிச்சுவைகளின் எடுத்துக்காட்டைப் பிறாண்டுக்காண்க.
[144] மனோபவன் — மனத்தின்கட் பிறந்தவன்; எதிருருவென்பது அக்காமதேவனுடையதாய் அக்காமனை யொத்த உருத்திரவேந்தனையுணர்த்தும் பாங்கியை ஏமாற்றுவதற்கு இங்ஙனம் கூறினள் என்பதாம்.
[145] புருவ நெறித்தல் வெதும்பல் முதலிய சினக்குறிப்பின் அநுபாவங்கள், ஒழிவெய்தின என்பதாம். இதனால் சினம் அடங்கிற்றென்பது கருத்து.
[146] இன்சொற்கள் — காதல் நிறைந்து அமயத்திற்கேற்ப அடுத்தடுத்துக் கூறுஞ் சொற்களை. இங்கண் ஒன்றுக்கொன்று மறுதலையாகிய பெருமிதம் உவகை யென்னுமிவற்றைப் பற்றிய மகிழ்ச்சிகளுக்கு ஒன்றையொன்று மீறிய நிலையில் இயைபைக் கூறியிருத்தலான் குறிப்பியைபே நுகர்ச்சிக்கு நிலைக்களன் என்பதாம்.
[147] இச்சுலோகத்தில் எட்டு வாக்கியங்கள் உள்ளன. ஒரோவொருவாக்கியமும் ஒரோவொரு குறிப்பைப் புலப்படுத்துகின்றது. அது பின்வருமாறு காண்க.
- குலமகளிர் இதுபொழுது பழித்துரைக்க. இதுபொழுதே, தலைவனைச் சென்று கூடுதற்குரிய தருணம் என்பதாம். இதனால் சென்று கூடலாகுஞ் செயலைப் பற்றியும் மகளிர் பழித்துரைத்தலாகுங் காரணம் பற்றியும் விளையும் நாணத்தைப் புலப்படுத்தவாறு.
- காதலனையெளிதிலடைதற்கு எத்தகைய நல்லூழ் நிமித்தமாகுமென ஆராய்ச்சியைக் கூறலான் இங்கண் அவ்வாராய்ச்சியைப் பற்றிய ஊகம் என்னுங் குறிப்பு புலப்படுத்தவாது.
- யான், தலைவனைச் சென்று கூடுதலை என் இருமுதுகுரவர், என்ன காரணம் பற்றியோ ஒருபட்டிலர், என இரக்கந்தோன்றக் கூறியிருத்தலான் இங்கண் எளிமை புலப்படுத்தவாறு.
- காதலனையழைத்து வருதற்கு எந்தத் தோழியை யனுப்புவேன் என்பதாம். அச்செயற்குரிய துணையைத் தேடுதலாகும் அநுபாவத்தாற் றொடங்கிய செயலை மேற்கோடன் மூலமாகிய துன்பம் இங்கட் புலப்படுத்தவாறு.
- தனாது ஒழுக்கமில் செயல் வெளிப்படுமோ என்பதாம். இஃது, அவ்வெளியீட்டின் மூலமாய்த் தனக்குக் கேடு விளையுமோவெனக் கருதும் ஐயப்பாடென்னும் குறிப்பு ஆம்.
- என் காதலனது மடியில் என்பதாம். இங்கட் காலத்தாழ்வினைப் பொறாமையாகும் பேரவா என்னுங் குறிப்பு புலப்படுத்தவாறு.
- எப்பொழுது மனம் உறுதிப்பாடெய்தும். இங்ஙண் அவா வொழிவான் உண்டாகும் தைரியம் குறிக்கப்படுகின்றது.
- காதலரே அடையற்பாலார். இதனால், தான் செயக்கடவ செயலுண்மையை உறுதி செய்து கோடலாகுந் துணிபு புலப்படுத்தவாறு.
நாணம் முதலிய குறிப்புகளெட்டனையும் ஒன்றையொன்று தடைப்படுத்து முகமாக இங்கட் புகுத்திக் கூறியிருத்தலாற் குறிப்புக் கலவையாம்.
இங்கண், நாணம் ஊகத்தானும் எளிமை துன்பத்தானும், ஐயம் அவாவினாலும் தைரியம் துணிபானும் தடைப்படுகின்றன, என்றிங்ஙனம் பாத்திய பாதகத்தன்மையான் இவ்விரண்டாகிய குறிப்புக்கலவை, துணிபையே சிறப்பாகக் கொண்டு சீரிய நுகர்ச்சிக்கிடனாகின்றது என்பது கருத்து.
[148] இங்கட் கூறிய குறிப்புகளுள், பேரவாவை முதற்கட் கூறாவிடினும் பேரவா முதலிய, என அதனைச் சிறப்பித்துக் கூறலெற்றிற்கோ? வெனின்; பிறவற்றிற்கும் இஃதுயிர் நிலையாமென்பதை வலியுறுத்தற் பொருட்டென்க. இங்கண் நாணம் முதலியன சென்று கூடற் மறுதலையாகலின் அவை பாதிக்கப்படுவனவாம்; ஊகம் முதலியன அங்ஙனமாகாமையின் அவை பாதிப்பனவாமென்பது கொள்ளற்பாற்று. “சேறளைந்து கழுவலினும் அதற்ககல நடத்தல் நலம்” என்னும் நியாயத்தினால், நாணம் முதலியவற்றைக் கூறி அவற்றைத் தடைப்படுத்தலினும், கூறாதொழிதலே நலமெனக் கூறுமாலெனில், அற்றன்று. உரிய சுவையை உறுதிப்படுத்தற்கு அதன் மறுதலைச் சுவைகளையும் உறுப்பாந் தன்மையிற் கூறுமாறென்ன, ஈண்டும் நாணம் முதலியவற்றைக் கூறல் சாலுமாகலின். அங்ஙனமே துவனியாசிரியருங் கூறுவர்.
“சிறப்புறுஞ் சுவையைக் கூற விரும்புங்கால்
அதன் மறுதலைச் சுவைகளை மறுக்கப்படுநிலை
யிலாதல், உறுப்பாந்தன்மையை யெய்து நிலை
யிலாதல் கூறுதல் மாறுபடா” என்று.
[149] இங்கட் கூறியுள் எடுத்துக்காட்டிரண்டிலும் அழுகையும் வெகுளியும் முடிந்து நின்று நுகர்ச்சியில் முதற்கண் நிகழ்தலான், அவற்றிற்குச் சிறப்புப் பற்றி உறுப்பியாந்தன்மையும் உவகையும் இளிவரலும் முறையே அவற்றையணிப்படுத்தலான் இவற்றிற்கு உறுப்பாந்தன்மையும் ஆம் என்று அறியற்பாலது.
அங்ஙனமே பாவப்பிரகாசத்திலுங் கூறியுள்ளார்.
“எல்லாச் சுவைகளும் காரியவயத்தால்
ஒன்றோடொன்று கலக்கின்றன; எந்
தச்சுவை, முதற்கட்சுவைக்கப்படுகின்ற
தோ, அது சிறப்புச்சுவையாம்” என்று.
உறுப்பாகிய சுவை நிறைவை யெய்துமோ? எய்தாதோ? எனில் முன்னதன்று; அணிப்படுத்தற்குரிய தன்மையால் உறுப்பாந்தன்மை கெடுமாகலின்; பின்னதன்று. சுவைத்தன்மை கெடுமாகலின். அதனாற் கலவையைக் கூறல் தக்கதன்றெனக் கூறுமாலெனில், அற்றன்று. ஒருசுவை நிறைவெய்தி யிருப்பினும், அஃது ஒரோவழி, பிறிதொரு சுவையை யணிப்படுத்தலான் அதற்கு உறுப்பாந்தன்மை யுண்டெனக் கொள்ளற்பால தாகலான்.
அங்ஙனமே அபிநவ குப்த ஆசிரியருங் கூறுவர்.:—
“தம்விபாவம் முதலிய கருவிகளோடு
தமக்குரிய நிலையில் நன்கமைந்த
பிறசுவைகளும் நிறைவெய்திய
வாய் இன்புறுத்து நிலையை (****)
யெய்துகின்றனவாம் எனினும், அந்
நிலை அவ்வளவின் முடிந்தொழி
வெய்தாது வேறுபடித்தானும்
இன்புறுத்தற்கு முயலுகின்றது” என்று.
உறுப்பு உறுப்பியாந்தன்மையில் யாண்டும் இம்முறையே கொள்ளற்பாலது.
[150] சுவை — இலௌகிகம் அலௌகிகம் என இருதிறத்து. அவற்றுண் முதற்சுவை, வாழை தேமா இவற்றின் கனிச்சுவை நுகர்ச்சியான் விளையுமின்பத்தை நிகர்த்ததாய் உலகிற் காரியப்படுவது ஆம்; இச்சுவை அவிநயித்தற்குரிய இராமன் முதலிய தலைவரையன்றி யேனையோரைப் பற்றாதென்பான் தலைவனைப் பற்றியதேயாம் என்றான்.
[151] இங்ஙனமாயின் அறிவிற் சிறந்த அவையினர், அவிநயக்காட்சியிலும் காப்பியக்கேள்வியிலும் அடி தொறு மவாவுறல், பித்தர் செயல் போல்வதாம் எனக் கடாவியாசங்கித்து இறையிறுக்குமுகமாக, கலைவல்லோனாகிய நடனது செயலானும் எனத் தொடங்கி முரண்டா என்னுமிறுவாகக் கூறினான். இதன் கருத்து வருமாறு:—
“நடன் சிற்பம் நால்வகைய விநயங்கள்
பாவம் முதலியவற்றின் வேறுபாடுகள் என்னுமிவற்றை
யறிந்தவனும், அவிநயத்திற்குரிய தலை
வரின் தாதான்மியத்தை யெய்துந் தறலு
டையனும் ஆவன்”
என்னுமிவ்விலக்கணம் பொருந்திய நடனுடைய அவிநயத்தான் அவையினர் மனம் சுவையிலீடுபடும் என்பது கருத்து. அத்தகைய — குணம் அணி யிவற்றாலினிய சுவை விளங்கிய சொற்பொருளின் இயைபுவடிவாகிய காப்பியத்தின் கேள்வியானும் அவர் மனம் அச்சுவையிலீடுபடும் என்பதுமாம். கண்கூடாய்த்துய்ப்பரேல் என்றது — தோன்றும் பொருள், தம்மைச் சார்ந்ததென்னு நிலையிற் றுய்ப்பராயின் என்பதாம். மகிழ்வுறு மகனை நோக்கிய வழி தந்தையுமின்புற்றாங்கு, அவையினர்க்கும் இன்பந்தோன்றுவதாம் என்பது கருத்து. அங்ஙனமே பாவப்பிரகாசத்திலும் கூறப்பட்டுள்ளது.
“மகிழ்ச்சியைக் கண்டவழி மகிழ்வினையும்
துன்பத்தைக் கண்டவழி துன்பத்தையும் அச்சத்
தைக் கண்டவழி அச்சத்தையுமெய்தும் ஒரு
வன் சிறந்த இரசிகன் ஆவன்” என்று.
இங்கட் கூறிய காட்சி, கேள்விக்கும் உவலக்கணம் ஆம்.
[152] அன்றியும் எனத் தொடங்கி அவையினரைப் பற்றி நிற்பதாமென்பதூஉம் முரண்படா என்னுமிறுவாகக் கூறிய தொடர், அலௌகிகச் சுவையின் நிலைக்களனை வலியுறுத்தும். அலௌகிகச்சுவை, பிரமானந்த்தத்தை நிகர்த்ததாய்க் காப்பியவாயிலாக, அறிஞர்பால் எஞ்ஞான்றும் நிலைத்திருப்பது. ஈண்டு, மாலதி இராவணன் முதலிய சொற்கள் நடன் முதலியோரின் கூற்றாகக் காப்பியத்திற் கூறிய சொற்களை; பெண்மாத்திரையில் உண்டாகும் உணர்ச்சியென்பது, மாலதி முதலிய சிறப்புணர்வின்றிப் பெண்பால் அளவில் நிகழ்வதாம். இங்ஙன் நிகழும் பொது அறிவில் நினைவெய்திய அவ்வப்பெண் விசேடமாகிய அனுகாரிய முகமாக என்றமையான் பொது அறிவு நிகழ்ந்துழிச் சிறப்பு நினைவு போதரல், அவ்விரண்டற்கும் உடனிகழுந் தன்மையுண்மையான்; என்பது உணரற்பாற்று. அங்ஙனமாயின், மாலதி முதலிய சொற்களைச் செவியுற்ற அவையினர் அவ்வச் சிறப்புப்பொருளை நீக்கித் தாங்கருதிய தலைவி முதலியோரை நினைவுறற்குச் சான்றென்னை? எனச் சங்கித்தல் தக்கதன்று; காப்பியம் முதலியவற்றில் சிறப்புப் பொருள் வேண்டற்பாலதின்றாமாகலின்; ஏனெனில், கவிஞர் பெருமக்கள் இராமன் முதலியோருடைய நிலைமகளை, வான்மீகி முதலிய முனிவரர் போல தியானக்கண்ணாற்கண்டு தனிப்பட்ட நிலையிற் கூறினாரில்லை; ஆனால் இராமன் முதலியோர்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு தன் அறிவு வன்மைக்கேற்ப, பொதுக்குணங்களே அவராற் கூறப்பட்டன. அங்ஙனமே பெரியாரும், “பொதுக்குணங்களைக் கூறலாற் சுவை உண்டாகின்றன” என்று கூறுவர். ஆனால் வான்மீகி முதலியோர், சிறப்புக் குணத்தை விலக்கி, பொதுக்குணத்தையேன் கூறவில்லை யெனவுங் கூறலடாது; சிறப்புக் குணத்தைக் கோடலானே கேட்போர்க்கின்பம் விளையுமாகலான். அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.
மண்ணாலியன்ற வேழத்துடன் வி
ளையாடும் இளைஞர் இன்புற்றாங்கு
கேட்போருஞ் சிறப்புறுங் குணத்
தாலின்புறுகின்றனர்” என்று.
அவ்வப்பெண் விசேடமாகிய என்பது தலைவனைக் கடைக்கணித்தல் முதலியவற்றிற்கும் உபலக்கணம் ஆம்; பெண்ணளவிற்சுவை, தோன்றாதாகலின். நினைவுக்கு விடயமாகிய பெண்டிரும் ஆடவரும் அமைக; அவர்களால் சுவைத்தோற்றம் யாங்ஙனம் உண்டாம்? அச்சுவைக்கும் அவையினர் நிலைக்களனாதல் யாங்ஙனம்? எனில் இஃது ஈண்டு நினைவுறற்பாலது. முதற்கண், இலௌகிகத் தலைவருடைய காதல் முதலியவற்றின் அநுமானத்தால் செம்மையுற்ற மனத்தினராகிய அவையினர் காப்பியம் முதலியவற்றின் சொற்பெருமையால் இராமன் முதலியோரை, பொதுவகையாகத் தம்மைச் சார்ந்தவர் என்னுந்தன்மைபற்றிப் பாவிக்கின்றனர்; பாவிக்கப்பட்ட அவர் அவையினரது மனத்தில் இருந்தாங்கு விளக்கமெய்துகின்றனர். ஆனால், ஆடவரும் பெண்டிரும், “சீதை இராமன் முதலியோரைத் தமக்கு காதலியும் கணவனும் ஆவர்” என்று கூறுதல் தக்கதன்று என்று கூறுமாலெனில், அற்றன்று. அவர் சனகன் தயரதன் இவர்க்கு மக்கள் என்னுஞ் சிறப்பினீக்கத்தால் அவர்கள் ஆண் பெண் மாத்திரையில் அனுவாதஞ் செய்பவரெனக் கூறியமையான். அவ்வாடவரும் பெண்டிரும், இலௌகிகரேயாவர்; அவர், காப்பியம் அவிநயம் இவற்றின் மூலமாக அவையினரால் விபாவம் முதலியவற்றை யுபகரணமாகக் கொண்டு பாவிக்கப்பட்டாராய் அவ்வவையினரின் அந்தக்கரணத்தில் மிக்க உறுதிப்பாட்டுடன் அசையா நிலையிலெதிருருக்கொண்டு அவர்பால் நிலைப் பெய்துகின்றனர். அவ்விபாவம் முதலிய யாவும், ஓவியத்துரக நியாயத்தான் மெய்யுணர்வு பொய்யுணர்வு ஐயவுணர்வு ஒப்புணர்வு என்னும் இவற்றின் வேறுபட்ட நுகர்ச்சி முதலிய இத்தகைய சொற்களுக்கு விடயமாகி வெளிப்படலான் அலௌகிகங்களேயாம். இலௌகிகமாகிய இரதி முதலியனவும் இங்ஙனமே அமைந்து சீரிய ஸ்தாயிபாவங்களாகின்றன. அவையினர் மனத்தில் எதிருருவெய்திய அலௌகிகத் தலைவரால் நிகழும் அலௌகிகச்சுவையும், அவ்வவையினர் மனத்தில் பிரதிவிம்பமெய்திய இரதி முதலிய ஸ்தாயிபாவங்களின் பரிணாமமாகலான் அலௌகிகச் சுவைக்கு அவையினரே நிலைக்களன் என்பது கருத்து. இவ்வலௌகிகச்சுவைக்குப் பிற பற்றுக்கோடும் உண்டெனக்கூறல் இயலாது; அஃதொன்றுமின்மையான்; அங்ஙனம் ஐயுறுவாரை, இங்ஙனம் வினாதல் வேண்டும். சுவைக்குப் பற்றுக்கோடு அநுகாரியனா? அநுகருத்தாவா? என்று. அநுகாரியனாயின், அவன் இறந்தகாலத்தவன் ஆதலின் பற்றுக்கோடாகான்; அநுகருத்தாவாயின், அவன் அவிநயத்தளவின் அமைதலாற் சுவைநிலைக்குத் தக்கவன் அல்லனேயாம்.
அநுகாரியன் — அவிநயப்பொருளாய்நிற்பவன். அநுகருத்தா — அவிநயஞ் செய்யும் நடன்.
[153] வழக்காறு — சுவைக்கலவையில் உறுப்பாகுஞ் சுவைக்குப் பயனெய்தற்குரிய நிலையின்மையான் சுவைத்தன்மையில் வழியும், அவ்வுறுப்புச் சுவையினையும், சுவையென்றே கவிவாணர் வழங்கியிருத்தல் ஆம்.
[154] குணம் அணி யென்னுமிவை விருத்தி இரீதி முதலியவற்றிற்கும் உவலக்கணம் ஆம். காப்பியம் அவிநயம் இவற்றில் முற்படும் அவையினர்க்குச் சுவை தோன்றுங்கால், முதலில் நடன்பால், இராமன் முதலினோரது உணர்ச்சி உறுதி படுகின்றது. பின்னர், அவையினரது மனம், அநுகாரியனது மனம் என்னுமிவ்விரண்டும், ஒன்றுபடுகின்றன. அதன்பின் அவையினரது மனம் ஆடல் பாடல் முதலிய கூத்தியலில் அழுந்துகின்றது; அதன்பின் பிறவுணர்ச்சி சிதைவுறுகின்றது; அப்பொழுது அலௌகிகச்சுவை, யோகிகளேயறியத்தகும் பிரமானந்தத்தை யொத்ததாய் தானே நுகர்ச்சிக்கிடனாகின்றது என்பான். “சுவைத்தன்மையை யெய்தற்குரிய நிலையில் தோன்றும் ஸ்தாயிபாவத்தினங்கள் வேற்றுப் பொருளைப் பற்றிய நினைவை முறையே விலக்கி”, யென்றான் என்க. இங்கட் போதரும் வேறுபாடு, இவ்வளவினதே; பிரமானந்தாநுபவத்தில், பிறவுணர்ச்சி சிறிதும் விளங்குவதன்று; சுவை நுகர்ச்சியிலோவெனில், விபாவம் முதலியவற்றின் உண்ர்ச்சியேயன்றி வேற்றுப்பொருளின் உணர்ச்சியின்றென்ப. விபாவம் முதலியவற்றின் உணர்ச்சியும் சுவைக்கண் உண்டெனில், ஈண்டு அகண்டாநந்த நுகர்ச்சி, யாங்ஙனம் பொருந்துமெனில், கூறுதும்.
“திராட்சை அதிமதுரம் பேரீச்சம்பழம்
கும்மட்டி காசத்தை யொழிக்கும் வாசகம்
என்னுமிவை சமனிடையாகக் கொண்டதும்,
கருப்பூரமணமூட்டப்பட்டதும், தூய்
மையுந் தட்பமும் வாய்க்கப்பெற்றதும்,
பஞ்சசாரம் எனப் பெயரியதுமாகிய பானகம்,
எரிவுநோய் நீர்வேட்கை என்னுமிவற்றைப்
போக்குவதாம்”
என்னுமித்தகைய பலசுவைக்கலவை வடிவாகிய பானக நியாயத்தால் ஈண்டும், விபாவம் முதலியவற்றின் கலவையால் நிகழும் இன்பமும் பிறித்தற்கியலாதாய் அகண்டமாம். ஆனந்தமூலமாகிய உவகைச் சுவை முதலியவற்றில் இன்பநுகர்ச்சி நிகழ்க; துன்பமூலமாகிய அவலச்சுவையில் அவ்வின்பநுகர்ச்சி யாங்ஙனம் கூடும்? என வாசிங்கித்து இந்நுகர்ச்சி வேறுபாடு, அநுகாரியனைப்பற்றியதேயன்றி, அவையினரைப்பற்றியதன்று என்பான், “தலைவன் றலைவியர்க்கு, இன்பத்தையாதல் துன்பத்தையாதல் உறுதிப்படுத்துவனவாமெனினும் அவையினர்பால் எல்லையில் இன்பவடிவாய்”, என்றான். ஈண்டுத் தலைவன் றலைவியர் என்றது அநுகாரியர்களை. இஃது இன்பவடிவாயின் அவலச்சுவை நிரம்பிய காப்பியத்தைச் செவிக்கொள்ளுங்கால் அவையினர்க்குக் கண்னீர் அரும்புதல் எது காரணம் பற்றியோ எனில், அது குற்றமன்று; கலவிக்காலத்தில் இதழ்க்கடியாற் பெண்டிர்க்குண்டாகுந் துன்பமும் பொய்யெனத் தோன்றியவர்க்கு இன்பமே விளைத்தூங்கு ஈண்டும் அறியற்பாலது; இன்பத்திலும் துன்பத்தையுபசரித்துக் கூறல் குட்டமிதம் என முன்னர்க் கூறியது ஈண்டு நினைவுறற்பாலது. காப்பியத்திற்கு, இயல்பான துன்பவடிவுடைமை யமையுமேல், அக்காப்பியத்தை யறிதற்கு ஒருவனும் ஒருப்படான். அதனால் அவலச்சிறப்புடைய இராமாயணம் முதலிய காப்பியங்களுக்குக் கேடு விளைந்திருக்கும். ஆதலான் அவலச்சுவையும் பிறசுவைகளை யொப்ப, இன்பந் தருவதொன்றாம். சுவை நுகர்ச்சியில் வேறுபாடு இன்மையால் அச்சுவையை ஒன்பது படித்தாகக் கூறுபடுத்தல் எற்றிற்கோ எனில்? உண்மையே; பிரமானந்தம் ஒன்றேயாயினும் மதிமணிப் படிகளொவ்வொன்றினும் எதிருருப்பட்ட மதிமண்டிலம் பலபடத் தோன்றியாங்கு அப்பிரமானந்தத்திற்கு உபாதி பேதத்தாற் பலதிறப்பட்ட தன்மையைக் கற்பித்தல் போலச் சுவை, உண்மையில் ஒன்றேயாயினும் அதனைத் தோற்றுவிக்கும் விபாவம் முதலியவற்றின் வேறுபாட்டினால் அது பலதிறப்பட்டதாம் என அறியற்பாலது.
[155] இத்தகைய சுவை காப்பியம் முதலியவற்றில் எக்காரணத்தால் தோன்றுகின்றது என்று ஆசங்கித்துக் கூறுகின்றார். “சுவை, வாக்கியப் பொருள்” என்று. கவிச்செயல் முடிவுறுங்கால் சுவையே சிறந்து நிற்பதாகலின் என்பது கருத்து. அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.
“கவியின் விருப்பம், எதற்குச் சிறப்பைக்
கற்பிக்கின்றதோ, அது வாக்கியப் பொருள்
என்று அறிஞர் துணிந்திருக்கின்றனர்”, என்று.
பதப்பொருளின் இயைபு வடிவாகிய வாக்கியப் பொருளுக்கு வாச்சியத்தன்மையும் இலட்சியத்தன்மையும் அமைவதையொப்ப இச்சுவைக்கு அவையமையா; இங்கண் அபிதாவிருத்திக்கும் இலக்கணாவிருத்திக்கும் இடன் இன்மையான். கருத்துப்பொருள் (****) குறிப்பினுள் (****) அடங்குமெனக் காப்பியவியலிற் கூறப்பட்டுள்ளது; அதனால் இங்கட் கூறிய வாக்கியப்பொருள் வியங்கியமென்றே யறியற்பாலது; சுவைக்கு வியஞ்சங்களாகிய விபாவம் முதலியன பதப்பொருள்களாம். இவற்றிற்கு அவ்வவ்வாக்கியங்களைப் பற்றி வாக்கியப் பொருட்டன்மை உள்ளது. அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.
“ஸ்தாயீபாவம், சாத்துவிகபாவம் வியபிசா
ரிபாவம் என்னுமிவை ஒரோவழி அவ்வவ்
வாக்கியங்களைப் பற்றி வாக்கியப்
பொருட்டன்மையை யெய்துகின்றன” என்று.
இங்ஙனங் கூறப்படினும் விபாவம் முதலியன, சுவையினுளடங்கித் தொழிற்படுதலால், அவற்றைக் குறித்து அவை பதப்பொருள் என வழங்கப்படுகின்றன; இதனால் சுவை, பதப்பொருள் நிலைய ஸ்தாயீபாவம் முதலியவற்றின் நிகழ்ச்சிக்குப் பின்னர் தோற்றமெய்தலான், அது வாக்கியப்பொருள் நிலையதாம்; என்பது துணியப்பட்டதாம்.
வியஞ்சனம் துவனி சருவணம் சமத்காரம் முதலிய சொற்களாற் கூறற்குரிய சுவையினைப்பற்றிய ஞானவிசேடத்திற்கு, காரகத்தன்மை ஞாபகத்தன்மை யென்னுமிவற்றின்வேறுபட்ட நிலையில் விபாவம் முதலியன உதவியாகின்றன வென்பான் உரிய ஓய்வினையெய்துகின்றன என்றான். அங்ஙனமே உலோசனத்திலுங் கூறப்பட்டுள்ளது.
“விபாவம் முதலியன, சுவையில் காரகங்களும்
ஞாபகங்களும் ஆகா; ஆனால் நுகர்ச்சிக்கு
அவை கருவியாம்” என்று.
அதனால் இச்சுவை, இலௌகிகம் ஆம் என்பது கருத்து.
ஸ்தாயிபாவங்களே முளைத்தல் தளர்த்தல் அரும்பல் என்னும் முறைபற்றி வளர்தருகின்றன என்பான் “முறையே வளரப்பெற்று” என்றான் என்க.
பின்னரே — விபாவம் முதலியன எதிர்ப்பட்ட பின்னர் என்பதாம்; இதனால் வியங்கியமாகிய சுவைக்கும் வியஞ்சகங்களாகிய விபாவம் முதலியவற்றிற்கும் நிகழ்ச்சியைப் பற்றிய முறைமையுண்டென்பதாம்; ஆனால் தாமரையின் இதழ் நூறில் ஊசிபாய்த்தென்ன அம்முறைமை காண்டற்கரியதென்பது புலப்படுத்தவாறு. நினைவுக்கு ஏதுவாகுமளவில் அமைந்து கிடந்த ஸ்தாயிபாவங்கள், விபாவம் முதலியவற்றின் வலியாற் சுவையாகப் பரிணமித்து சுவையென்னுஞ் சொல்லாற் கூறப்படுகின்றனவென்பான் “சுவைத்தன்மையை யெய்துகின்றன” என்றான் என்க. இதுபற்றி பஞ்சி நூல் படமாதலை யெடுத்துக்காட்டினான். அங்ஙனமே பெரியாருங் கூறியுள்ளார்.
“பஞ்சிநூல், வேமம் தறியிவற்றின்
செயலோடியைந்து படமாகப் பரிணமித்
துப்படமெனுஞ் சொற்குப் பொருளா த
லொப்ப, ஸ்தாயிபாவங்களும் விபா
வம் முதலியவற்றோடியைந்து அவை
சுவையாகப் பரிணமித்து சுவை
யென்னுஞ் சொற்குப் பொருளாகின்றன” என்று.
[156] சுவையினை வளர்க்கும் குறிப்புகளின் (****) நிலைமையைக் கூறுவான் போந்து, சுவையறிவு நிலைபடற்பொருட்டு முன்னர்க்கூறிய சுவை நிலையத்தையே மீண்டும் நினைவுறுத்துகின்றார்.
விளக்கமிக்க — விபாவம் அநுபாவம் சாத்துவிகம் என்னுமிவற்றான் இரதி முதலிய ஸ்தாயிபாவங்கள் வளமிக்கவாயின என்பது கருத்து. அவையினர்பாலும் — இவ்வலௌகிகச்சுவை அவையினரைப் பற்றியதேயன்றி அநுகாரியனைப்பற்றியதன்று என்று சார தா தாநயருங் கூறுப.
“காப்பியத்தின் செயலானும் அதன் அவிநயத்
தானும் சுவைத்தன்மையை அடைவிக்கப்
படும் ஸ்தாயிபாவம், நுகர்ச்சிக்குரிய
தாகின்றது; அச்சுவைக்கு நிலைக்களன்
அவையினரென்றே கூறப்படுகின்றது.
சுவை, நிகழ்காலத்தாதலானும், அநு
காரியராகிய இராமன் முதலியோர்
இறந்தகாலத்தவராதலானும் அவ்வ
நுகாரியருக்கு நிகழ்ச்சியின் றென்
பதாம்; கவிவாணர் கடந்த அநுகாரி
யரைப்பற்றிய இலௌகிகச்சுவை
யை உய்த்துணர்ந்து காப்பியத்தை
யாத்தனராதலின் அதன் வாயிலாக
நிகழுஞ்ச சுவை, அவையினரைப்பற்றி
நிற்பதாம்” என்று.
இது பற்றியன்றே யிந்நூலாசிரியரும், “சுவை உலகில் அநுகாரியர்பாலும் கூத்தில் அவையினர்பாலும் நிலைபெறுவதேயாம்” எனத் தேற்றத்தாற் கூறினர் என்க.
அவையினர்க்குச் சுவை நிலைக்களனாந்தன்மை, ஏறிட்டுக் கூறப்பட்டதேயன்றிச் சிறப்பு வகையான் அன்று; என்பாருமுளர்; அங்ஙனமே நாகரிசூரியென்னும் பேராசிரியரும்,
சுவை, அவையினர்பால் நீக்கமின்றிப்பற்றிநிற்குந்தன்மையது எனக் கொண்டு அஃது லௌகிகம் என்று கூறப்பட்டது. உண்மையுணரப்புகின், நிறைவுற்றதும் எல்லையிலோரின்ப வடிவுற்றதும் ஈச்சுரபரியாயமும் ஆகிய சுவைக்கு, உரிய இடனைப் பற்றியவாராய்ச்சி நிகழ்வதியாங்ஙனம்? அங்ஙனமாயின் சச்சிதானந்த வடிவாகிய பிரமத்திலும் அவ்வாராய்ச்சி நிகழுமன்றே? என்னும் ஆராய்ச்சிவல்லுனராகிய முன்னையாசிரியர் நிலைக்களனின்றி நிலவுமிச்சுவை விபாவம் முதலியவற்றானே வெளிப்பட்டு அவையினரானே நுகரப்படுகின்றது; எனக் கருதி, யோகமாத்திரையிலெய்தற்குரிய வீச்சுரனை அவ்யோகி மனத்திலிருப்பவன் எனக் கூறும் வழக்காறென்ன சுவைக்கு அவையினரைப் பற்றி நிற்குந் தன்மையை ஒருப்படுகின்றனர்; என்றிவை முதலிய வுத்திகளான் விளக்கியுள்ளார்; அதனால் சுவைக்கு நிலைக்களன் இன்றென்பது துணியப்பட்டதாமாகலின், இச்சுவை பிரமானந்தமேயாமென்பது போதரும்.
இவ்விரண்டற்கும் உள்ள வேறுபாடு இவ்வளவினதே; பிரமானந்தம் யோகத்தாலெய்தற்குரியது; சுவை, விபாவம் முதலியவற்றை யிடையறவின்றிச் சிந்தித்தலாலெய்தற்குரியது என்பதாம். இதுவும் அவராலேயே கூறப்பட்டுள்ளது.
“யாண்டும் ஒருபடித்தாகிய இன்பவிளக்கம் இலௌகிகமாகிய சுகம் என்று வழங்கப்படுகின்றது; அஃது அலௌகிகங்களாகிய விபாவம் முதலியவற்றின் விளக்கத்தாற் கவிசமயமாத்திரையிற் சிறப்புறுதலைப் பின்பற்றி அலௌகிகச்சுவையெனக் கூறப்படுகின்றது. தூய்மையாகிய பல்வகை நல்வினைகளான் மாசற்றமனத்தினரும், சமம் தமம் முதலிய சாதனங்கணிறைந்தாரும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னுமிவற்றிற் பற்றுடையாருமாகிய சீரிய யோகிகள்பால், நிருவிகற்பசமாதியின் விளக்கத்தாற் பிரமமென்றும் பரமான்மாவென்றும் ஈச்சுரன் என்றும் சொல்லப்படுகின்றது” என்று.